சில நம்பிக்கைகள் எப்படி ஏற்பட்ட்தென்று தெரியவில்லை.இன்னும் நீங்கள் இதை கேட்டிருப்பீர்கள்.வாயின் ஓரங்களில் சிறிதாக கொப்புளம் ஏற்பட்டிருக்கும்.பல்லி ஒண்ணுக்கு போய்விட்ட்து என்பார்கள்.மிகச் சரியாக பல்லி அந்த இட்த்தில்தான் ஒண்ணுக்கு போக வேண்டுமா?
அது ஒரு மூட நம்பிக்கைதான்.நிறைய இடங்களில் நான் கேட்ட்துண்டு.நானும் அதையே நம்பிக்கொண்டிருந்தேன்.மேற்சொன்னமாதிரியான கொப்புளங்கள் வந்தால் கொஞ்சம் உஷாராக வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்து விட்ட்து என்று அர்த்தம்.
நம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும்போது அடங்கியிருக்கும் கிருமிகள் தனது வேலையை ஆரம்பித்து விடுகின்றன்.பல்லி ஒண்ணுக்கு போவதும் அப்படித்தான்.ஒருவகை வைரஸ் கிருமியால் ஏற்படும் நோய் அது.Herpes simplex virus (HSV) எனப்ப்டும் வைரஸினால்தான் தோன்றுகிறது.
இந்த வைரஸில் இரண்டு வகை உண்டு.ஒருவகை வாயின் ஓரங்களில் தோன்றும் கொப்புளம்.நீர்க்கொப்புளம் போன்று இருக்கும்.சிலருக்கு வலி இருக்கும்.இன்னொரு வகை பிறப்புறுப்பில் நோயை உண்டாக்கும்.பிறப்புறுப்பில் இம்மாதிரி கொப்புளங்கள் வந்தால் அது பால்வினை நோய்.உடலுறவு மூலம் பரவும் ஒன்று.
எந்த வகையாக இருந்தாலும் இவற்றை முழுமையாக குணமாக்க வழி இல்லை.பெரும்பாலும் தானாக மறைந்துவிடும்.சிலருக்கு சிகிச்சை தேவைப்படும்.மீண்டும் மீண்டும் வரும்.நான் மட்டன் சாப்பிட்டேன்,சிக்கன் சாப்பிட்டேன் வந்துவிட்ட்து என்பார்கள்.வாழ்நாள் முழுக்க உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறையும்போதெல்லாம் இக்கிருமி தன் வேலையைக் காட்டும்.
இதுதான் என்றில்லை பல கிருமிகளும் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் விழும்போதுதான் தன் வேலையை காட்டும்.அப்போது ஆரோக்கியத்தை கூட்ட காய்கறிகள்,பழங்கள் உள்ளிட்ட உணவுகள் அதிகம் சேர்க்க வேண்டும்.இல்லாவிட்டால் உடல் தொடர்ந்து பிரச்சினை செய்ய ஆரம்பித்துவிடும்.
உடலில் கிருமித்தாக்கம் ஏற்படும்போதெல்லாம் நாம் கருத வேண்டியது நம் உடல்நோய் எதிர்ப்பு திறனை இழந்து விட்ட்து என்பதைத்தான்.அதற்கு காரணம் தேடவேண்டும்.சிலர் சத்துணவு எடுக்காமல் இருக்கலாம்.அல்லது மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம்.சரியாக தூங்காமல் போனாலும் எதிர்ப்பாற்றல் குறையும்.சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.மருத்துவரையும் அணுகலாம்.
16 comments:
ARUMAIYANA THGAVAL THANKS
பயனுள்ள தகவலுக்கு நன்றிகள்..
பல கிருமிகளும் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் விழும்போதுதான் தன் வேலையை காட்டும்.//
உண்மையான தகவல்.
இதற்கு அக்கி என்றொரு பெயரும் உண்டு. இதற்கு விமோசனமே இல்லை என்றுதான் கூறுகிறார்கள்..
பகிர்வுக்கு நன்றி.
http://anubhudhi.blogspot.com/
//உடலில் கிருமித்தாக்கம் ஏற்படும்போதெல்லாம் நாம் கருத வேண்டியது நம் உடல்நோய் எதிர்ப்பு திறனை இழந்து விட்ட்து //
ஆஹா புது தகவல்....!!!!
ஹே ஹே ஹே ஹே நான் உஷார் ஆகிட்டேன்....
தகவலுக்கு நன்றி மக்கா....
நல்ல தகவல்..
@சி.பி.செந்தில்குமார் said...
நல்ல தகவல்..
நன்றி சி.பி.
Mahan.Thamesh said...
ARUMAIYANA THGAVAL THANKS
நன்றி நண்பரே
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பயனுள்ள தகவலுக்கு நன்றிகள்..
thanks karun
@இராஜராஜேஸ்வரி said...
பல கிருமிகளும் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் விழும்போதுதான் தன் வேலையை காட்டும்.//
உண்மையான தகவல்.
நன்றி ராஜராஜேஸ்வரி
@Sankar Gurusamy said...
இதற்கு அக்கி என்றொரு பெயரும் உண்டு. இதற்கு விமோசனமே இல்லை என்றுதான் கூறுகிறார்கள்..
பகிர்வுக்கு நன்றி.
அக்கி என்பது வேறு சங்கர் .அதை herpes zoster என்று சொல்வார்கள்.நன்றி
@MANO நாஞ்சில் மனோ said...
//உடலில் கிருமித்தாக்கம் ஏற்படும்போதெல்லாம் நாம் கருத வேண்டியது நம் உடல்நோய் எதிர்ப்பு திறனை இழந்து விட்ட்து //
ஆஹா புது தகவல்....!!!!
ஹே ஹே ஹே ஹே நான் உஷார் ஆகிட்டேன்....
தகவலுக்கு நன்றி மக்கா....
நன்றி மனோ
@மாலதி said...
நல்ல தகவல்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
நல்ல பயனுள்ள பதிவு..
வாழ்த்துக்கள்..
@பாட்டு ரசிகன் said...
நல்ல பயனுள்ள பதிவு..
வாழ்த்துக்கள்..
நன்றி பாட்டு ரசிகன்
NALLA THAGAVAL NAAPARE
Post a Comment