Friday, March 4, 2011

நெருக்கமில்லாத தம்பதிகள்;அதிரும் மணவாழ்க்கை


                                                                               பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஒருவரின் குடும்பம் அது.ஒரே மகனுக்கு நல்ல வசதியான இடமாகப் பார்த்து,லகரங்களை அள்ளி இறைத்து திருமணம் செய்து வைத்தார். இணையான படிப்பும் அழகும் கொண்ட பெண்ணை தேர்வு செய்த்தில் அவருக்கு மகிழ்ச்சி..மணமாகி நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன.

                              திருமணத்தின் ஆகச் சிறந்த நோக்கம் இனப்பெருக்கம்.இன்னமும் அது கேள்விக் குறியாக இருந்த்துபெற்றோர்கள் பெரும் கவலையில் வீழ்ந்தார்கள்.ஜோதிடரிடம் போனார்கள்,கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டார்கள்.நம்முடைய பாரம்பரியம் இது!மருத்துவரிடம் கடைசியாகத்தான் போவோம்.

                                மருத்துவரிடம் செல்வதற்கு பெரும்பாலான தம்பதிகள் தயக்கம் காட்டுகிறார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.விளைவுகள் தன்னை குற்றவாளி ஆக்கிவிடுமோ என்ற அச்சம் இருவருக்கும் ஏற்படுவதால் தள்ளிப் போட முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.இறுதியில் வேறு வழியில்லை.

                                பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு தம்பதிகளை பரிசோதித்த மருத்துவர் தனது முடிவைக் கூறிய போது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.தம்பதிகள் இருவருக்கும் உடலில் யாதொரு குறையும் இல்லை என்றார் மருத்துவர்.கணவன்,மனைவி இருவருக்கும் மனதளவில் நெருக்கமோ,உறவில் ஈர்ப்போ இல்லாமல் இருக்கலாம் என்பது அவரது முடிவு.

                                 கடந்த நாட்களில் அவர்கள் சந்தோஷமாக குடும்பம் நட்த்துவதாகவே பெற்றோர்கள் நினைத்திருந்தார்கள்.இதை எதிர்பார்க்கவில்லை.இருவரையும் அழைத்து பேசினார்கள்.தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவே தம்பதிகள் கூறினார்கள்.குழப்பம்தான் மிஞ்சியது.அவர்கள் இன்னமும் சிறந்த மருத்துவமனையைத் தேடி சென்னை சென்றார்கள்.

                                 சென்னை மருத்துவமனையிலும் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பரிசோதனைகள் நடந்தன.முடிவுகளை பார்த்துவிட்டு முந்தைய மருத்துவரின் வார்த்தையை உறுதி செய்தார்கள்.பாலுறவில் தம்பதிகளுக்கு முழுமையான ஆர்வமில்லை.கணவன்,மனைவி இருவருக்கும் தனித் தனி ஆலோசனைகள் நடந்த்து.

                                 முழுமையான உடல் திறன் பெற்றிருந்தும் அவர்களிடம் மனதளவில் நெருக்கமில்லை.அதற்கு காரணங்களை கண்டறிவதற்கு ஆலோசனைகள் நடந்தன.பிரச்சினை மனைவியிடம் இருப்பதை கண்டறிந்தார்கள்.அவரது கடந்த கால வாழ்க்கையில் பதில் இருந்த்து.

                                 தம்பதிகளில் ஒருவருக்கு ஆர்வமில்லாவிட்டாலும் கூட இத்தகைய பிரச்சினைகள் நேரும்.மண வாழ்க்கையின் எதிர்காலத்தை சிதைக்கும் பாலுறவில் நாட்டமின்மை பற்றி விரிவாக சொல்ல இன்னொரு பதிவு தேவைப்படும்.மீதி அடுத்த பதிவில்!

                              
-

8 comments:

Sankar Gurusamy said...

True. When there is no involvement in family life, reproduction chances are very less.

Nice Post....

http://anubhudhi.blogspot.com/

shanmugavel said...

Thanks sankar

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள பதிவு..

Riyas said...

நல்ல விஷயம்

Jana said...

நல்ல ஒரு ஆழமான விடயத்தை எடுத்துளீர்கள். இதுபோன்ற நிகழ்வகளை அன்றாடம் கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மணவாழ்க்கை கூட ஒரு அர்ப்பணிப்பே என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகின்றது. அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்

shanmugavel said...

@வேடந்தாங்கல் - கருன் said...

பயனுள்ள பதிவு..

thanks sir

shanmugavel said...

@Riyas said...

நல்ல விஷயம்

நன்றி,நண்பரே

shanmugavel said...

மிக்க நன்றி,ஜனா