“ எதையாவது என்னிடம் சொன்னால் நான் ஊரெல்லாம் சொல்லிவிடுகிறேனாம்,அதனால் என்னிடம் எதுவும் சொல்லக்கூடாதாம்” ரொம்ப குறை பட்டுக்கொண்டார் அந்த மாடி வீட்டம்மா. எனக்கும் கஷ்டமாக இருந்த்து.பாவம்தான்.அவரே தொடர்ந்தார். நான் யாரிடம் சொல்லிவிட்டேன்,பக்கத்து வீட்டு மாமியிடம் சொன்னேன்,சரசுவிடம் சொன்னேன்,காவேரியிடம் சொன்னேன்,மாது நம்ம ஆள்தானே அவரிடம் சொன்னேன்,மளிகை கடை கோபாலிடம் சொன்னேன்.......................................தொடர்கிறது.நான் ஊரெல்லாம் சொன்னேனாம்! நீங்களே பாருங்கள் தம்பி!
எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்த்து.என்னிடமும் சொல்லியாகிவிட்ட்து.அது ரகசியம் உங்களுக்கு தெரியவேண்டாம்.மாடி வீட்டம்மா மீது அநியாயத்திற்கு வீண்பழி சுமத்துகிறார்கள் பாருங்கள்.அதை மட்டும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
வேடிக்கை இருக்கட்டும்.உண்மையில் பலரும் அந்த மாடி வீட்டம்மா மாதிரிதான் இருக்கிறார்கள்.ஒருவர் நம்மிடம் தனது சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.குடும்ப விஷயங்களை விவாதிக்கிறார்.நாம் வேறு யாரிடமாவது பேசி விடுகிறோம்.அடுத்தவனை பற்றிய வம்பை கேட்பதற்கு காதுகள் தயாராக இருக்கின்றன.
நம்மிடம் தெரிவிக்கப்பட்ட ஒன்றை மற்றவர்களுக்கு உடைப்பது மூலம் நாம் நம்பிக்கையற்றவர்கள் ஆகிறோம்.சொன்னவரை அவமானப்படுத்துவதாகவும் ஆகும். உங்களுக்கு கேலியாக,அர்த்தமற்றதாக தோன்றும் ஒன்று இன்னொருவருக்கு முக்கியமான பொருளாக இருக்கும்.
பலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது உங்களுக்கு அது அப்படி ஒன்றும் பெரிய விஷயமில்லையே என்று தோன்றும்.ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆளுமை இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி வார்க்கப்பட்டவர்களோ,வளர்க்கப்பட்டவர்களோ அல்ல!
ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே ஏராளம் இருக்கிறது.பேச நம்பிக்கையான ஆள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறான்.ஒரே கவலைமட்டுமே! தன்னுடைய ரகசியம் காப்பாற்றப்படுமா? அல்லது கேலி செய்யப்பட்டு வெளியில் வந்து விடுமா? என்பதுதான்.
மிக சாதாரணமான ஒன்றுதான்.நம்மிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட எதுவும் ரகசியமாக வைக்க வேண்டியவை.நம்மை நம்பி கூறப்பட்ட வார்த்தைகளை வெளியிடுவது துரோகமும் கூட!தங்கள் ரகசியம் காக்கப்படும் என்ற ந்ம்பிக்கை மிகுந்தவர்களாக நீங்கள் இருந்தால் மற்றவர்கள் விரும்பும் நபராக இருப்பீர்கள்.
8 comments:
பயனுள்ள தகவல்களை தருவதற்கு நன்றிகள்..
ரகசியம் காக்க முடியாமல் போவது பலவீனமான மனதின் அடையாளம்.. உண்மையில் அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக முடியாது.
//நம்மிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட எதுவும் ரகசியமாக வைக்க வேண்டியவை.நம்மை நம்பி கூறப்பட்ட வார்த்தைகளை வெளியிடுவது துரோகமும் கூட!தங்கள் ரகசியம் காக்கப்படும் என்ற ந்ம்பிக்கை மிகுந்தவர்களாக நீங்கள் இருந்தால் மற்றவர்கள் விரும்பும் நபராக இருப்பீர்கள்.//
மிகவும் சரியாக சொன்னீர்கள்....
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பயனுள்ள தகவல்களை தருவதற்கு நன்றிகள்..
நன்றி கருன்
@சாகம்பரி said...
ரகசியம் காக்க முடியாமல் போவது பலவீனமான மனதின் அடையாளம்.. உண்மையில் அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக முடியாது.
ஆம்.சகோதரி உண்மை .நன்றி
@MANO நாஞ்சில் மனோ said...
//நம்மிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட எதுவும் ரகசியமாக வைக்க வேண்டியவை.நம்மை நம்பி கூறப்பட்ட வார்த்தைகளை வெளியிடுவது துரோகமும் கூட!தங்கள் ரகசியம் காக்கப்படும் என்ற ந்ம்பிக்கை மிகுந்தவர்களாக நீங்கள் இருந்தால் மற்றவர்கள் விரும்பும் நபராக இருப்பீர்கள்.//
மிகவும் சரியாக சொன்னீர்கள்....
நன்றி மனோ
அருமையான எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்
@Jana said...
அருமையான எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்
நன்றி ஜனா
Post a Comment