Friday, April 22, 2011

மனித மேம்பாட்டுக்கு இறைவன் கொடுத்த வரம்.


                            தனி மனிதன் ஒருவன் தன்னை மேம்படுத்திக்கொள்ள இறைவன் கொடுத்த வரம் புத்தகங்கள்.இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இயற்கை அல்லது எழுத்தாளர்கள்.எப்படி எடுத்துக்கொண்டாலும் புத்தகத்தின் ஆற்றலை மட்டும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

                           வரலாற்றை நமக்கு தருபவை புத்தகங்கள்.சரித்திரத்தை மாற்றிக்காட்டியவையும் எழுத்துக்களே! தனி மனிதனை மட்டுமன்றி நாட்டை உயர்த்தவும் இவை பயன்பட்டன.புரட்சியை தூண்டின.கிளர்ச்சியை உருவாக்கின! புத்தகங்களே மாற்றத்தின் திறவுகோல்.

                           பள்ளிப்பாட்த்தை தாண்டி கல்வி புத்தகங்களில்தான் இருக்கிறது.வாசிப்பை நேசிக்காத மனிதன் இருந்தும் இல்லாதவனாகிறான்.உலகில் அவன் பெற்ற பேறு எதுவும் இல்லை.உலகைப்பற்றிய புரிதலையும்,மென்மையையும் புத்தகங்கள் மட்டுமே தரும்.வாழ்க்கையை சொல்லித்தருவதும் அவைதான்.

                            பள்ளிப்புத்தகங்கள் தவிர்த்து நூல் வடிவில் நான் படித்த புத்தகம் பாரதியார் கவிதைகள்.நான் உண்மையில் அதிர்ஷ்டசாலி.மிக சிறு வயதிலேயே நான் படித்தேன். பிறகு அடிக்கடி படித்தேன்.மிக இளம்வயதிலேயே பாரதி இறந்துவிட்டாலும் அழியாப்புகழ் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதை பாருங்கள்.


                                   நான் பார்த்த பெரும்பாலான வலைப்பதிவுகளில் பாரதி வரிகள் தான் இருக்கின்றன.என்னுடைய வலைப்பதிவுலும் பாரதியே!தனது எழுத்துக்களால் என்னை வழி நட்த்தியது மகாகவியே! பல்வேறு தருணங்களில் குறிப்பிடிருக்கிறேன்.ஒரு சிறிய புத்தகம் என் வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றியது.வாழக்கற்றுக்கொடுத்த்து.என்னுடைய முதல் இடுகையும் இதைப் பற்றியதே!

                                  பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு விடுப்பில் நண்பன் ஒருவன் வீட்டிற்கு சென்றிருந்தேன்.கல்கியின் பொன்னியின் செல்வன் பைண்டிங் செய்து அடுக்கியிருந்த்து.கல்கியில் தொடராக வந்த்தை அச்சகத்தில் கொடுத்து தயாரித்து இருந்தார்கள்.அப்போதிருந்து எனக்கும் ஏதாவது புத்தகம் வாங்கும் எண்ணம் ஏற்பட்ட்து.

                                   நான் ஆனந்த விகடன் வாங்க ஆரம்பித்தேன்.நண்பன் வீட்டில் பார்த்தமாதிரி நானும் தொடர்கதைகளை சேகரிக்க ஆரம்பித்தேன்.அச்சகத்தில் கொடுக்காமல் நானே பைண்டிங் செய்து புத்த்கம் சுற்றி வெட்டுவதற்கு மட்டும் எடுத்துப்போவேன்.அடுத்து  கோமல் சுவாமிநாதன் ஆசிரியராக இருந்த சுபமங்களா இதழ்கள் இப்படி வைத்திருக்கிறேன்.

                                   என்னுடைய அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டவை இதுதான்.புத்தகங்கள் தருவதை வேறு எதுவும் உங்களுக்கு தராது.பரிசளிக்கும்போது புத்தகங்களை கொடுங்கள்.ஒரு சிறுகதை கூட மனிதனை மாற்றியமைத்த கதைகள் ஏராளம் உண்டு.நீங்கள் தேடுவது எதுவும் புத்தகங்களில் இருக்கிறது.

 
புத்தக நாளுக்கான பதிவு.
-

8 comments:

இராஜராஜேஸ்வரி said...

புத்தகங்களே மாற்றத்தின் திறவுகோல்.//
Fantastic.

MANO நாஞ்சில் மனோ said...

கண்டதையும் படிக்கிறவன் புத்திசாலி ஆகிருவான்னு சொல்வாங்க. சரிதான் இல்லையா.....

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

புத்தகங்களே மாற்றத்தின் திறவுகோல்.//
Fantastic.

தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@MANO நாஞ்சில் மனோ said...

கண்டதையும் படிக்கிறவன் புத்திசாலி ஆகிருவான்னு சொல்வாங்க. சரிதான் இல்லையா.....

ஆமாம் மனோ நன்றி

சாகம்பரி said...

ஒரு தரமான எழுத்து நம்முடைய கிரியேட்டிவிட்டியை தூண்டிவிடும். சிறிய வயதில் இரும்புக்கை மாயாவி , பிறகு அமரர் கல்கி, லட்சுமி வாழ்க்கை புரிந்தபின் கண்ணதாசன் .... எத்தனை பேர்கள் என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் படித்த புத்தகங்கள்தான் கூறும். அருமையான நினைவு கூறல்( எனக்கு) நன்றி.

shanmugavel said...

@சாகம்பரி said...

ஒரு தரமான எழுத்து நம்முடைய கிரியேட்டிவிட்டியை தூண்டிவிடும். சிறிய வயதில் இரும்புக்கை மாயாவி , பிறகு அமரர் கல்கி, லட்சுமி வாழ்க்கை புரிந்தபின் கண்ணதாசன் .... எத்தனை பேர்கள் என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் படித்த புத்தகங்கள்தான் கூறும். அருமையான நினைவு கூறல்( எனக்கு) நன்றி.

உண்மைதான் சகோதரி,நன்றி

Sankar Gurusamy said...

புத்தகங்கள் வாங்குவதை வெட்டிச் செலவு என்று கூறும் குடும்பங்கள் இன்னும் இருக்கின்றன. முதலில் பத்திரிக்கை படிக்க ஆரம்பிக்க வேண்டும். டிவி செய்திகள் வந்த பிறகு இந்தப் பழக்கமும் குறையத்தொடங்கிவிட்டது.

சிறப்பான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

shanmugavel said...

@Sankar Gurusamy said...

புத்தகங்கள் வாங்குவதை வெட்டிச் செலவு என்று கூறும் குடும்பங்கள் இன்னும் இருக்கின்றன. முதலில் பத்திரிக்கை படிக்க ஆரம்பிக்க வேண்டும். டிவி செய்திகள் வந்த பிறகு இந்தப் பழக்கமும் குறையத்தொடங்கிவிட்டது.

சிறப்பான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

நன்றி சங்கர்