Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Saturday, September 3, 2011

பூனை குறுக்கே போனால் நல்லதா? கெட்டதா?


நம்பிக்கைகள் தான் நமக்கு கஷ்ட்த்தை கொண்டுவருகிறது.அது மூட நம்பிக்கையாக இருக்கலாம்.போதுமான அறிவைப் பெறாமல் நாமே உருவாக்கிக் கொள்ளும் தவறான நம்பிக்கையாக இருக்கலாம்.கலக்கம்,பயம்,காம்ம் போன்ற எதிர் உணர்ச்சிகள் மிகும் நேரங்களில் நம்மிடையே உருவாகும் எண்ணங்கள் அவை சார்ந்த நம்பிக்கைகள் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.உண்மையில் நடக்கும் நிகழ்ச்சிகளை விட அதைப் பற்றிய நமது எண்ணங்கள் நமக்கு பெரும் துன்பத்தை தருகிறது.

                        திருச்சியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காக வாடகை காரில் பயணத்தை தொடங்கினோம்.இரவு முழுக்க பயணம்.காரை பாபு என்ற டிரைவர் ஓட்டி வந்தார்.பழகுவதற்கு இனிமையாகவும்,கலகலப்பாகவும் இருந்தார்.அரசியல் நையாண்டி,கொஞ்சம் நகைச்சுவை என்று இனிமையான பயணம்.

                        சேலத்தை தாண்டி அரை மணி நேரம் சென்றிருக்கும்.இரவு பன்னிரெண்டு மணிக்கு மேலாகிவிட்ட்து.திடீரென்று ஒரு பூனை காருக்கு குறுக்கே ஓடியது.டிரைவர் வண்டியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றார்.பூனை அடிபடும் சத்தம் எங்களுக்கு தெளிவாக கேட்ட்து.உடனே டிரைவர் காரை நிறுத்தி விட்டார்.அடிபட்ட இட்த்தை நோக்கி ஓடினார்.நாங்களும் உடன் சென்றோம்.

                        ஆறு பேர் நாங்கள்.எங்களுடைய அனைத்து செல்போன்களின் வெளிச்சத்தில் பூனை கண்ணை மூடிமூடி திறந்த்து.உயிருடன் இருப்பது எங்களுக்கு நிம்மதியாக இருந்த்து.வலியும் இருக்க்க் கூடும்.எந்தளவு அடிபட்டிருக்கும் என்பது கணிக்க முடியவில்லை.டிரைவர் காருக்கு ஓடிச்சென்று குடிநீர் இருந்த பாட்டிலை எடுத்து வந்தார்.பூனை வாயில் ஊற்றினார்.தடவிக்கொடுத்தார்.அங்கிருந்து கிளம்பினோம்.டிரைவர் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தார்.

                        அந்த  சகோதர்ரிடம் இருந்த கலகலப்பு,நகைச்சுவை எல்லாம் முற்றிலும் காணாமல் போயிருந்த்து.எங்களில் ஒருவர் பூனை வலமிருந்து இடம் போனால் நல்லதுதான் என்றார்.பூனைக்கு நல்லதாக இருக்கவில்லையே என்றேன்.காரின் வேகம் மிகவும் குறைந்துபோயிருந்த்து.நாமக்கல் தாண்டிப்போனால் சாலையும் மிக மோசம்.

                     காலையில் எதிர்பார்த்த்தைவிட மிக தாமதமாகவே திருச்சியை அடைந்தோம்.டிரைவர் வீட்டுக்கு போன் செய்து மனைவியையும்,குழந்தைகளையும் விசாரித்தார்.குழந்தைகளை எழுப்ப சொல்லி பேசினார்.அவர் சரியாக சாப்பிடவுமில்லை.சோர்வாகவே காணப்பட்டார்.

                     எங்களுடைய நிகழ்ச்சிகள் நன்றாகவே முடிந்த்து.ஊருக்கு திரும்பினோம்.என்னுடன் வந்தவர்கள் தூங்க ஆரம்பித்தார்கள்.எப்போது இருப்பிட்த்தை அடைவோம் என்று இருந்த்து.சில மணி நேரங்களில் வந்து சேர்ந்து விட்டோம்.காரிலிருந்து இறங்கியவுடன் டிரைவருக்கு நன்றி கூறினேன்.அவர் முகத்தில் புன்னகை. எனக்கு நிம்மதி.(சற்றே மாற்றம் செய்யப்பட்ட மீள்பதிவு)
-