நாம் உண்ணும் உணவுகள் கலோரியால் மதிப்பிடப்படுகிறது.பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீது எவ்வளவு கலோரி அடங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.கடும் உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அதிக கலோரிகளும்,வளரிளம் பருவத்தினர் குழந்தைகள் என்று கலோரிகளின் தேவை வேறுபடும்.கீழே அளவுகள் தரப்பட்டுள்ளன.
குழந்தைகள் (2-6 வயது)------------------1200-1800 கலோரி
(7-12 வயது)------------------1800-2000
இளம்பருவத்தினர் –ஆண்கள்---------------2500
பெண்கள்---------------2200
வயது வந்தோர்- ஆண்கள்-(உடல் உழைப்பு –2400
இல்லாதவர்கள்)
உடல் உழைப்பு உள்ளவர்கள்-------2800
-பெண்கள்---2400
இப்போது உங்களுக்கு எவ்வளவு கலோரி தேவைப்படும் என்று தெரிந்து விட்ட்து.எந்தெந்த பொருளில் எத்தனை கலோரி இருக்கிறது என்று தெரியவேண்டும்.கடையில் வாங்கும் உணவுப் பொருட்கள் மீது அதிலேயே குறித்திருப்பார்கள்.அதிகம் பயன்படுத்தும் முக்கியமான சில பொருட்களுக்கு மட்டும் மதிப்பு தருகிறேன்.
இட்லி 1 -85 கலோரி
அரிசிசாதம்-100கிராம்- 120 கலோரி
சப்பாத்தி 1 - 85 கலோரி
பால் 1 கப் -65 கலோரி
முட்டை 1 -85 கலோரி
பருப்பு வகை அரைகப்-85 கலோரி
சிக்கன் 100 கிராம் -150 கலோரி
மட்டன் 100 கிராம் -340 கலோரி
வாழைப்பழம் 100 கி -80 கலோரி
ஆப்பிள் 100 கிராம் -45 கலோரி
காய்கறிகள்(தோராயமாக,100கி - 10-20 கலோரி
உருளைக்கிழங்கு 100 கிராம் – 80 கலோரி
உதாரணமாக அதிக உடல் உழைப்பில்லாதவராக இருந்தால் 2400 கலோரி தேவைப்படுகிறது.நீங்கள் சாப்பிட்ட உணவை கணக்கிட்டு பார்த்து போதுமான அளவை தெரிந்து கொள்ளலாம்.குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் ஆரோக்கியத்தில் கேடு உண்டாகும்.
செரிமானம் ஆகி விட்ட்தை அறிந்து சாப்பிடச் சொல்கிறார் வள்ளுவர்.இதுவரை யாரும் அதை மறுக்கவில்லை.காய்கறி,பழங்களில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் அதில் உள்ள தாதுக்கள் உயிர்ச்சத்துகளுக்காக அதிகம் உண்ண வேண்டும்.சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி உண்ணவேண்டும்.
16 comments:
வடை.....
பிச்சிட்டீங்க போங்க..
அப்பிடியே வடைல எத்தின கலோரின்னு சொன்னாக்கா
நம்மளுக்கு உதவியா இருக்கும்..ஹிஹி
பயனுள்ள தகவல்..நன்றி
ஒரு போஸ்ட் சர்ச்சை, ஒரு போஸ்ட் யூஸ்ஃபுல்.. ஹி ஹி நல்ல ரேஷியோ
மிகப் பயனுள்ள பதிவு... பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
நாங்கள் எந்த உடலுழைப்பும் செய்வதில்லை என்பதால் 1500இற்கு குறைவானதே போதும்.
சிவா, பதிவுலக வடையில கலோரி ரொம்ப அதிகமா இருக்குதுங்க. அதிகமா ஆடைப்படாதீங்க.
கலோரி கணக்கீடு நல்ல பதிவு.
@மைந்தன் சிவா said...
வடை.....
காலையில டிபனோட! நன்றி சிவா
@மைந்தன் சிவா said...
வடை.....
காலையில டிபனோட! நன்றி சிவா
@மைந்தன் சிவா said...
பிச்சிட்டீங்க போங்க..
அப்பிடியே வடைல எத்தின கலோரின்னு சொன்னாக்கா
நம்மளுக்கு உதவியா இருக்கும்..ஹிஹி
பயனுள்ள தகவல்..நன்றி
பதில்தான் கந்தசாமி சார் சொல்லிட்டாரே!
@சி.பி.செந்தில்குமார் said...
ஒரு போஸ்ட் சர்ச்சை, ஒரு போஸ்ட் யூஸ்ஃபுல்.. ஹி ஹி நல்ல ரேஷியோ
எது சர்ச்சைன்னுதான் புரியலை.நன்றி
@Sankar Gurusamy said...
மிகப் பயனுள்ள பதிவு... பகிர்வுக்கு நன்றி..
நன்றி சங்கர்
@அனாமிகா துவாரகன் said...
நாங்கள் எந்த உடலுழைப்பும் செய்வதில்லை என்பதால் 1500இற்கு குறைவானதே போதும்.
அப்டியா? தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
@DrPKandaswamyPhD said...
சிவா, பதிவுலக வடையில கலோரி ரொம்ப அதிகமா இருக்குதுங்க. அதிகமா ஆடைப்படாதீங்க.
உண்மைதான் சார்.நன்றி
சாகம்பரி said...
கலோரி கணக்கீடு நல்ல பதிவு.
நன்றி சகோதரி
பதிவுக்கு நன்றி. நம்மில் பலருக்கு இதுபற்றி அக்கரையில்லை.
ஒரு நபருக்கு, நாளொன்றுக்கு (30கலோரி/கிலோ) ஒரு கிலோவுக்கு 30கலோரி வீதம் உணவு எடுத்துக்கொண்டால் சீரான எடையோடு வாழலாம்
Post a Comment