Thursday, March 10, 2011

மாத்தியோசி@ஓட்டவட நாராயணன் என்றொரு (ர)ஜீவன்.




                             இணையம் புதுப்புது உறவுகளை தந்து விடுகிறது.பேருந்து நிலையத்தில்,ஏதோ ஒரு கூட்ட்த்தில் சிலரை பார்த்தவுடன் பிடித்துப்போகிறது.சிலர் மீது வெறுப்பு ஏற்படுகிறது.ஒரு சொல்லோ,வரியோ,முகபாவமோ,பாவனையோ,கருத்துக்களோ ஒருவரிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

                             அன்றிரவு பனிரெண்டு மணிக்கு கிளம்பி சென்னை செல்லவேண்டும்.நண்பர்களுடன் காரில் பயணம்.அவர்கள் சேர தாமதமாகிக்கொண்டிருந்த்து.ஏதாவது எழுத எண்ணி வலைப்பதிவுகள்,பதிவர்கள் மற்றும் நான் என்று ஒரு பதிவை எழுதினேன்.யோசிக்க தேவையில்லை என்பதால் அந்த தலைப்பு.

                              வேகமாக இரண்டு,மூன்று கமெண்ட் வந்து விழுந்த்து.நான் கேள்விப்பட்டிராத பெயர்கள் இருந்தன.அதில் ஒன்று மாத்தியோசி! அது சரி,முன்னுக்கு வருகிற எண்ணமில்லையா? என்று கேட்டிருந்தார்.நண்பர்கள் வந்துவிட்டார்கள்.கிளம்பிவிட்டேன்.

                              இரவு பயணம் முழுக்க யோசித்துக் கொண்டே இருந்தேன்.யாராக இருக்கும்? இப்படியே இருந்து விடப்போகிறீர்களா? என்று யார் கேட்பார்கள்? நான் முன்னுக்கு வரவேண்டுமென்று ஆசைப்படும்,தோழமை கொள்ள முன்வரும் இந்த ஜீவன் யார்? ஆயிரக்கணக்கான பதிவர்கள் இருக்கும்போது என்னிடம் மட்டும் ஏன் இப்படி ஒரு கோரிக்கை?


                                                                             ஒருவர் முன்னேற வேண்டுமென்று யார் விரும்புவார்கள்? அண்ணன்,தம்பி,உறவுகள்,நண்பர்கள் இவர்களில் யாராவது இருக்கலாம்.யாரையாவது இழுத்து கீழே தள்ளினால்தான் நம் முகம் தெரியும் என்று குழிபறிக்கும் வேலைகளை செய்யும் ஆட்கள்தான் அதிகம்.நிச்சயமாக நமக்கு தெரிந்த ஆளாகத்தான் இருக்கும்.

                             எழுதுவதில் ஆர்வமுள்ள நிறைய நண்பர்கள் எனக்கு உண்டு.அவர்களில் யாராவது இருக்கும்.சரி பார்ப்போம்.சென்னையில் ஸ்பென்சரில் உள்ள ஒரு பிரவுசிங் செண்டரில் போனால் அரத பழைய கணினிகள்.தொடர்பு சரியில்லை.படுத்திவிட்ட்து.

                             வீட்டுக்கு வந்த பின்னால் பார்த்தேன்.பாரீஸில் இருக்கும் ஆளென்று பிறகு தெரிந்த்து.இருவருக்கும் தோழமை ஏற்பட்டுவிட்ட்து.தமிழ்மணத்தில் மாத்தியோசி –அறிமுகம் என்ற பதிவை சுண்டிப் போனால்,அங்கே போட்டோவுடன் ஆளைப் பார்த்தேன்.ஜனாவின் தளம் அது.ஜனா தீவிர வாசிப்பு பழக்கம் உடையவர் என்பது தெரிந்து சந்தோஷம்.

                             எங்கள் வீட்டு பக்கத்தில் கார்த்தி என்கிற பையன்.அண்ணா,அண்ணா என்று என்னுடன் சுற்றிக்கொண்டிருப்பான்.அவனைப்போன்றே முகம்.அப்போதிருந்து தம்பியாக்கிக் கொண்டுவிட்டேன்.அண்ணே,தம்பி என்று மாத்திமாத்தி எங்கள் உறவு வளர்ந்து கொண்டிருக்கிறது.

                             காலையில் ஆறு மணிக்கு டாஷ்போர்டு பார்த்தால் ரஜீவனின் பதிவு இருக்கும்.தினசரி ஓட்டும்,கமெண்டும் போடுவதுதான் முதல் வேலை.தம்பியின் பதிவுகள் நண்பர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் ரகம்.சிலது நன்றாக இருக்கும்,சிலது சுமார்.எப்படியிருந்தாலும் ஓட்டு போட்டுவிடுவேன்.என் சமாச்சாரமோ வேறு.

                                ரஜீவனுக்கு நான் ஓட்டு போட்டு தூக்கிநிறுத்த வேண்டிய அவசியமில்லை.நான் மற்ற தளங்களுக்கு செல்வது அபூர்வம்.(நீ உருப்பட்ட மாதிரிதான்).ஆனால் எங்கே பார்த்தாலும் ஓட்டும் கமெண்டும் போட்டுக்கொண்டிருக்கிறான்.
                                வலைப்பதிவுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்களில் அவனும் ஒருவன்.எவ்வளவு நீளம் எழுதினாலும் முழுமையாக படித்துவிட்டு ஒருவரியில்,வார்த்தையில் சொல்லிவிடுகிறான்.அவன் எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டும்.

                             
-

16 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்லா ஜிங்குச்சா...ஜிங்குச்சா...ஜிங்குச்சா...ஜிங்குச்சா... அடிக்குறீங்க.

எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

சக்தி கல்வி மையம் said...

ஆம், அனைவருக்கும் நண்பரே....
வாழ்த்துக்கள்..

Unknown said...

பகிர்வுக்கு நன்றிகள் பாஸ்..
இந்த மூஞ்சிய எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே...
ஹிஹி அட நம்ம மாத்தி யோசி!!
இலியானா ஸ்பெசல் மொக்ஸ்!!
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_11.html

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அண்ணே என்ன இது? இப்பதான் பார்த்தேன்! ம்.......! அன்று உங்களுக்கு அப்படி ஒரு சூடான கமெண்டு போட்டுவிட்டு, பின்னாடி வருந்தினேன்! உங்கள் மனசு புண்பட்டிருக்குமோ என்று! நான் அப்படி ஏன் சொன்னேன் என்றால் - நீங்கள் எழுதும் விஷயங்கள் பெறுமதியானவை! அவை பிரபலமாகினால், நிறையப் பேருக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதால்!


எனது பதிவுகளைப் படிப்பதால், ஒருவருக்கு என்ன நன்மை வந்துவிடப் போகிறது? என்று அடிக்கடி நான் எண்ணிப்பார்ப்பதுண்டு! ஆனால் உங்களைப் போன்ற பதிவர்கள் பிரபலமாக வேண்டும்! அதனால்தான் அப்படிச்சொன்னேன்!



அப்படி நான் சொன்னதால் இன்று , நமக்குள் நல்லதொரு உறவு கிடைத்துள்ளது! மோதலில் காதல் வரும் என்பார்களே! அது இதுதானா? ஹா.................... ஹா...............ஹா.................!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நீங்கள் ஜனாவின் தளத்தில் சென்று கமெண்டு போடும் போது, நம்ம பக்கத்துவீட்டு பையன் போல இருக்கிறான் என்று எழுதியிருந்தீர்கள்! எனக்கு அது மிகவும் பிடித்துவிட்டது! அதனால்தான் உங்களை எனது அண்ணனாகவே நினைக்கிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

" ரஜீவனுக்கு நான் ஓட்டு போட்டு தூக்கிநிறுத்த வேண்டிய அவசியமில்லை."

அப்படியில்லை! நீங்கள் போடுகின்ற ஒவ்வொரு ஓட்டும் எனக்கு பெறுமதியானதுதான்! தனித்தனியே நாலுபேர் போடும் போதுதானே, அவை ஒன்றாகி பிரபலமாக வைக்கின்றன!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அவன் எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டும்.

தேங்க்ஸ் அண்ணே! நீங்களும்தான்!!

MANO நாஞ்சில் மனோ said...

இந்த மூஞ்சிய எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே....

shanmugavel said...

தமிழ்வாசி - Prakash said...

நல்லது,பிரகாஷ்,நன்றி.

shanmugavel said...

ஆமாகருன்,நன்றி

shanmugavel said...

மைந்தன் சிவா said...

பகிர்வுக்கு நன்றிகள் பாஸ்..
இந்த மூஞ்சிய எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே...
ஹிஹி அட நம்ம மாத்தி யோசி!!

அவரேதான் பாஸ்,நன்றி

shanmugavel said...

@MANO நாஞ்சில் மனோ said...

இந்த மூஞ்சிய எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே...

ஆ...அதே மூஞ்சி

shanmugavel said...

தம்பி ரஜீவா,விடுப்பா...ஓட்டு போட்டா போச்சு!

Unknown said...

// வலைப்பதிவுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்களில் அவனும் ஒருவன்.//


ஆகா... ஜீவனுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடே இதை எப்படி மிஸ் பண்ணேன், றஜீவன் நம்ம ஆளாச்சே......... வாழ்த்துக்கள், இருவருக்கும்....!

Unknown said...

ம்ம்ம்மம்ம்ம்மாத்தி யோசி ஜீவனுக்கு வாழ்த்துக்கள்