Friday, March 25, 2011

தமிழ் சினிமாவிற்கு எதிர்காலம் இருக்கிறதா?


மக்கள் தொகை பெருக்கல் விகித்த்தில் அதிகரிக்கும்போது உணவு உற்பத்தி கூட்டல் விகித்த்தில் அதிகரிக்கும் என்றார் பொருளாதார அறிஞர் மால்தஸ்.ஆனால் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கையும்,திரையரங்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டேபோகிறது.

                                 தமிழ் சினிமா வெள்ளிவிழாக்களை தொலைத்து விட்ட்து.இளைய தலைமுறைக்கு வெள்ளிவிழா என்றால் என்னவென்றே தெரியாது.திரையரங்குகளில் உள்ள  பழைய வெள்ளிவிழா கேடயங்களை காட்டி விளக்க வேண்டியிருக்கும்.தொழில் தேய ஆரம்பித்து வருடங்கள் கடந்துவிட்ட்து.

                                  “மண்டபமாக மாற்றி விடலாம் என்றால் என் பையன் ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறான்’’ என்கிறார் தியேட்டர் அதிபர் ஒருவர்.கொஞ்ச நாள்ள அவரும் ஒத்துக்குவார்என்றேன் நான்.’’பெரும்பாலும் இளஞ்சோடிகள்தான் படம்பார்க்க வருகிறார்கள்.அவர்களும் முடியும் முன்பே கிளம்பி விடுகிறார்கள்’’ என்கிறார்.தியேட்டரை வேலை செய்யலாம் என்றால் கூட வரும் பணம் போதவில்லை.

                                    சி.டி.யை காரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அது முழுதும் உண்மையல்ல! சி.டி.கூட ஓரளவு நல்ல திரைப்படங்களின் சி.டி.தான் விற்பனையாகிறது என்கிறார்கள்.ரசனையில் மாற்றம் வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.நல்ல கதை,திரைக்கதையின்றி,புதுமையின்றி,உழைப்பில்லாமல் எடுக்கப்படும் சினிமாவும் ஒரு காரணம்.

                           மோசமான சினிமாக்களுக்கு பணம் கொடுத்து ஏமாந்து சினிமா ரசிகர்கள் தங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.பணத்தை வாங்கிக்கொண்டு தரமற்றதை தலையில் கட்டுவது ஒரு மோசடியும்கூட.குத்துப்பாட்டு,நாலுஃபைட்,ஆறு பாடல்கள் இருந்தாலே படம் ஓடி விடும் என்ற மூடநம்பிக்கை தமிழ் சினிமாவுக்கு வெந்நீர் ஊற்றிவிட்ட்து.

                                     ஒரு படம் வெளியானவுடன் பிரபல நடிகராக இருந்தால்,அவரது ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.மற்றவர்கள் நல்ல விமர்சனம் கேள்விப்பட்டே சினிமாவுக்கு போகிறார்கள்.பிரபல நடிகர்கள் இல்லாத நல்ல கதையம்சம் உள்ள சினிமாக்கள் ஓரிருவார இடைவெளியிலேயே வரவேற்பு பெறுவது ஒரு உதாரணம்.

                                    தியேட்டர்களின் லட்சணம்,மூட்டைப்பூச்சி,சமூக விரோதிகள் தொல்லை போன்றவையும் சி.டி. வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்கிறார்கள்.ஆனால் கிடைக்கும் வருவாயில் பராமரிப்பு செய்ய முடியவில்லை என்கிறார்கள் அதன் உரிமையாளர்கள்.அதிக விலை என்றாலும் யாரும் வருவதில்லை.

                                  டி.வி. ஒரு முக்கிய விஷயம்.மோசமான படமென்றால் விரைவில் சின்னத்திரைக்கே வந்துவிட்டுப் போகிறது என்ற நம்பிக்கையும் காரணம்.சீரியல்களுக்கு அடிமையாகிக் கிடப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.இதற்கு மோசமான சினிமாவே பரவாயில்லை.

                                  அதிகம் பணம் வைத்திருக்கும் தயாரிப்பாளருக்கு இது ஒரு சூதாட்டம்.நடிகர்,நடிகைகளுக்கும் கவலையில்லை.மிஞ்சிப்போனால் சீரியல்கள் இருக்கிறது.திரைப்பட தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலைதான் பரிதாபம்.தமிழ்சினிமா தேய்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
-

8 comments:

Anonymous said...

ஆட்சி மாறினால்?

சக்தி கல்வி மையம் said...

என்ன திடீர்னு இப்படி ஒர் ஆராய்ச்சி..

பாலா said...

நல்ல ஆராய்ச்சிதான்

சி.பி.செந்தில்குமார் said...

அய்யய்யோ.. அப்போ என் கதி? ஹா ஹா

shanmugavel said...

@ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆட்சி மாறினால்?

?????????????? காட்சி மாறும்.
நன்றி

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்ன திடீர்னு இப்படி ஒர் ஆராய்ச்சி.

என்ன திடீர்னு இப்படி ஒரு கேள்வி.நன்றி கருன்.

shanmugavel said...

@பாலா said...

நல்ல ஆராய்ச்சிதான்

தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி,பாலா

shanmugavel said...

@சி.பி.செந்தில்குமார் said...

அய்யய்யோ.. அப்போ என் கதி? ஹா ஹா

கவலைப்படாதீங்க,சி.பி.நம்மாளுங்க ஓடுதோ,ஓடலயோ எடுக்காம இருக்க மாட்டாங்க!