Showing posts with label sexual harassment for men. Show all posts
Showing posts with label sexual harassment for men. Show all posts

Monday, April 11, 2011

பாலியல் தொல்லையை எதிர்கொண்ட ஆண்-நேர்காணல் தொடர்ச்சி

நண்பர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்?

                                நண்பர்கள் என்னை ரொம்பவே சங்கடப்பட வைத்தார்கள்.அதில் ஒரு நண்பன் இரண்டாண்டுகளாக மிக நெருக்கம்.கிட்ட்த்தட்ட குடும்ப நண்பர்.இரண்டு குடும்பங்களிலும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்போம்.அவனும் மாறிப்போனான்.அந்த பெண் அடிக்கடி அவனை அழைத்து பேச ஆரம்பித்தார்.இருவரும் ஜோக்கடித்து சிரித்துக் கொண்டார்கள்.

நீங்கள் அப்பெண்ணின் செயல்பற்றி நண்பனிடம் பேசியிருக்கலாமே?

                                அது சரியாக இருக்காது.அந்த பெண்ணின் இமேஜ் பாதிக்கப்படும் என்பது இருந்தாலும் எந்த ஆணும் இதை நம்புவது கஷ்டம்.ஏற இறங்க பார்ப்பார்கள்.



ஏன் ஏற இறங்க பார்க்கவேண்டும்?

                                 வழக்கமாக பெண்கள் இப்படி இருப்பதில்லை.இது ஏதோ அபூர்வமாக நடக்கும் ஒரு விஷயம்.அவர்கள் இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று.பெண்கள் வேலைக்கு வந்தால் அவர்கள் வேலையை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டிருப்பார்கள்.அல்லது அவர்களுக்கு நேரும் தொல்லையை சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும்.அதனால் எந்த ஆணும் இதைச்சொன்னால்  “அடேயப்பாஎன்பார்கள்.

நண்பர்கள் மாறிப்போக என்ன காரணம்?

                               பொதுவாக ஒரு பெண் நன்றாக பேசினாலே பலர் சந்தோஷமாகிவிடுவார்கள்.இது வாலிப வயதின் மனோநிலையும்கூட! எதிர்பாலினர் அங்கீகாரம் என்று சொல்வோம்.பெண் அவனை மிகவும் மதிக்கும்போது நண்பர்கள் இரண்டாம் பட்சம்தான்.நண்பன் போலவே காட்டிக்கொண்டு மறைமுகமாக என்னுடைய திட்டங்கள், கருத்துக்கள் எல்லாமும் அந்த பெண்ணிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.நான் பேசுவதை குறைத்துக்கொண்டேன்.


பெண் ஊழியர்கள் இல்லையா?

                              பெண்கள் உணர்வுபூர்வமாக இன்னொரு பெண்ணை சார்ந்தே இருப்பார்கள்.ஓரளவு அவர்களுக்கு விஷயம் தெரிந்திருந்தாலும் எனக்கு ஆதரவாக பேசுவது கஷ்டம்.அதை வேறுமாதிரி கொண்டுசெல்வார்கள்.உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவே இருப்பதுபோல் பட்ட்து.

அந்த பெண் உங்களுடன் பேசுவதேயில்லையா?

                               கிட்ட்த்தட்ட இல்லை.அவருடைய வேலையை மற்றவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். நான் அருகில் இருக்க நேரும்போது செல்போனை காதில் வைத்துக்கொண்டு காதலனுடன் பேசும் தோரணையில் பேசிக் கொண்டிருப்பார்.என் அருகில் உள்ளவரிடம் வந்து மணிக்கணக்கில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்.


வேறு என்ன மாதிரி பிரச்சினைகள்?

                               எனக்கு முக்கியத்துவம் போய்விட்ட்து.ஒழுங்காக சிரத்தையுடன் வேலை செய்பவன் நான்.ஆனால் எல்லா ஆலோசனைகளுக்கும் உபயோகம் இல்லாத ஒருவரை அழைத்தார்கள்.சுத்தமான அரசியல்.நான் நல்லவற்றை சொன்னால்கூட காதுகொடுக்க ஆட்கள் இல்லை.தலைமை அலுவலகத்துக்கு போகவேண்டும் என்றால் யார் போவது என்பதை அந்த பெண் முடிவுசெய்தார்.நான் போய்க்கொண்டிருந்தேன்.அதுவும் என் நண்பர் வந்து கேட்பார்,அவர் போகிறாராமே?என்னுடைய கருத்தை கேட்டுவிட்டு போய் அந்த பெண்ணிடம் சொல்வார்கள்.என்னை வெறுப்பேற்றிவிட்ட்தாக அனைவரும் சேர்ந்து சிரிப்பார்கள்.

நீங்கள் தனிமைப்படுத்தப் பட்டீர்கள் இல்லையா?

                               மோசமான மனநிலைக்கு வந்துவிட்டேன்.வேலையை விட்டுவிடலாமென்று தோன்றியது.யாருடனும் பேசப் பிடிக்கவில்லை.என்னை ஒதுக்குவதுபோல உணர்ந்தேன்.வேறு இட்த்திற்கு மாற்றல் கேட்டேன்.அதை தடுக்க முயற்சிகள் நடந்தன.என் முகத்தை பார்த்த என் அதிகாரி நான் உனக்கு மாற்றல் தருகிறேன் என்றார்.

-

Saturday, April 9, 2011

பாலியல் தொல்லையை எதிர்கொண்ட ஆண்-நேர்காணல்


                              பெண்களுக்கு பணியிடங்களில் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து ஒரு பதிவை நான் பதிவெழுத வந்த தொடக்கத்தில் எழுதினேன்.அதைப் படித்த நண்பன் ஒருவனிடம் இருந்து இ-மெயில் வந்திருந்த்து.அன்று முழுக்க என் போன் தூங்கிக் கொண்டிருந்த்து.மெயிலை பார்த்துவிட்டு போன் செய்தேன்.என்னுடைய விஷயத்தை எழுதுவதுதானேஎன்றான்.

                             பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா? என்ற பதிவு அடுத்து வந்த்து.பெண்களைப் போல் அல்ல! இது கொஞ்சம் அபூர்வமானது.அதை உணர்வதற்கும்,எதிர்கொள்வதற்கும் சிறப்பான ஆளுமை தேவைப்படும்.பதிவில் விளக்கமாகவே எழுதியிருக்கிறேன்.


                               நண்பன் நல்ல படிப்பாளி.எனக்கு சிறுவயதிலேயே கோமல் சுவாமிநாதனின் “சுபமங்களாஇதழை படிக்கச் சொன்னது அவன் தான்.எனக்கு இலக்கிய அறிமுகம் ஏற்பட காரணமாக அமைந்தவன் அவனே! இல்லாவிட்டால் இப்படியெல்லாம் எழுதி சிரமப்படுத்தமாட்டேன்.நல்ல வசதியான ஆள்.டீஸல் மட்டும் போட்டுக்கொண்டு அவனுடைய காரை எங்கு வேண்டுமானாலும் எடுத்துப்போவேன்.

                              படிப்பும்,வசதியும்,சமூக அந்தஸ்தும் யாருக்கும் அவனுடன் நெருக்கமாக இருத்திக் கொள்ள தோன்றும்.உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு வசதி இருந்தாலும் தான் படித்த படிப்புக்காக ஒரு வேலையில் ஒட்டிக் கொண்டிருந்தான்.வேலை செய்யுமிட்த்தில் அவனுக்கு தொல்லைகள்தான் அதிகம் இருந்தன.

                               பெரிதாக அவனை என்ன செய்துவிடமுடியும் என்றுதான் நான் நினைத்தேன்.ஆனால்,அவன் ஏராளமான சங்கடங்களை அனுபவித்தான்.வேறு கிளைக்கு மாற்றல் வாங்கி செல்லும் நிலை ஒரு பெண்ணால் ஏற்பட்ட்து என்பதை என்னால் உண்மையில் நம்ப முடியவில்லை.


                               பெண்களுக்கு நேரும் தொல்லைகளைப்பற்றியே நான் எப்போது சிந்தித்து வந்திருக்கிறேன்.விதிவிலக்காக இது என்னை வியப்பில் ஆழ்த்தியது.பல மாதங்கள் கழித்து வெகுநேரம் பேசும் வாய்ப்பு கிடைத்த்து.அவனுக்கு நேர்ந்த தொந்தரவு பற்றி விளக்கமாக பேசினோம்.

பாலியல் தொல்லைதான் என்பதை எப்படி உணர்ந்தீர்கள்?

                              ஆரம்பத்தில் அங்கே பணிக்கு வந்த போது தினமும் வணக்கம் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருப்பார்.மற்றவர்களை விட என்மீது அதிக மதிப்பு வைத்திருக்கிறார் என்று சக ஊழியர்கள் சொல்லிக்காட்டுவார்கள்.ஒரு நாள் என் கணவர் ஊரில் இல்லை,நான் தனியாக இருக்கிறேன் என்றார்.அன்று இரவு ஒன்பது மணிக்கு போன் வந்த்து.என்ன செய்கிறீர்கள்?என்றவர் பிறகு பேசவில்லை.போனையும் துண்டிக்கவில்லை.நான் அமைதியாக இருந்து விட்டேன்.அடுத்தநாள் காலையில் அலுவலகத்தில் பார்த்தபோது என்னுடன் பேசவில்லை.அப்போதிருந்து பிரச்சினை ஆரம்பித்துவிட்ட்து.


எந்த மாதிரி பிரச்சினைகள்?

                               என் மேலாளர் என்மீது மிகவும் மரியாதை வைத்திருந்தார்.நான் கொடுத்த பணியை ஒழுங்காக செய்து வந்திருக்கிறேன்.திடீரென்று என்மீது எரிந்துவிழ ஆரம்பித்தார்.வேலையை சரியாக செய்தால் மட்டும் போதாது,அனைவரிடமும் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும்என்றார்.மேலாளர் அந்த பெண்ணை மிகவும் மதிக்க ஆரம்பித்து விட்டார்.எனக்கும் அவருக்கும் விரிசல் ஏற்பட்ட்து.அடுத்து நண்பர்கள்,

நண்பர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்?

                                                                           அடுத்த பதிவில் முடியும்.

                              

-