வலைப்பதிவுகளை படிக்கும் வாசகர்கள் எத்தனை ஆயிரம் பேர் இருப்பார்கள் என்று சரியாக தெரியாது.இவர்களில் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கலாம்.கணினியும்,இண்டர்னெட் இணைப்பும் வைத்திருப்பவர்கள் அல்லது அலுவலகத்தில் இந்த வசதி இருப்பவர்கள்.வாசகர்கள் எண்ணிக்கை மேலும் கூடும் என்பதுதான் இன்றைய எதிர்பார்ப்பு.
மாற்றங்கள் ஒன்றே மாறாத்து என்று சொல்லப்பட்டுவிட்ட்து.பிரபல பத்திரிகைகள் உள்பட வாசகர்களின் விருப்பமும் மாறிக்கொண்டே இருக்கிறது.ஆனால் எப்போதும் வாசகர்களின் தேர்வு சினிமாவும் அரசியலும்தான்.இப்போதும் பிரபல பத்திரிகைகளின் அட்டை இந்த இரண்டையும் தாங்கித்தான் வெளிவருகிறது.
சினிமா அனைத்து தரப்பினரையும் கவர்ந்துவிட்ட ஒரு ஊடகம்.சினிமா பற்றிய செய்திகள் மீது எப்போதும் மோகம் இருக்கவே செய்கிறது.நம்முடைய ஆகச்சிறந்த பொழுதுபோக்கு அனைத்தும் சினிமா தொடர்பானவை.சினிமாவிலும் கூட நாலு ஃபைட்,கவர்ச்சி நடிகை ஒருவரின் நடனம் இருந்தால் போதும் என்று நினைத்த காலம் உண்டு.இப்போது நல்ல முயற்சிகள்,யதார்த்த திரைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.
எந்த தனிமனிதனும் அரசியல் சார்பற்று இருப்பது சாத்தியமல்ல.குடிமகனின் வாழ்க்கையை தீர்மானிப்பதில் அரசியலே முக்கிய பங்கு வகிக்கிறது.சிலிண்டர் விலையேற்றம் முதல் மற்ற விலைகள்,வாழ்க்கைத்தரம்,வேலை வாய்ப்புகள் எல்லாம் அரசியல்வாதிகள் தீர்மானிக்கவேண்டியிருக்கிறது.அரசியல் தொடர்பான செய்திகளுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கவே செய்யும்.ஆனால் பெரும்பாலானவை வெற்று பரபரப்பாக ஆயுள் குறைந்த செய்திகளாகவும் இருக்கின்றன.இவை ஒரு கட்ட்த்தில் சலிப்பையும் ஏற்படுத்திவிடும்.
சினிமா,அரசியலுக்கு அடுத்து,பாலியல், தனிமனித தேவைகள்,விழிப்புணர்வுகள் குறித்த பகிர்வுகள் இருக்கின்றன.இவையும் சில நேரம் வரவேற்பு பெறுகிறது.இதுவரை பார்த்தவை செய்திகள்தான் என்பதை கவனியுங்கள்.இவைதவிர கதைகள்,கவிதைகள்,சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்பவை இருக்கின்றன.நகைச்சுவைக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும்.
வலைப்பதிவிலோ,பத்திரிகையிலோ படைப்புகள் என்பதே எழுதும் தனிப்பட்ட ஒருவரின் திறமை சார்ந்த விஷயம்.பதிவரின் ஆற்றல் வெளிப்படுவது சிறுகதைகள்,கவிதைகள்,சிந்தனையை தூண்டும் ஆழமான கட்டுரைகளில்தான்.ஆனால் இதற்கு வரவேற்பு மிகவும் குறைவு.
வலைப்பதிவுகள்தான் என்றில்லை,பிரபல பத்திரிகைகளிலும் இதேநிலைதான்.விகடனில் தொடங்கி நான் வாரப்பத்திரிக்கை படிக்கத்துவங்கிய காலத்தில் –இருபதாண்டுகளூக்கு முன்பு-தொடர்கதைகள் கோலோச்சிக்கொண்டிருந்தன.சாகித்ய அகாடமி பரிசு பெற்ற கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமத்து மக்கள் நாவல் ஆனந்த விகடனில் தொடராக வந்த நாவல்தான்.சிறுகதைகளும் இரண்டு,மூன்றாவது இருக்கும்.இப்போது தொடர்கதைகள் போன இடம் தெரியவில்லை.
படைப்புகள் என்பவை பொறுமையாக கவனம் செலுத்தி படிக்கவேண்டிய ஒன்று.இன்றைய அவசர வாழ்க்கை இதற்கு இடம் தரவில்லை என்பதே உணமை.போகட்டும்.இவற்றால் மனிதனுக்கு நனமை இருக்கிறதா? இதையெல்லாம் எதற்காக படிக்கவேண்டும்?
அண்டை மாநிலமான கேரளாவில் நாவல்,சிறுகதை,நல்ல கவிதைகளுக்கு,எழுத்தாளனுக்கு இருக்கும் வரவேற்பை கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே? அதற்கான காரணத்தை இன்னொரு பதிவில் அலச முயற்சி செய்கிறேன்.இன்னொன்றும் உங்களுக்கு தெரியும்.நம்மை விட கேரளம் சமூக மேம்பாட்டில்(கல்வியறிவு,பிறப்பு விகிதம்,இறப்பு விகிதம் இன்ன பிற.....) முன்னணியில் இருக்கிறது.இதற்கு தரமான கலை,இலக்கியம் தந்த மதிப்பீடுகள்தான் காரணம் என்று எனக்கு தோன்றுகிறது.
தனி மனிதன் என்பவன் கிணற்றுத்தவளைதான்.அவனுடைய அனுபவங்களில் இருந்து மட்டுமே அனைத்தும் கற்றுக்கொள்ள முடியாது.பலருடைய விரிவான வாழ்க்கையை,அதையொட்டிய சிந்தனையை இலக்கியம்தான் வழங்கமுடியும்.தரமான படைப்புகள் சிறப்பான வாழ்க்கையை உறுதி செய்யக்கூடியவை.முன்பே சொன்னது போல அவசர வாழ்க்கை தடையாக இருந்தாலும் முயற்சி செய்தால் வாசகருக்கு மட்டுமில்லாமல் நாட்டுக்கும் நல்லதே!
14 comments:
இன்றைய அவசர உலகில் பல அருமையான பதிவுகள் தவறவிடப்படுகின்றன என்பது உண்மை தான் சகோ,
தமிழ் வலைப்பதிவானது காத்திரமான படைப்புக்கள் எனும் நிலையில் நின்றும் நீங்கி,
ஹிட்ஸ் எனும் நிலையில் நர்ந்து கொண்டிருப்பது தான் இதற்கான காரணம் என நினைக்கிறே.
நல்ல பதிவு.
நல்ல தரமான படைப்புக்களை தேடிப் படிக்க வேண்டும். ஆதரவு கொடுக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்.
தங்கள் கருத்து நியாயமானதுதான் .இன்றைய வாசகர்களின் கவனம் பெரும்பாலும் கேளிக்கைகள் மீதே இருப்பதால் நல்ல கருத்துக்களுக்கு வரவேற்பு குறைவுதான் .பாவம் பதிவர்கள் .தங்கள் ரேட்டிங் ஐ இறங்க விடாமல் பார்த்துக்கொள்ள மொக்கைகளை இடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் .ஒரு சர்வே முடிவின்படி 60 சதவீதம் வாசகர்கள் பதிவின் தலைப்பை மட்டுமே படிக்கிறார்களாம்.......
@நிரூபன் said...
இன்றைய அவசர உலகில் பல அருமையான பதிவுகள் தவறவிடப்படுகின்றன என்பது உண்மை தான் சகோ,
தமிழ் வலைப்பதிவானது காத்திரமான படைப்புக்கள் எனும் நிலையில் நின்றும் நீங்கி,
ஹிட்ஸ் எனும் நிலையில் நர்ந்து கொண்டிருப்பது தான் இதற்கான காரணம் என நினைக்கிறே.
ஆம் நிரூபன் நன்றி
2Rathnavel said...
நல்ல பதிவு.
நல்ல தரமான படைப்புக்களை தேடிப் படிக்க வேண்டும். ஆதரவு கொடுக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா
@koodal bala said...
தங்கள் கருத்து நியாயமானதுதான் .இன்றைய வாசகர்களின் கவனம் பெரும்பாலும் கேளிக்கைகள் மீதே இருப்பதால் நல்ல கருத்துக்களுக்கு வரவேற்பு குறைவுதான் .பாவம் பதிவர்கள் .தங்கள் ரேட்டிங் ஐ இறங்க விடாமல் பார்த்துக்கொள்ள மொக்கைகளை இடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் .ஒரு சர்வே முடிவின்படி 60 சதவீதம் வாசகர்கள் பதிவின் தலைப்பை மட்டுமே படிக்கிறார்களாம்
உண்மைதான் பாலா நன்றி
வலைப்பதிவு என்ற ஒரு இடத்தை நாம் எதற்காக பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் பதிவின் நோக்கமாக இருக்கும். நல்ல பதிவுகளுக்கு ஹிட்ஸ் குறைவுதான். ஆனால் பொறுப்பான பதிவுகள் கல்லில் செதுக்கும் சித்திரங்கள் போல , ஆயுட்காலம் அதிகம். வரும் சந்ததியினருக்கு பல விசயங்களை கொண்டு சேர்க்கும் டைம் கேப்சூல் போலவே என் வலைபதிவை கையாளுகிறேன். இது மன நிறைவைத் தருகிறது. அதுபோலவே ஒரு மலையாள வலைப்பூவில மகிழம்பூச்சரம் லிஸ்ட் ஆகியுள்ளது. அதிலிருந்து PV அதிகம். Let us wait for some more time to make this better.
தமிழ் வலைப்பதிவானது காத்திரமான படைப்புக்கள் எனும் நிலையில் நின்றும் நீங்கி,
ஹிட்ஸ் எனும் நிலையில் நர்ந்து கொண்டிருப்பது தான் இதற்கான காரணம் என நினைக்கிறே.
உண்மைதான் நிருபன் நீங்கள் சொன்னதைத்தான் நானும் வழிமொழிகின்றேன். பதிவர்களின் அருமையான சிந்தனை திசைமாறிப் போவது வருந்தத்தக்க விடயம்.
இந்த நிலை மாறவேண்டும்.
நலாதொரு பகிர்வு நன்றி சகோதரரே.
உண்மைதான் தோழரே..
எனக்கு இதில் பெரிய வருத்தமே உண்டு..
சினிமா கதாநாயகிகளின் படம் என்ற
கட்டுரைக்கு இண்ட்லியில் போய் பாருங்கள் 450 க்கும் மேற்பட்ட ஓட்டுகள்..
ஆனால் எனது சிவயசிவ என்னும் பக்தி வலைத்ளத்திற்கு 10 - 15 ஓட்டுகள் விழுந்தாலே பெரிய விசயமாக இருக்கிறது..
காலம் எப்போ மாறுமோ ?
வாய்ப்பிருந்தால் எம் வலைத்தலைத்தை பார்வையிடுங்கள்
தோழர்களே..
இரை தேடுவதோடு இறையும் தேட வாருங்கள் எம் தளத்திற்கு...
அன்புடன் அழைக்கிறோம்..
http://sivaayasivaa.blogspot.com
@சாகம்பரி said...
மலையாள உலகிலும் கலக்குங்க சகோதரி.நன்றி.
@அம்பாளடியாள் said...
ஆம்.தங்கள் கருத்துரைக்கு நன்றி
@சிவ.சி.மா. ஜானகிராமன் said...
உண்மைதான் தோழரே..
எனக்கு இதில் பெரிய வருத்தமே உண்டு..
வருத்தம் வேண்டாம் தோழரே! உங்களுக்கும் சிறப்பான இடம் இருக்கிறது.நன்றி..
அலுவலக மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், பொழுது போக்கிற்குமே இப்போது இணையம் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது. எனவே பொழுதுபோக்கு அம்சம் தரும் வலைப்பதிவுகள் அதிக பிரபலமாகுகின்றன.
வலைப்பதிவுகளில் நல்ல கருத்துக்கள் கூறும்போது வாசகர்களின் எண்ணிக்கையைப் பார்க்காமல், ஒரு கொள்கையோடு இருப்பது ஒரு சாதனையே.
அதை தொடர்ந்து செய்துவரும் திரு ஷண்முகவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
http://anubhudhi.blogspot.com/
நல்ல இலக்கியம் தான் மனிதனை உன்னதப்படுத்தும்.உயிரோட்டமான பதிவிற்கு நன்றி.
Post a Comment