இன்று இ-மெயிலை திறந்தபோது ஒரு ஆச்சர்யம்.சி.பி.செந்தில்குமாரிடமிருந்து கமெண்ட்.இவர் நம்ம பக்கமெல்லாம் வரமாட்டாரே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.சில கமெண்டுகள் சங்கடப்படுத்திவிட்ட்தால் comment moderation வைத்திருக்கிறேன்.அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஏமாந்த நேரமாக பார்த்து மெயிலிலிருந்து கமெண்ட் publishசெய்வது வழக்கம்.
அவருக்கும்,சதீஷ்குமாருக்கும் ஃபாலோயராக இருக்கிறேன்.சில நேரங்களில் சினிமா பார்க்கவேண்டுமென்று தோன்றினால் அந்த விமர்சனத்தை படிப்பது வழக்கம்.நினைவுள்ள வரையில் இரண்டு கமெண்ட் என்னவோ போட்டிருக்கிறேன்.சினிமா விமர்சனத்தில் தனித்துவமாக இயங்குகிறீர்கள் என்று!அவருடைய எல்லா சினிமா விமர்சனத்துக்கும் பொருந்தும்.
அரசியல் பதிவெழுதுவதோ,அரசியல் பதிவுகளுக்கு கருத்துரையிடுவதோ சில தனிப்பட்ட காரணங்களுக்காக என்னால் முடியாமல் இருக்கிறது.விகடனில் அவரது ஜோக்ஸ்படித்து சிரிப்பேன்.ஜோக் சம்பந்தப்பட்ட ஒரு பதிவுக்கு really super என்று ஒரு கமெண்ட் போட்டிருக்கிறேன்.அவ்வளவுதான்.
தொடர்ந்து தமிழ்மணத்தில் முன்னணியில் இருந்து வருகிறார்.தினம் இரண்டு மூன்று பதிவுகூட போடுகிறார்.அவரது உழைப்பு என்னை வியக்க வைத்த்துண்டு.தூங்குகிறாரா,இல்லையா? என்று எண்ணியிருக்கிறேன்.தவிர எங்கே பார்த்தாலும் கமெண்ட் போட்டுக்கொண்டு இருக்கிறார்.பலரை தூக்கிவிட்டு அவரும் உயர்ந்து நிற்கிறார்.
முதன் முறையாக கமெண்ட் போட்டிருக்கிறார்,அவருடைய தளத்துக்கு சென்றுவரலாம் என்று போனேன்.விமர்சனம் படிப்பவர்கள் படம் பார்க்காதவாறு’நச்’என்று இருக்கிறது.இது எனக்கு பிடித்த விஷயமும் கூட.சினிமா பெருவாரியான மக்களால் விரும்ப்ப்படும் ஒரு கலை.அதற்கான சரியான விமர்சனமும் ஒரு சேவைதான்.நம்முடைய பணத்தை செலவளித்து சினிமாவுக்கு போகிறோம்.பணத்தையும் கொடுத்து,மனமும் கெட்டுவருவது கஷ்டமான அனுபவம்.
சொல்லவந்த்து வேறு.அந்த சினிமா விமர்சனத்தில் ‘2 ல ஒண்ணு செம கட்ட’என்று ஒருவரி.எனக்கு சங்கடமாக இருந்த்து.இவற்றையெல்லாம் தவிர்த்தாலும் நீங்கள் முதல் இட்த்தில் இருப்பீர்கள் நண்பரே!இவை உங்களுக்கான அறிவுரை அல்ல!ஒரு நட்பு வேண்டுகோள்.என்னுடைய வாழ்த்துக்கள்.
33 comments:
//விமர்சனம் படிப்பவர்கள் படம் பார்க்காதவாறு’நச்’என்று இருக்கிறது.இது எனக்கு பிடித்த விஷயமும் கூட.//
இது புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள்?
அவரு பிரபல பதிவர்ங்க.... அதனாலதான்...
@பாரத்... பாரதி... said...
//விமர்சனம் படிப்பவர்கள் படம் பார்க்காதவாறு’நச்’என்று இருக்கிறது.இது எனக்கு பிடித்த விஷயமும் கூட.//
இது புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள்?
படம் சரியில்லை என்றால் தெளிவாக எழுதிவிடுகிறார்.
‘2 ல ஒண்ணு செம கட்ட’, இது இப்போது சமூகத்தில் சகஜமாக இளவயதினரிடம் புழங்கும் வார்த்தை தானே நண்பரே, இதை கொஞ்சம் ஒதுங்கி இருந்து ரசிப்பதே என் வழக்கம், நன்றி..
சொல்லவந்த்து வேறு.அந்த சினிமா விமர்சனத்தில் ‘2 ல ஒண்ணு செம கட்ட’என்று ஒருவரி.எனக்கு சங்கடமாக இருந்த்து.இவற்றையெல்லாம் தவிர்த்தாலும் நீங்கள் முதல் இட்த்தில் இருப்பீர்கள் நண்பரே!
அண்ணே! அவர் அப்படி எழுதுவதும், எழுதாமல் விடுவதும் அவரது கையில் இல்லை! படிப்பவர்கள் பெரும்பாலும் இந்தமாதிரியான மசாலா விஷயங்களை விரும்புவதும், இது போன்று எழுதும் போது ' சூப்பர் ' என்று பாராட்டுவதும் தான் சி பி யை அப்படி எழுத வைக்கிறது!
சி பி எப்போதுமே படிப்பவர்கள் விரும்பும் வகையில்தான் எழுதுவார்! அதுதான் அவரது வெற்றிக்கு காரணம்!
தவிரவும், " நான் இப்படித்தான் எழுதுவேன் ! விரும்பினா படி " என்று அடம்பிடிப்பதற்கு, அவர் என்ன கொழும்பிலா இருக்கிறார்?
@வசந்தா நடேசன் said...
‘2 ல ஒண்ணு செம கட்ட’, இது இப்போது சமூகத்தில் சகஜமாக இளவயதினரிடம் புழங்கும் வார்த்தை தானே நண்பரே, இதை கொஞ்சம் ஒதுங்கி இருந்து ரசிப்பதே என் வழக்கம், நன்றி..
ஆ.வசந்தா நடேசன் பருவ வயதின் மனோநிலை அது.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அண்ணே! அவர் அப்படி எழுதுவதும், எழுதாமல் விடுவதும் அவரது கையில் இல்லை! படிப்பவர்கள் பெரும்பாலும் இந்தமாதிரியான மசாலா விஷயங்களை விரும்புவதும், இது போன்று எழுதும் போது ' சூப்பர் ' என்று பாராட்டுவதும் தான் சி பி யை அப்படி எழுத வைக்கிறது!
சி பி எப்போதுமே படிப்பவர்கள் விரும்பும் வகையில்தான் எழுதுவார்! அதுதான் அவரது வெற்றிக்கு காரணம்!
தவிரவும், " நான் இப்படித்தான் எழுதுவேன் ! விரும்பினா படி " என்று அடம்பிடிப்பதற்கு, அவர் என்ன கொழும்பிலா இருக்கிறார்?
இதுதான் தம்பி உன்கிட்ட புடிச்ச விஷயம்.பட்டுன்னு சொல்லிடற!அது சரி அது என்ன கொழும்பிலா இருக்கிறார்?
நான் வந்துட்டேன்..
சி.பி.அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..
அண்ணாச்சி நீங்க அன்பா சொன்னத அவரு நிச்சயம் கேட்பாரு ... ஏன்னா அவரு நல்லவரு !!!
உண்மையில் சிபி, வெகுஜனம் எதை விரும்புகிறார்கள் என்று அறிந்து அவர்களுக்கேற்றாற்போல் தன் எழுத்தை மாற்றிக்கொண்டவர்... அவர் ஒரு பதிவுலக பாக்யராஜ். எல்லாவற்றையும் சமமாக கலந்து கொடுப்பவர்.
நானும் ஆஜர்.....
ம்....அவர் அப்படி எழுதுவது தவறில்லை...நண்பர்களுடன் ஜாலியாக பேசுவதுபோலவே இருக்கும் அவரது விமர்சனங்களை ஏன் நாம் கடினமான நடைக்கு தள்ள வேண்டும்..?
அவர் ஒரு பதிவுலக பாக்யராஜ். எல்லாவற்றையும் சமமாக கலந்து கொடுப்பவர்//
ஹாஹா சிபி இதை படித்தால் சந்தோஷப்படுவார்
ஹா ஹா உண்மை தான்.. அந்த வார்த்தை ஒரு வரம்பு மீறியதுதான்.. சும்மா ஜாலியா எடுத்துக்குங்க..
தவிர்க்க முடியாதா? எனக்கேட்டால் தாராளமாக தவிர்க்கலாம்... யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் சாரி.. இனி கவனமாக இருக்கேன்.. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
சாதாரணமாக நண்பர்களுடன் பேசுவது வேறு.. விமர்சனம் என வரும்போது ஒரு சமூக அக்கறையுடன் கூடிய பொறுப்புணர்வுடனே தான் எழுத வேண்டும்.. ஏதோ ஜாலி மூடில் கொலீக்கல் லேங்குவேஜ் வந்து விட்டது.. இதை பெரிதாக எடுத்துக்க வேண்டாம்..
//தவிர்க்க முடியாதா? எனக்கேட்டால் தாராளமாக தவிர்க்கலாம்... யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் சாரி//
இது தான் செந்தில் அண்ணன்.
//தவிர்க்க முடியாதா? எனக்கேட்டால் தாராளமாக தவிர்க்கலாம்... யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் சாரி.. இனி கவனமாக இருக்கேன்.. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி //
பாராட்டுக்கள்.
கோபிக்காதீங்க நண்பரே நான் கமெண்டு போட கொஞ்ச நாட்களாகும்....
இது கூட டெம்ளேட் கமெண்டு தான்
அடடே,.. விமர்சனத்திற்கு ஒரு விமர்சனமா?
@தமிழ்ப் பையன் said...
உங்க நம்பிக்கை வீண்போகல பாருங்க.நன்றி
@ கருன்,நாஞ்சில்மனோ,மைந்தன் சிவா உங்களுக்கு நன்றி
@ரஹீம் கஸாலி said...
உண்மையில் சிபி, வெகுஜனம் எதை விரும்புகிறார்கள் என்று அறிந்து அவர்களுக்கேற்றாற்போல் தன் எழுத்தை மாற்றிக்கொண்டவர்... அவர் ஒரு பதிவுலக பாக்யராஜ். எல்லாவற்றையும் சமமாக கலந்து கொடுப்பவர்.
பதிவுலக பாக்யராஜ் பொருத்தமான பட்டம்.நீங்கள் ‘பதிவுலக ராஜேஷ்குமார்’.புலன்விசாரணை எப்படி போகுது? நன்றி ரஹீம்.
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ம்....அவர் அப்படி எழுதுவது தவறில்லை...நண்பர்களுடன் ஜாலியாக பேசுவதுபோலவே இருக்கும் அவரது விமர்சனங்களை ஏன் நாம் கடினமான நடைக்கு தள்ள வேண்டும்..?
சமூக வலைத்தளம் என்ற அளவில் இருந்து மாற்றம் பெற்று வருகிறது சதீஷ்குமார்.ஆயிரக்கணக்கானவர்கள் படிக்கிறார்கள்.
THOPPITHOPPI said...
//தவிர்க்க முடியாதா? எனக்கேட்டால் தாராளமாக தவிர்க்கலாம்... யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் சாரி//
இது தான் செந்தில் அண்ணன்.
நீங்கள்தானா? நன்றி
அமைதி அப்பா said...
//தவிர்க்க முடியாதா? எனக்கேட்டால் தாராளமாக தவிர்க்கலாம்... யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் சாரி.. இனி கவனமாக இருக்கேன்.. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி //
பாராட்டுக்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
@jothi said...
அடடே,.. விமர்சனத்திற்கு ஒரு விமர்சனமா?
ஆமாம்.பாருங்கள் என்னென்ன நடக்கிறதென்று!
அன்புள்ள சி.பி. ஒரு சிக்கலான பரீட்சையிலிருந்து திறமையாக தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள்.தினமணி முதல் பக்கத்தில் நம்முடைய பதிவர்களின் பதிவுகள் வெளியாகின்றன.வெகுஜன பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளருக்குரிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.வீட்டுக்கு வீடு டி.வி.போல கணினியும் இண்டர்னெட்டும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.வலைப்பதிவுகளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவே கருதுகிறேன்.உங்களுக்கும்தான்!வாசகர்கள் அதிகரிப்பார்கள்.அதிகமாக கவனிக்கப்படுவோம்.சட்ட சிக்கல்களிருந்து எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.முன்னணி பதிவர் மற்றவர்களுக்கும் முன் உதாரணமாக முடிவெடுத்திருக்கிறீர்கள்.பலர் உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.இந்த பதிவு popular post ல் வந்திருப்பதை பாருங்கள்.பெண்கள் பேசுவதில்லை.மனதுக்குள் சங்கடப்பட்டிருக்கலாம்.அவர்களுக்கு உங்கள் பதில் சந்தோஷத்தை தரும்.உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் நன்றியும்.
nalla vithamaaka pathil kuuriyullaar aakave ungkal pathivu nalla velai seithullanthu...
ஆமாம்.சரவணன் .தங்கள் கருத்துரைக்கு நன்றி
//பலரை தூக்கிவிட்டு அவரும் உயர்ந்து நிற்கிறார்//
:))
நன்றி
Post a Comment