நண்பர்கள்,பெற்றோர்,உறவினர்கள் என்று உங்கள் உறவுகளுக்குள் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலைகளை நினைத்துப்பாருங்கள்.நீங்கள் விரும்பியதுபோல அவர்கள் நடந்து கொள்ளாத போது உங்களுக்கு ஏற்பட்ட கோபமும்,ஆத்திரமும் அவர்கள் மீது உங்கள் பார்வையை மாற்றிவிட்ட்து.உங்களை முறைத்துவிட்டு அல்லது கத்திவிட்டு உறவுகளை முறித்துக் கொண்டார்கள்.
உங்கள் வாழ்க்கையில் உறவுகள் விலகிப்போன நிமிடங்களை உற்றுக் கவனித்தால் உண்மை தெளிவாகும்.நான் நினைப்பதே சரி என்று நினைப்பது இன்னொரு பிரச்சினை.மனிதர்கள் யாரும் முழுமையானவர்கள் அல்ல! என்னுடைய கருத்தையே என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இருக்கவேண்டுமென்றால்,என் முகம்,என் கண்,என்னுடைய வாய் என்று எல்லோரும் என்னைப்போல இருந்தால் உலகத்தில் வேறு ஆட்களே தேவைப்படாது.
கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளை நம்மால் எதுவும் செய்யமுடியாதா? அதன் தீயவிளைவுகளை குறைத்துக்கொள்ள முடியாதா? இவையெல்லாம் உங்களை நெருங்கவிடாமல் செய்யும் நாற்றம்தான்.இவற்றை மேலாண்மை செய்வதில்தான் மனிதனின் முதிர்ச்சி அளவிடப்படுகிறது.
முதிர்ச்சியடைந்தவர்களிடம் இன்னொரு மனைதனை காயப்படுத்தும் உணர்வுகளை எளிதாக மேலாண்மை செய்வதை பார்க்கமுடியும்.வெற்றியை குறிக்கும் தகுதியும் அதுவே! தலைவனுக்குள்ள முக்கிய தகுதியும் அதுவே! நம்மில் யாரும் தனியாக வாழ்வதில்லை.சேர்ந்து வாழும் சூழலில் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
அப்படியானால் கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள வேண்டுமா? இல்லை.அடக்கப்பட்ட்து ஏதோஒரு சூழ்நிலையில் வெளியேவரும்.அப்போது அதிகமான பாதிப்புகளை உருவாக்கும்.இது எல்லா உணர்வுகளுக்கும் பொருந்தும்.
கோபம் போன்ற உணர்ச்சிகள் இயல்பானவை.ரௌத்ரம் பழகு என்று பாரதி சொன்னது அதனால்தான்.அறிவுரைகளை எந்த மனிதனும் ஏற்றுக்கொள்வதில்லை.உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளே உங்களுக்கு பாடம்.இந்த உணர்ச்சிகள் ஏற்கனவே உங்களிடம் ஏற்படுத்திய விளைவுகளை சிந்திப்பதன் மூலம் எளிதில் மாற்றத்தை உருவாக்கலாம்.
மற்றவர்களிடம் காயத்தை ஏற்படுத்தி உறவுகளை சிதைத்த உணர்ச்சிகள் உங்களை தொடர்ந்து ஆட்சி செய்யாமல்,நீங்கள் அதை ஆட்சி செய்தால்,அதன் மூலம் இன்னொருவரை காயப்படுத்தாமல் இருந்தால் அனைவரும் உங்களை விரும்பாமலா போய்விடுவார்கள்?
6 comments:
பயனுள்ள பதிவு..
ரௌத்ரம் பழகு - இதற்கு இப்படி ஒரு வித்தியாசமான விளக்கம்!
நான் அனுபவப்பட்டிருக்கிறேன்!
அருமையான பதிவு!
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பயனுள்ள பதிவு..
நன்றி கருன்
@ஜீ... said...
ரௌத்ரம் பழகு - இதற்கு இப்படி ஒரு வித்தியாசமான விளக்கம்!
நான் அனுபவப்பட்டிருக்கிறேன்!
அருமையான பதிவு!
நன்றி ஜீ
பல பயனுள்ள,வாழ்க்கைக்கு உகந்த தகவல்கள் உங்கள் பக்கத்தில்...வாழ்த்துக்கள் நண்பரே!!
@மைந்தன் சிவா said...
பல பயனுள்ள,வாழ்க்கைக்கு உகந்த தகவல்கள் உங்கள் பக்கத்தில்...வாழ்த்துக்கள் நண்பரே!!
நன்றி,சிவா
Post a Comment