Monday, April 11, 2011

பாலியல் தொல்லையை எதிர்கொண்ட ஆண்-நேர்காணல் தொடர்ச்சி

நண்பர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்?

                                நண்பர்கள் என்னை ரொம்பவே சங்கடப்பட வைத்தார்கள்.அதில் ஒரு நண்பன் இரண்டாண்டுகளாக மிக நெருக்கம்.கிட்ட்த்தட்ட குடும்ப நண்பர்.இரண்டு குடும்பங்களிலும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்போம்.அவனும் மாறிப்போனான்.அந்த பெண் அடிக்கடி அவனை அழைத்து பேச ஆரம்பித்தார்.இருவரும் ஜோக்கடித்து சிரித்துக் கொண்டார்கள்.

நீங்கள் அப்பெண்ணின் செயல்பற்றி நண்பனிடம் பேசியிருக்கலாமே?

                                அது சரியாக இருக்காது.அந்த பெண்ணின் இமேஜ் பாதிக்கப்படும் என்பது இருந்தாலும் எந்த ஆணும் இதை நம்புவது கஷ்டம்.ஏற இறங்க பார்ப்பார்கள்.



ஏன் ஏற இறங்க பார்க்கவேண்டும்?

                                 வழக்கமாக பெண்கள் இப்படி இருப்பதில்லை.இது ஏதோ அபூர்வமாக நடக்கும் ஒரு விஷயம்.அவர்கள் இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று.பெண்கள் வேலைக்கு வந்தால் அவர்கள் வேலையை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டிருப்பார்கள்.அல்லது அவர்களுக்கு நேரும் தொல்லையை சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும்.அதனால் எந்த ஆணும் இதைச்சொன்னால்  “அடேயப்பாஎன்பார்கள்.

நண்பர்கள் மாறிப்போக என்ன காரணம்?

                               பொதுவாக ஒரு பெண் நன்றாக பேசினாலே பலர் சந்தோஷமாகிவிடுவார்கள்.இது வாலிப வயதின் மனோநிலையும்கூட! எதிர்பாலினர் அங்கீகாரம் என்று சொல்வோம்.பெண் அவனை மிகவும் மதிக்கும்போது நண்பர்கள் இரண்டாம் பட்சம்தான்.நண்பன் போலவே காட்டிக்கொண்டு மறைமுகமாக என்னுடைய திட்டங்கள், கருத்துக்கள் எல்லாமும் அந்த பெண்ணிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.நான் பேசுவதை குறைத்துக்கொண்டேன்.


பெண் ஊழியர்கள் இல்லையா?

                              பெண்கள் உணர்வுபூர்வமாக இன்னொரு பெண்ணை சார்ந்தே இருப்பார்கள்.ஓரளவு அவர்களுக்கு விஷயம் தெரிந்திருந்தாலும் எனக்கு ஆதரவாக பேசுவது கஷ்டம்.அதை வேறுமாதிரி கொண்டுசெல்வார்கள்.உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவே இருப்பதுபோல் பட்ட்து.

அந்த பெண் உங்களுடன் பேசுவதேயில்லையா?

                               கிட்ட்த்தட்ட இல்லை.அவருடைய வேலையை மற்றவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். நான் அருகில் இருக்க நேரும்போது செல்போனை காதில் வைத்துக்கொண்டு காதலனுடன் பேசும் தோரணையில் பேசிக் கொண்டிருப்பார்.என் அருகில் உள்ளவரிடம் வந்து மணிக்கணக்கில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்.


வேறு என்ன மாதிரி பிரச்சினைகள்?

                               எனக்கு முக்கியத்துவம் போய்விட்ட்து.ஒழுங்காக சிரத்தையுடன் வேலை செய்பவன் நான்.ஆனால் எல்லா ஆலோசனைகளுக்கும் உபயோகம் இல்லாத ஒருவரை அழைத்தார்கள்.சுத்தமான அரசியல்.நான் நல்லவற்றை சொன்னால்கூட காதுகொடுக்க ஆட்கள் இல்லை.தலைமை அலுவலகத்துக்கு போகவேண்டும் என்றால் யார் போவது என்பதை அந்த பெண் முடிவுசெய்தார்.நான் போய்க்கொண்டிருந்தேன்.அதுவும் என் நண்பர் வந்து கேட்பார்,அவர் போகிறாராமே?என்னுடைய கருத்தை கேட்டுவிட்டு போய் அந்த பெண்ணிடம் சொல்வார்கள்.என்னை வெறுப்பேற்றிவிட்ட்தாக அனைவரும் சேர்ந்து சிரிப்பார்கள்.

நீங்கள் தனிமைப்படுத்தப் பட்டீர்கள் இல்லையா?

                               மோசமான மனநிலைக்கு வந்துவிட்டேன்.வேலையை விட்டுவிடலாமென்று தோன்றியது.யாருடனும் பேசப் பிடிக்கவில்லை.என்னை ஒதுக்குவதுபோல உணர்ந்தேன்.வேறு இட்த்திற்கு மாற்றல் கேட்டேன்.அதை தடுக்க முயற்சிகள் நடந்தன.என் முகத்தை பார்த்த என் அதிகாரி நான் உனக்கு மாற்றல் தருகிறேன் என்றார்.

-

12 comments:

சக்தி கல்வி மையம் said...

ஒரு விழிப்புணர்வு பதிவு..

சி.பி.செந்தில்குமார் said...

உங்க ஃபிரண்ட் ரொம்ப நல்லவ்ரா இருக்காரே..

Mathuran said...

அந்த பொம்பளய முதல்ல போட்டுதள்ளனும் பாஸ்...............

Ramesh said...

superb...

MANO நாஞ்சில் மனோ said...

விழிப்புணர்வு பதிவு அசத்தல்....

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு விழிப்புணர்வு பதிவு..

நன்றி வாத்யாரே

shanmugavel said...

@சி.பி.செந்தில்குமார் said...

உங்க ஃபிரண்ட் ரொம்ப நல்லவ்ரா இருக்காரே..

இப்படியும் இருக்கத்தானே செய்றாங்க,நன்றி நண்பரே

shanmugavel said...

@Mathuran said...

அந்த பொம்பளய முதல்ல போட்டுதள்ளனும் பாஸ்......

பாவம் விடுங்க பாஸ்,நன்றி

shanmugavel said...

@றமேஸ்-Ramesh said...

superb...

நன்றி றமேஸ்

shanmugavel said...

@MANO நாஞ்சில் மனோ said...

விழிப்புணர்வு பதிவு அசத்தல்....

நன்றி மனோ

நிரூபன் said...

ஆணகளை மடக்க பெண்கள் எவ்வாறான தூண்டில் போடுகிறார்கள் என்பதை மட்டும் விளக்கும் முகமாக பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இனி வரும் அடுத்த பகுதிகளில் தான் மேட்டரே இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்த ஆண் விலை போனானா? இல்லை? எப்படியான தொல்லைகள் ஆணுக்குப் பெண்களால் இழைக்கப்பட்டன என்பதனையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஏன்னா.. நாம எஸ்கேப் ஆகத் தான்...

திங்கள் சத்யா said...

உங்கள் நண்பரா அல்லது அந்தப் பெண்ணா? யார், டாக்டரிடம் போவது என்பதில் ஐயம் எழுகிறது.

“இதேபோல் நண்பரை மேட்டருக்கு அழைக்கும் ஒரு பெண்ணை” நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலையும் அதை எனக்கு ஊன்மையைப்போல் காட்டியது. ஆனால், பிறகு அது உண்மை இல்லை என்பதையும், நண்பர் நன்றாக இதுபோன்ற கதைகளை அள்ளிவிடுவார் என்பதையும் தி.நகர் அருணா இன்னில் வைத்து தெரிந்துகொண்டேன்.

“என்னை அவ கூப்புட்றா, கூப்புட்றா” எனச் சொல்லிக்கொண்டு காவல் நிலையம், பத்திரிகை அலுவலகம்வரை அலைந்த ஒருவரையும் அக்குவேறாக ஆணி வேராக அலசியிருக்கிறேன்.

எனவே, இந்தப் பாலியல் தொல்லை கட்டுரைய படிப்பதோடு நிறுத்திவிடுங்கள். நமக்கு ஒரு பிகர் இந்த மாதிரி அழைப்பு விட்டால் நல்லது என்று கற்பனையில் திரியவேண்டாம்.