Showing posts with label over weight. Show all posts
Showing posts with label over weight. Show all posts

Thursday, May 19, 2011

சரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி?-இரண்டு.

முந்தைய பதிவு படிக்காதவர்கள் கீழே கிளிக் செய்து படிக்கவும்.
                           சரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி?-1
                                                                            உங்கள் உடல் பருமனை கணக்கிடுங்கள்.உங்கள் எடையை உயரத்தின் மீட்ட்ர் ஸ்கொயரால் வகுத்தால் பருமன் (body mass index) கிடைக்கும்.உதாரணமாக உங்கள் எடை 50 கிலோ,உயரம் 1.5மீ என்று வைத்துக்கொள்வோம்.50/1.5*1.5.என்று கணக்கிட்டால் BMI-22.


                                                       .22  முதல் 26 வரை இருந்தால் சரி.அதிகமாக இருந்தால் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள்.தேவைப்படும் கலோரியை விட குறைவாக உண்ண வேண்டும்.அதே சமயம் உடலுக்கு அன்றாட தேவையான உயிர்ச்ச்த்துக்கள் மற்றும் தாதுக்கள் (vitamins and Minerals) கிடைக்கவேண்டும்.


                      சாதம் ,சப்பாத்தி,தோசை,இட்லி போன்ற உணவு வகைகளை குறைத்துக்கொண்டு பழங்கள் ,கீரை,காய்கறிகள் அதிகம் சேர்க்கவேண்டும்.இவற்றில் மேற்குறிப்பிட்ட சத்துக்கள் கிடைக்கும்.உடற் பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும்.ஒவ்வொருவருக்கும் தேவையான அளவு தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

                              22க்கும் கீழ் இருப்பவர்கள் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் மிதமான வகையில் இவை அதிகரிக்க வேண்டும்.அதிகம் உண்பதே பழக்கமாகி சாப்பிடாமல் இருக்க முடியாத நிலை ஏற்படக்கூடாது.அதிக கலோரி உள்ள உணவுகளை சேர்க்க வேண்டும்.


                              குழந்தைகளுக்கு சிறுவயது முதலே எதை சொல்லித்தருகிறோமோ இல்லையோ உடல் நலம் பேணுவது குறித்து கற்பிப்பது நல்லது.சிறு வயது பழக்கம் என்பது நீடித்து இருக்க கூடியது.வாழ்நாள் முழுக்க அவர்களூக்கு உதவும்.

                              சில ஆண்டுகளுக்கு முன்பு யுனிசெஃப் நிறுவனம் மூலமாக அயோடின் உப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தினார்கள்.பள்ளிக் குழந்தைகளை வீட்டிலிருந்து உப்பு எடுத்துவரச்செய்து ஸ்டார்ச் விட்டு யாருடைய வீட்டு உப்பில் அயோடின் இருக்கிறது ,யாருடையதில் இல்லை என்று காட்டினார்கள்.கூடவே அதன் அவசியமும் தெரிவிக்கப்பட்ட்து.


                                குழந்தைகள் அன்றிலிருந்து கடையில் அவர்களாகவே போய் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.பெற்றோருக்கு குழந்தைகள் விவரித்தார்கள்.சில தின்ங்களிலேயே சாதாரண உப்புக்கு பதிலாக அயோடின் கலந்த உப்பு அனைத்து கிராமங்களிலும் விற்பனைக்கு வந்து விட்ட்து.குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விழிப்புணர்விற்கும்,பழக்கத்திற்கும் பலன் அதிகம்.
-

Tuesday, May 17, 2011

சரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி?

                           நமது உயரத்திற்கேற்ப சரியான உடல் எடையை கொண்டிருக்க வேண்டும்.கிட்ட்த்தட்ட ஆரோக்கியம் என்பது இதுதான்.அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம்.வந்து விட்ட நோயை கட்டுப்படுத்தவும்,வராமல் தடுக்கவும் சரியான உடல் எடையை பராமரிப்பது அவசியம்.

                           அதிக எடை இருப்பதும் பருமனாக இருப்பதுமே பல்வேறு நோய்களுக்கு வழிவகுத்து விடுகின்றன.இதயம் தொடர்பான நலக்கேடுகள்,ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,சுவாச கோளாறுகள்,மூட்டுவலி உள்ளிட்ட உடல் வலிகள்,சில வகை புற்று உள்பட அதிக எடை ஏற்படுத்தும் நோய்கள்.

                           மிக்க் குறைவான் எடை என்பது போதுமான அளவு உணவு எடுக்காத்தால் ஏற்படுவது.டயட் இருக்கிறேன் பேர்வழி என்றும்,பருமன் ஆகிவிடுவோம் என்ற பயத்தாலும் அல்லது உணவுக்குறைவாலும் இது உண்டாகிறது.இதனால் போதுமான அளவு சத்துக்கள் கிடைக்காத்தால் உடல் இயக்கத்தில் கோளாறுகளூம் ,சத்துக்குறைபாடு நோய்களும் உருவாகும்.

                           இரண்டுமே நல்லதல்ல! ஒவ்வொருவர் உயரத்திற்கேற்பவும் சரியான் எடையை பெற்றிருப்பதே நல்லது.இது மனதளவிலும் சிறந்த விளைவுகளை ஏற்படுத்துகிறது.உங்களைப்ப்ற்றியே உங்களுக்கு நல்ல உணர்வையும்,ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கும்.

                           உடல் பருமன் என்பது உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினையே!உங்களுக்கு தெரிந்த்துபோல கொழுப்பு உடலில் அதிகம் இருப்பதுதான் எடை கூடி,பருமனாக காரணம்.சுற்றுச்சூழல்,குடும்பம்,பழக்கங்கள்,பரம்பரை,வாழ்க்கைமுறை போன்றவை சரியான அளவு எடையை பராமரித்தலில் உள்ள காரணிகள்.

                           கொஞ்சம் முயற்சி செய்தால் சரியான எடைக்கு உடலை கொண்டுவருவதும்,நோய்களில் இருந்து தப்புவதும் முடியக்கூடிய காரியம்தான்.ஏற்கனவே உங்களுக்கேற்ப கலோரிகளைக் கணக்கிட்டு உண்பது எப்படி? என்ற பதிவில் உள்ளவையும் உங்களுக்கு உதவும்.

                            இப்போது சரியான எடை இருப்பவர்கள் தங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்றவாறு கலோரிகளை உண்ண வேண்டும்.அன்றைய உழைப்புக்கு சரியாக போகும் வரையில் நீங்கள் சாப்பிட்டால் கணக்கு சரியாகப்போய்விட்ட்து.அதிக எடை உள்ளவர்கள் கலோரிகளை குறைத்து உண்ணவேண்டும்.சுமார் தினமும் 500 கலோரி வரை குறைக்கலாம்.உடற்பயிற்சி போன்றவற்றை அதிகரிக்கலாம்.

                            எடை குறைவாக உள்ளவர்கள் அன்றைய உடல் உழைப்பைவிடவும் அதிக அளவு கலோரிகளை உண்ண வேண்டும்.2000 கலோரி போதுமென்றால் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம்.உணவில் கவனம் செலுத்தினாலே போதும்.சரியான உடல் எடையை பெறமுடியும். மேலும் சில தகவல்கள் அடுத்த பதிவில்..
-