Tuesday, April 19, 2011

பெண்களின் வாழ்வைக்கெடுக்கும் வக்கிரங்கள்.


அந்த இளைஞனை எனக்கு நன்றாக தெரியும்.பட்ட்தாரி.தற்காலிகமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தான்.சுமாரான கலர்.எப்போதும் பெண்களுக்கு ஓடிஓடி வேலை செய்வதில் ரொம்ப சமர்த்து.பெண்களும் சகஜமாக பழகினார்கள்.யாரும் தவறாக நினைக்க வாய்ப்பில்லை.
                                                                                                                                 
                                இரண்டு மாவட்டங்கள் தாண்டி ஒரு ஊரிலிருந்து அந்த பெண்ணுக்கு வரன் பார்க்க வந்தார்கள்.நல்ல இடமும் கூட.அந்த பெண்ணுக்கும் அதிக விருப்பம்.வழக்கம்போல தகவல் சொல்வதாக சொல்லிச் சென்றவர்கள் எந்த பதிலும் இல்லை.பெண்ணின் குடும்பம் என்னுடன் பணிபுரியும் ஒருவருக்கு வேண்டியவர்கள்.

                                கல்யாண தரகர் என் நண்பனை பார்க்க வந்திருந்தார்.நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்த்து.ஓடிஒடி உதவிய அந்த சமர்த்து பையனுக்கும்,பெண்ணுக்கும் நெருக்கம் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள்.மாப்பிள்ளை வீட்டாருக்கு என்னதான் தோன்றும்? ஆனானப்பட்ட சீதை பட்டபாடு தெரியாதா?

                                நண்பன் உணர்ச்சிவசப்பட்டு அந்த பெண்ணுக்கு போன் செய்துவிட்டான்.இவனுடைய உத்தரவு-அந்த பையனுடன் பேசுகிற வேலை வைத்துக்கொள்ள வேண்டாம்.”.பெண் கோபம் தலைக்கேறி கத்த ஆரம்பித்துவிட்ட்து.அவருடைய அம்மாவுக்கும் போன் செய்து சொல்லிவிட்டார்.அந்த பெண்ணின் அம்மா போன் செய்து ஏன் தம்பி இம்மாதிரி நினைக்கிறீர்கள்?என்றிருக்கிறார்.

                                 இவனுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் தரகர் சொல்லிய விஷயத்தை போட்டு உடைத்துவிட்டார்.அந்த ரொம்ப காயத்துக்குள்ளாகி நான் வேலைக்கே போவதில்லை என்று வீட்டில் இருந்து கொண்டார்.வேலைக்கென்று போனால் யாரிடமும் பேசாமலா இருக்க முடியும்.

                                  கொஞ்ச நாள் கழித்து கமல்ஹாசன் படம் என்று நினைக்கிறேன்.அநேகமாக தசாவதாரம்.தியேட்டரில் அந்த சமர்த்து பையனின் நண்பனை சந்தித்தோம்.அந்த பையன் எப்படி?’’ என்று கேட்டான் நண்பன். அவன் ஒரு புருடா சார்! அவனுடன் பேசும்  எல்லா பெண்களையும் இணைத்து கதை விடுவதுதான் அவனுடைய வேலை!அவன் காலேஜ்ல இருந்தே அப்படித்தான்”!

                              அந்த பையன் தன்னுடைய புகழை தமிழ்நாட்டில் தனக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் பரப்பிவிட்டான்.நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது வேறு! இரவு பத்து மணிக்கு எனக்கு போன் செய்தாள்,பார்த்துக்கொள் என்று காட்டுவானாம்.சாதராணமாக பழகுவதை வைத்தே பார்ப்பவர்கள் தவறாக நினைத்திருக்கிறார்கள் என்று நாங்கள் நினைத்திருந்தோம்.இதை எதிர்பார்க்கவில்லை.

                                பெரும்பாலான பெண்களும் இவனுடன் பழகினால் தவறாக நினைக்கமாட்டார்கள் என்பது மாதிரியான ஆட்களையே பேசுவதற்கு தேர்ந்தெடுப்பார்கள்.அவர்களால் இப்படி ஒரு பிரச்சினை.பணிபுரியும் இட்த்தில் சில நேரங்களில் ஆண்களின் உதவியும் தேவைப்படுவதுண்டு.யாரைத்தான் நம்பித் தொலைப்பது?
-

15 comments:

Unknown said...

கஷ்டம்தானுங்க

Arun Ambie said...

இந்த மாதிரி ஆட்களை ஓட விட்டு நாய விட்டுக் கடிக்க விடணும்.

Unknown said...

ம்ம்ம் வருந்ததக்கதுதான், யாரையும் நம்ம முடியாது

நிரூபன் said...

”அவன் ஒரு புருடா சார்! அவனுடன் பேசும் எல்லா பெண்களையும் இணைத்து கதை விடுவதுதான் அவனுடைய வேலை!அவன் காலேஜ்ல இருந்தே அப்படித்தான்”!//

சந்தேகத்தினையும், இணைத்துக் கதை விடும் இயல்பினையும் பற்றி விளக்கியுள்ளீர்கள். இவனுங்க எல்லாம் திருந்தவே மாட்டானுக.

Sankar Gurusamy said...

இப்படிப்பட்ட திருடர்களுக்கு கடவுள் சரியான தண்டனையை நிச்சயம் வழங்குவார்..

இப்படிப்பட்டவர்களுடன் தான் பெண்கள் பெரும்பாலும் விரும்பிப் பழகுகிறார்கள். இவர்களின் திருட்டுத்தனம் என்றாவது தெரிய வரும்போது திரும்பி வரமுடியாத அளவுக்கு அவனிடம் மாட்டியும் இருப்பார்கள்..

அவர்களின் அறியாமையை எண்ணி வருத்தமாக உள்ளது. இனியாவது திருந்தினால் சந்தோசமே...

இப்படிப்பட்டவர்களிடம் இருந்து நம் முகம் தெரியாத சகோதரிகள் தப்பிப்பதற்காக பிரார்த்திப்போம்.

http://anubhudhi.blogspot.com/

MANO நாஞ்சில் மனோ said...

நம்பவே கூடாது....

MANO நாஞ்சில் மனோ said...

சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...

test said...

நானும் நிறையப் பேரைப் பார்த்திருக்கிறேன்! ஆனால் கொடுமை என்னன்னா இப்படியான ஆண்களைத்தான் பெண்களும் விரும்பிப் போய் பழகுவார்கள்! என்ன செய்வது...

shanmugavel said...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

சாகம்பரி said...

பெண்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இதை யார் போய் சொல்வது?

சி.பி.செந்தில்குமார் said...

ஆண்களிடம் ஜாக்கிரதையாக பழக பெண்கள் தங்களுக்குள் வேலி போட்டுக்கொள்ள இந்த மாதிரி ஆட்கள் வகை செய்கிறார்கள்

தனிமரம் said...

இதுவும் ஒரு உளவியல் நோய் என்கிறார்கள் உண்மை நான் அறியேன்.

shanmugavel said...

@சி.பி.செந்தில்குமார் said...

ஆண்களிடம் ஜாக்கிரதையாக பழக பெண்கள் தங்களுக்குள் வேலி போட்டுக்கொள்ள இந்த மாதிரி ஆட்கள் வகை செய்கிறார்கள்

ஆம். நன்றி நண்பரே!

shanmugavel said...

@Nesan said...

இதுவும் ஒரு உளவியல் நோய் என்கிறார்கள் உண்மை நான் அறியேன்.

இருக்கலாம்.நன்றி நண்பரே!

shanmugavel said...

@சாகம்பரி said...

பெண்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இதை யார் போய் சொல்வது?

நமக்குத் தெரிந்தவர்களிடம் நாம் சொல்லலாம்.நன்றி சகோதரி