Friday, July 8, 2011

காதலுக்கு–கள்ளக்காதலுக்கும்- துணை போவது யார்?


                           ஒரு காதல் ஜோடி ஓடிப்போய்விட்டார்கள்.அவர்களது காதல் ஊர் உலகத்துக்கு தெளிவாகவே தெரிந்திருந்த்து.காவல்துறையில் பெண் வீட்டார் புகார் செய்தார்கள்.முதலில் கண்டனத்துக்கு உள்ளானது அவனது நண்பர்களும்,அப்பெண்ணின் தோழிகளும்.போலீஸில் இருந்து நட்பு வட்ட்த்தை விசாரிக்கவே முதலில் சென்றார்கள்.

                           உடன் இருப்பவர்களுக்கு தெரிந்துதான் காதலோ,கள்ளக்காதலோ இருக்கும் என்றே சமூகம் கருதுகிறது.இதில் பெருமளவு உண்மையும் இருக்கிறது.பல பெற்றோர்கள் தங்களது மகன்,மகள் நட்த்தைக்கு அவர்களது நண்பர்களையே குற்றம் சாட்டுவார்கள்.அதுவும் காதல் என்றால் இவர்களுக்கு தெரியாமல் எப்படி இருக்க முடியும் என்று விளாசித்தள்ளுவார்கள்.

                            காதலில் பெரும்பாலும் பெண் உடனிருக்கும் தோழிகளுக்கு சொல்லிவிடுகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.ஆண்கள் பிக்கப் ஆன பின்னால்தான் சொல்வார்களாம்.ஏன் பெண் முடிவெடுக்கும் முன்பே சொல்லவேண்டும்? அவனைப்பற்றிய நல்ல கருத்துக்களோ,கெட்டவையோ தெரியவரும் என்பதுதான்.

                            உடன் இருக்கும் பெண்களுக்கு அவனது நடவடிக்கை பிடிக்காமல் போனாலோ,பொறாமை ஏற்பட்டாலோ அந்த காதலின் கதி அவ்வளவுதான்.பெண்கள் இம்மாதிரி விஷயங்களீல் முடிவெடுப்பதில் தோழிகள் தாக்கம் அதிகம்.கள்ளக்காதலில் வெளிப்படையாக தோழிகளிடம் சொல்லமாட்டார்களே தவிர ஜாடைமாடையாக காட்டிக்கொடுத்து விடுவார்கள்.

                           பதிவு அலுவலகத்தில்பெரும்பாலான காதல் திருமணங்கள் நண்பர்களின் உதவியுடன் தான் நடக்கின்றன.எனவே காதல்,கள்ளக்காதல் விஷயங்களில் நட்பு வட்ட்த்தை குற்றம் சாட்டுவதும்,விசாரணை செய்வதும் தவிர்க்க முடியாத்து.ஆனால், தோழர்களும்,தோழிகளும் பெற்றோருக்கு உரிய சமயத்தில் தெரிவிக்க வேண்டுமா?

                            அது பிரச்சினை ஆகிவிடும்.அப்புறம் நட்புக்கு என்ன மரியாதை இருக்கிறது?  என்று கேட்கலாம். காதலில் சரி.காதலை போற்றாதவர்கள் யார் இருக்கிறார்கள்.பெற்றோரைத்தவிர! ஆனால் நண்பன் கள்ளக்காதல் போன்ற செயல்களீல் ஈடுபாடு கொள்ளும்போது அதில் தலையிடுவதா? வேண்டாமா? தவறை உணர்த்தி நல்வழிப்படுத்த குறைந்தபட்ச முயற்சியாவது எடுக்க வேண்டுமா?

         நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
         மேற்சென் றிடித்தற் பொருட்டு
                                 என்ற திருவள்ளுவர் கூற்றையும் கொஞ்சம் கவனிக்கலாம்.சிரித்து மகிழ மட்டுமென்றில்லாமல் தவறான பாதையை தேர்ந்தெடுக்கும்போது நாம் தலையிடுவதுதான் உண்மையான நட்புக்கு அழகு.இதனால் நட்பு கெட்டுப்போனாலும் பரவாயில்லை.பிரச்சனையானால்  வரும் குற்ற உணர்விலிருந்து தப்பிக்கலாம்.நல்ல செயலை செய்தோம் என்ற சுய மதிப்பும் அதிகமாகும்.

                                 கண்ணன் என் தோழன் என்று நட்புக்கு இலக்கணம் வகுத்த பாரதியும்

          உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
          ஓங்கி யடித் திடுவான்; - நெஞ்சில்
          கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு
          காறி யுமிழ்ந்திடு வான்;

                           என்கிறார். ஒருவர் உணர்வுபூர்வமாக இருக்கும்போது உண்மையில் நண்பர்கள்தான் நெருங்கி பேசி பிரச்சனையை தீர்க்க உதவ முடியும்.

-

8 comments:

ஓசூர் ராஜன் said...

நண்பர்கள் நினைத்தால் சில நேரங்களில் நல்வழிப்படுத்தமுடியும்.

ஓசூர் ராஜன் said...

நல்ல பதிவு.

www.generationneeds.blogspot.com

shanmugavel said...

@ராஜன் said...

நண்பர்கள் நினைத்தால் சில நேரங்களில் நல்வழிப்படுத்தமுடியும்.

உண்மைதான் நண்பரே! நன்றி

shanmugavel said...

@ராஜன் said...

நல்ல பதிவு.

www.generationneeds.blogspot.com

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

நிறைய சிந்திக்க வைக்கும் பகிர்வு. நன்றி.

Sankar Gurusamy said...

அருமையான பதிவு.. நண்பர்களுக்கு நல்லது எதுவோ அதை தருவதே உத்தமம். அது அவர்களின் சம்மதத்துடன் இருந்தால் இன்னும் நலம்.

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

இராஜராஜேஸ்வரி said...

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு
என்ற திருவள்ளுவர் கூற்றையும் கொஞ்சம் கவனிக்கலாம்.

நிரூபன் said...

கள்ளக் காதல் பற்றிய காத்திரமான கருத்துக்கள் நிரம்பிய பதிவினைத் தந்திருக்கிறீங்க.

நண்பர்கள் வட்டம், இக் கள்ளக் காதல் பற்றி அறிந்ததும், முளையிலே கிள்ளியெறிய முயற்சியெடுத்தால்- பல குடும்பங்களின் - பல குழந்தைகளின் வாழ்வு சீரழியாது என்பது எனது கருத்து.