பிரச்சினைக்குரிய பெண்ணிடம் அவரது ஈடுபாடில்லாத நிலையை கண்டறிவது அவ்வளவு எளிதாக இல்லை.இம்மாதிரி கோளாறுகளில் வழக்கமாக காணப்படும் ஒன்றல்ல அது! அபூர்வமான சிக்கலாக இருந்த்து.திறமையாக அதையும் வெளியே கொண்டு வந்தார்கள்.
உறவினர் ஒருவர் வீட்டுக்கு போயிருந்தேன்.அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால்,அசைவம்.சிக்கன்,மட்டனுடன் சைவ உணவு ஒருபுறம் தயாராகிக் கொண்டிருந்த்து.இரண்டு வகை எதற்காக நான்கு பேருக்கு? -கல்லூரியில் படிக்கும் பெண்,பள்ளியில் படிக்கும் பையன்,அவர்களது பெற்றோர்-”இவள் அசைவம் சாப்பிடுவதில்லை” என்றார்கள்.
கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்,அக்குடும்பத்தில் அசைவ உணவை மறுக்க காரணமென்ன? விசாரித்த போது தெரிய வந்த விபரம்: கிராமத்திற்கு சென்றிருந்தபோது அப்பெண் ஆடு வெட்டுவதை நேரில் பார்க்க நேர்ந்த்து.அவளுக்கு குடலை உருட்டி விட்ட்து.அப்போதிருந்து அசைவம் சாப்பிடுவதில்லை.
ஒரு காட்சி அல்லது நிகழ்வு மனிதர்கள் எல்லோரிடமும் ஒரே மாதிரி உணர்வுகளை உண்டாக்குவதில்லை.ரத்தம் பார்த்து மயங்கி விழுபவர்கள் இருக்கிறார்கள்.தாம்பத்ய உறவில் விருப்பம் அற்றுப்போன அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த்தும் அதைப் போன்றதொரு விபத்துதான்.
சிறு வயதில் வீடுவீடாக விளையாடிக் கொண்டு திரிந்தபோது பக்கத்து வீட்டில் உடலுறவு காட்சியை நேரில் பார்த்திருக்கிறார்.அப்போது அருவருப்பைத் தந்த விஷயம் இப்போது அவசியமான நேரத்தில் ஆழ்மனம் ஒத்துழைக்கவில்லை.மிக சிரம்மெடுத்து இதைக் கண்டறிந்தார்கள்.
மருத்துவர்களுக்கு அப்பெண்ணுக்கு ஆலோசனை மூலமும்,சில மருந்துகளுடனும் குறையை நிவர்த்தி செய்து விட்டார்கள்.இப்போது குழந்தைகளுடன் சந்தோஷமாக் காட்சியளிக்கிறது அக் குடும்பம்.மருத்துவத்துக்கு சிறு வயதில் ஏற்பட்ட அனுபவங்களால் ஏற்படும் இம்மாதிரி குறைகள் அபூர்வமானது.சிறு வயதில் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டாலும் இத்தகைய பிரச்சினைகள் நேரலாம்.இதுவும் குறைவுதான்.
Inhibited sexual desire என்று சொல்லப்படும் இம்மாதிரியான பிரச்சினைகளுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.ஆணுக்கென்றால் குழந்தை இல்லாத நிலை வரை போகாமல் விரைவில் தெரிந்துவிடும்.பால் ஆர்வத்தை தூண்டுவதில் குறை இருப்பவர்கள் பங்கேற்பதில்லை.
நிறைய காரணங்கள் இருக்கிறதென்று குறிப்பிட்டேன்.எப்படிப்பட்ட ஆண் அல்லது பெண் இந்த மாதிரி உடல் திறன் இருந்தும் தாம்பத்யத்தில் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள்? அதிகம் பாதிக்கப்படுவது யார்? உங்களுக்கும் தெரிந்த விஷயமே! அது அடுத்த பதிவில் பார்க்கலாம்.
8 comments:
//அப்பெண்ணுக்கு ஆலோசனை மூலமும்,சில மருந்துகளுடனும் குறையை நிவர்த்தி செய்து விட்டார்கள்.இப்போது குழந்தைகளுடன் சந்தோஷமாக் காட்சியளிக்கிறது அக் குடும்பம்.மருத்துவத்துக்கு சிறு வயதில் ஏற்பட்ட அனுபவங்களால் ஏற்படும் இம்மாதிரி குறைகள் அபூர்வமானது.சிறு வயதில் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டாலும் இத்தகைய பிரச்சினைகள் நேரலாம்.இதுவும் குறைவுதான்.//
நல்ல பதிவு !
தொடரட்டும்...
வாழ்த்துக்கள் !
பயனுள்ள அலசல்... பகிர்வுக்கு நன்றி...
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி,ஆகாய மனிதன்
thanks karun
இன்றைய சமூகத்திற்கு தேவையான பதிவு.. தொடரவும், நன்றி.
thank you vasantha natesan
counsel for any
தலையங்கம்படியே நிறைவாகப்போகின்றது. முதலில் பாராட்டுக்கள் ஐயா.
அப்புறம் நன்றிகள். தொடருங்கள்.
yes jana,Thank you
Post a Comment