ஒருவர்
பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில்
இருந்தவர்.பெண்களால் துன்பம் வரும் என்று இன்னொருவர் சொன்னார்.எனக்குத்தெரிந்து
கனவில் பாம்பைக்காண்பது பாலியல் ஆர்வத்துடன் தொடர்புபடுத்துவதை படித்திருக்கிறேன்.பல
சமூகத்திலும் இது பொதுவான ஒன்றாக இருக்கலாம்.
பாம்பை
நேரில் பார்த்தால் கஷ்டம் வரும் என்று கிராமங்களில் நம்புகிறார்கள்.எப்போதும்
கலகலப்பாக இருக்கும் ஒரு நண்பர் வீட்டின் முன்பு சோகத்துடன் அமர்ந்திருந்தார்.”என்ன ஆச்சு?” என்று
கேட்டேன்.”வீட்டுக்குள் பாம்பு நுழைந்து விட்ட்து! பாம்பு
பிடிப்பவர்களை அழைத்து வந்து பார்த்தால் போய்விட்டிருக்கிறது.ரொம்ப பயமாய்
இருக்கிறது.”அதுதான் போய்விட்ட்தே? என்ன பயம் என்றேன்? அவர்
தொடர்ந்தார்.
”ஏதாவது கெட்ட்து நடந்துவிடுமோ என்றுதான் பயம்.எங்கள்
ஊரில் ஒரு லாரியில் பாம்பு ஏறிவிட்ட்து.அந்த லாரி தொடர்ந்து மூன்றுமுறை
விபத்துக்குள்ளாகி ஓனர் பெரும் கடனாளி ஆகிவிட்டார்.இன்னொரு வீட்டில் பாம்பு
நுழைந்த்து.ஒரு பெண் கேன்சர் வந்து இறந்துவிட்டார்.அவர் அடுக்கிக்கொண்டே போனார்.மனம்
அப்படித்தான் கெட்ட்தையே தொடர்புபடுத்தும் என்று அவருக்கு ஆலோசனை சொல்லிவிட்டு
வந்தேன்.சில தின்ங்களிலேயே காலி செய்து கொண்டு போய்விட்டார்.
கிராமங்களில்ஏராளமான
நம்பிக்கைகள்இருக்கின்றன.உழவர்கள் ஆண்டுதோறும் பாம்புப் புற்றுக்கு பொங்கல் வைத்து
படைப்பார்கள்.அப்படி படைத்தால் பாம்பு கண்ணுக்கு தெரியாதாம்.நல்ல பாம்பை அடித்தால்
மட்டும் கிராமங்களில் சடங்கு செய்வார்கள்.பாம்புக்கு மஞ்சள் துணி சுற்றி
புற்றில்விட்டு வணங்குவார்கள்.சிலர் நல்ல பாம்பை மட்டும் அடிக்கமாட்டேன் என்பார்கள்.வெள்ளிக்கிழமை
அடிக்க மாட்டேன் என்று சொல்வோர் உண்டு.மனிதன் எதையெல்லாம் கண்டு பயந்தானோ
அதையெல்லாம் கடவுளாக்கினான் என்று படித்தேன்.பாம்பு வழிபாடு எல்லா இட்த்திலும்
இருப்பதுதான்.
ராகு,கேது என்று
நவகிரகங்களிலும் இரண்டு பாம்பு கிரகங்கள் உண்டு.ராகுவுக்கு உடல் பாம்பு.கேதுவுக்கு
தலை பாம்பு.பாற்கடலை கடைந்து தேவர்களுக்கு வழங்கியபோது அசுரன் தேவனாக உருமாறி
அமுதம் உண்ண வரிசையில் உட்கார்ந்துவிட்டான்.சந்திரனுக்கும்,சூரியனுக்கும் இடையில்
அமர அவர்கள் தெரிந்து திருமாலிடம் சொல்லி விட்டார்கள்.அமுதம் பரிமாறிய திருமால்
கண்டுபிடித்து சக்கரத்தால் தலையை கொய்துவிட்டார்.தலை வேறு உடல் வேறாகிவிட்ட்து.
மகாவிஷ்ணுவை
நோக்கி தவம் இருந்து பாம்பின் உடலுடன் ராகுவும்,தலையுடன் கேதுவும் கிரக பதவி
பெற்றார்கள் என்கிறது சாத்திரங்கள்.ராகு,கேது தோஷம் என்பது
திருமணத்திற்கு,இல்லறத்திற்கு தீங்கானதாக சொல்லப்பட்டிருக்கிறது.திருப்பதி அருகில்
உள்ள காளஹஸ்தி,திருநாகேஸ்வரம் போன்றவை புகழ்பெற்ற பரிகார ஸ்தலங்கள்.
பாரதி பாடல்களில்
பாம்பு தீமையின் குறியீடாக பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.’பாரதியும் ஷெல்லியும்” நூலை
எழுதிய தொ.மு.சி.ரகுநாதன், இருவரும் பாம்பை பயன்படுத்தியிருப்பது பற்றி ஒப்பிட்டு
எழுதியுள்ளார்.பாம்புக்கு பால் வார்ப்பது என்பார்கள்.எல்லா இடங்களிலும் அரவம் கெட்ட
விஷயங்களோடு தொடர்புபடுத்தியே இருக்கிறது.
பெரும்பாலான பாம்புகளை
நான் நேரில் பார்த்திருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் இதய படபடப்பு நிற்க
வெகுநேரமாகும்.படையும் நடுங்கும்போது நான் மட்டும் எம்மாத்திரம்?பாம்பு கடித்து
இறப்பவர்கள் இன்னும் உண்டு.மருத்துவமனை சென்று சேர தாமதமாவதே காரணம்.பல இடங்களில்
பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுகிறேன் என்பார்கள்.கூட்டம் கூடி நிற்கும்.ஆனால்
ஒருமுறை கூட சண்டை நடந்து நான் பார்த்த்தில்லை.
-
14 comments:
ஏன்யா தூங்கிற நேரத்தில பாம்பு பதிவு போட்டு பயமுறுத்துறீங்க???
ஏன்யா தூங்கிற நேரத்தில பாம்பு பதிவு போட்டு பயமுறுத்துறீங்க???
வணக்கம் சகோ, எமது நாட்டிலும் இப் பாம்புடன் கூடிய மூட நம்பிக்கைகள் இன்றும் வழக்கத்திலுள்ளது.
எனது உறவினர் ஒருவரின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது, அவர் கணவன் பாம்பொன்றினை அடித்து விட்டார்.
பின்னர், அவரது குழந்தை பிறந்து நான்கு வயதான பின்னர் இறந்து விட்டது. இதற்கும் பாம்பு இறக்கும் போது சாபம் போட்டு இறந்தது தான் காரணம் என்று கூறுவார்கள்.
இன்றும் இத்தகைய பாம்பு பற்றிய மூட நம்பிக்கைகள் எம் நாட்டிலும் வழக்கத்திலிருக்கிறது.
நல்ல பதிவு..,கொஞ்சம் பயம்...வாழ்த்துக்கள்...
நல்ல பதிவு.
பயமயம்....
@மைந்தன் சிவா said...
ஏன்யா தூங்கிற நேரத்தில பாம்பு பதிவு போட்டு பயமுறுத்துறீங்க???
சரி பாம்பு கனவுல வந்ததா?சைட் பதிவு போட்டிருக்க!
@நிரூபன் said...
அங்கேயும் அப்படித்தானா? பொதுவான ஒன்றுதான் சகோ.நன்றி.
@Reverie said...
நல்ல பதிவு..,கொஞ்சம் பயம்...வாழ்த்துக்கள்...
thanks sir
@Rathnavel said...
நல்ல பதிவு.
நன்றி அய்யா !
@இராஜராஜேஸ்வரி said...
பயமயம்....
நன்றி மேடம்.
எப்படியோ, பம்பை பற்றி பதிவு போட்டு பேமஷகலான்னு pakkareenga, ஓகே பேமஷாகுங்க,,,,, வாழ்த்துக்கள்
பாம்பு கனவில் வருதல் மனோதத்துவப்படி கவலையின் வெளிப்பாடு என்பார்கள். பாம்ப பார்ப்பதால் கெடுதல் ஒன்றும் நிகழாது. எங்கள் வீட்டில் பெரிய மனைப்பாம்பு வெகு நாட்கள் இருந்தது . ஒன்றும் தொதரவு செய்ததில்லை.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று நம் ரத்தத்தில் ஊற வைத்து எழுதிவிட்டார்கள். அது நம் ஜீன்களில் ஊறி விட்டதென்று நினைக்கிறேன்.. அதுதான் இப்படி இருக்கிறது..
பகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/
Post a Comment