Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Wednesday, May 11, 2011

சோதிடப்பலன்களின் உண்மை நிலை


                              குருப்பெயர்ச்சி,ராகு,கேது பெயர்ச்சி,சனிப்பெயர்ச்சி என்று ஏராளமான புத்த்கங்கள் பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.என்னை ஒருவர் கேட்டார்,எனக்கும் என் மச்சானுக்கும் ஒரே ராசி.போன மாதம் அவனுக்கு காலில் அடிபட்ட்து.எனக்கு அடிபடவில்லை.ஒரே ராசி உள்ளவர்களுக்கு பொதுவாக சொல்லும் பலன்கள் பொருந்துமா?

                              மேற்கண்ட பெயர்ச்சிகள் கோச்சாரம் என்று சொல்வார்கள்.சந்திரன் இருக்கும் ராசியை வைத்து கணிக்கப்படுபவை.ஒவ்வொருவருக்கும் பிறந்த ஜாதகம் இருக்கிறது.தசா,புக்தி இருக்கிறது.இதையெல்லாம் ஆராய்ந்துதான் முடிவு செய்ய வேண்டும்.மனதுக்கும்,உடலுக்கும் பார்க்க வேண்டியவை.

                               வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் பிறந்த கால ஜாதகத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பதே ஜோதிடம்.காலண்டர்களில் கூட சந்திராஷ்டம்ம் என்று போட்டிருப்பார்கள்.சந்திரன் எட்டாம் இட்த்தில் உள்ள போது நல்ல,முக்கியமான காரியங்களை செய்யவேண்டாம் என்றும் வீண் விவாதங்கள் செய்யக்கூடாது என்றும் பலன் உண்டு.

                                என் நண்பன் ஒருவன் இன்று என் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம்ம் என்று போட்டிருந்த்து.நானும் ஆனால் ஆகட்டும் என்று இந்த வேலையை ஆரம்பித்தேன்.ஆனால் சிறப்பாக முடிந்த்து.ரொம்ப மகிழ்ச்சி என்றான்.இதற்கு ஜோதிட்த்தின் பதில்,சந்திரன் எட்டாமிட்த்தில் இருந்தாலும் அந்த வீட்டுக்கு அதிபதி ஆட்சி,உச்சம் பெற்றிருந்தால் அன்றைய தினம் சிறப்பாக இருக்கவே வாய்ப்புண்டு.

                               என் கிராமத்தில் மிக வறுமையில் இருந்து பெரும் தொழிலதிபராக வளர்ந்து நிற்கும் ஒருவர்.என்னை விட இளையவன்.நல்ல உழைப்பாளி.தவறாகவே ஜாதகம் கணிக்கப்பட்டு அதையே வைத்து பரிகாரம் முதல் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தான்.

                         சரியான நேரம் மிக முக்கியம்.உதாரணமாக பத்தாம் தேதி இரவு ஒரு மணிக்கு என்றே பலரும் சொல்வார்கள்.கம்பியூட்டரில் உள்ள மென்பொருட்களில் அது 11 ஆம் தேதிக்கு கணக்கிட வேண்டும்.தவிர பஞ்சாங்கங்களில் வேறுபாடு உண்டு.வாக்கியம்,திருக்கணிதம் என்று இரண்டுக்கும் கிரக பெயர்ச்சிகளும் மாறுபடும்.

                                வேத காலங்களில் இருந்து மக்களின் பெருவாரியான நம்பிக்கையை பெற்ற ஒன்று ஜோதிடம்.முந்தைய வாழ்க்கை நிகழ்வுகளை அலசிப்பார்த்து,அதிகம் உழைத்தும் சரியான பலன்களை கண்டறிவது சிரம்மான ஒன்று. பிறந்த நேரத்தில் சில நிமிடங்களை மாற்றி சொன்னால் கூட முற்றிலும் மாறிப்போய் விடும்.

                                குறிப்பிட்ட ராசிக்கு கெடுதல் உண்டாகும் என்று இருந்தால் உங்களுக்கு கெடுதல் உண்டாகும் என்ற நிச்சயம் எதுவும் இல்லை.பயப்படவும் தேவையில்லை.நம்பிக்கை இருப்பவர்கள் பரிகாரங்களை செய்யலாம்.

-

Tuesday, November 2, 2010

குருப்பெயர்ச்சி முக்கியமானதா?

ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி வந்துகொண்டே இருக்கிறது.விதம்விதமாக பலன் சொல்லும் புத்தகங்கள் வெளியிடப்பட்டு விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.இப்போதும் குரு பெயர்ச்சியாகிறார்.மீனத்திலிருந்து வக்ரகதியாக கும்பத்துக்கு வந்த குரு பகவான் மீண்டும் மீனத்திற்கு செல்கிறார்.அங்கே மே மாதம் முதல் வாரம் வரை இருப்பார்.கடந்த மே மாதத்திலிருந்தே மீனத்தில்தான் இருந்தார்.இப்போது மீண்டும் முந்தைய இடத்துக்கே செல்லும்போது பலன்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்பது உண்மையா?
சுபர்களில் வலிமையான குரு
நவகிரகங்களில் வலிமையையும்,சுபபலன்களை தருவதில் பேராற்றலும் பெற்றவர் குரு.புகழுடன் பெருமைப்படத்தக்க வாழ்வு குருவின் பலமின்றி அமையாது.அவர் இருக்கும் ஸ்தானமும் பார்வைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.தனது சொந்த வீட்டில் இருக்கும்போது அவருக்கு வலிமை அதிகமாவதோடு பலன்களும் வலிமையாகவே இருக்கும்.ஆனால் குரு மட்டுமின்றி அனைத்து கிரகங்களும் தங்களது பணியை செய்துகொண்டுதான் இருக்கும்.செவ்வாய்,சுக்கிரன்,சூரியன் ஆகியோர் இருக்குமிடத்தின் பலன்களுக்கு ஏற்றவாறு சுபபலன்கள் கூடவோ குறையவோ செய்யும்.குரு மீனத்தில் இருக்கும் காலம் முழுதும் சனி கன்னியில்தான் இருக்கிறார்.எனவே அடுத்து வரும் நான்கைந்து மாதங்கள் கடந்த மே மாதத்தில் இருந்து நீங்கள் அனுபவித்து வரும் பலன்களில் பேரளவு மாற்றங்கள் இருக்குமா என்பதை உங்கள் ஜனன கால ஜாதகம்தான் முடிவு செய்யவேண்டும்.
கோச்சாரமும் ஜனன ஜாதகமும்
நவகிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம்பெயர்வது கோச்சாரம் எனப்படும்.சூரியன் ஓராண்டுகாலத்திற்கு பன்னிரண்டு ராசிகளை கடக்கிறார்.ஜனன கால ஜாதகத்தில் சூரியன் ஆட்சி ,உச்சம் பெற்றோ,கேந்திர,திரிகோணங்களில் நற்சாரம் பெற்று அமைந்தால் கோச்சாரத்தில் சூரியன் மாறுவது பற்றி அதிகம் கவலைப்படத்தேவையில்லை.திருமணத்திற்கு குருபலன் வேண்டும் என்பார்கள்.எனது நண்பன் ஒருவனுக்கு ஏழரை சனி, குரு பனிரெண்டில் இருக்கும்போது திருமணம் நடந்தது.அனுபவத்தில் கோச்சாரம் சந்திரனை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.எனவே,கோச்சார கிரக பெயர்ச்சிகளை மனதுக்கும் ,உடலுக்கும் தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.உதாரணமாக,எனது நண்பனின் திருமணத்தை ஜனனகால ஜாதகம் முடிவு செய்ய,கோச்சாரத்தில் குருவும்,சனியும் பல சங்கடங்களை உருவாக்கினார்கள்.வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் ஜனன கால ஜாதகப்படி நடக்கும்.
கவலை வேண்டாம்
குரு 2,5,7,9,11, ஆகிய இடங்களில் நற்பலன் தருவார்.நான்கு,பத்தாம் இடங்களில்மத்திம பலன் தருவார்.மற்றவர்களும் குருப்பெயர்ச்சி பற்றிய அதிக கவலை வேண்டாம். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரங்கள் செய்யலாம். குருவை வழிபடலாம்.குலதெய்வத்தை வணங்கலாம்.குரு உங்களை கைவிடமாட்டார்.கவலையின்றி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
இத இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் -