Thursday, July 28, 2011

காட்டிக்கொடுக்கும் செல்போன்கள்.


                                  செல்போன் நிறுவன்ங்கள் ஒரு கட்ட்த்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.ஆரம்பத்தில் இன்கமிங் சேவைக்கும் கட்டணம் வசூலித்த கம்பெனிகள்,எங்கள் சிம்கார்டை வாங்கினால் மட்டும் போதும்.எல்லாம் இலவசம் என்றார்கள்.டாடா டொகொமோ வியாபார தந்திரமாக ஒரு பைசா என்றவுடன் மற்ற நிறுவன்ங்களும் வேறு வழியில்லாமல் இறங்கி வந்தன.அதே நம்பருக்கு வேறு நிறுவனம் மாறிக்கொள்ளலாம் என்று வந்து மாற விரும்பியவர்கள் மாறியும் விட்டார்கள்.

                                  இனி நம்மை விட்டு போக மாட்டார்கள் என்று முடிவாகி விட்ட்து.செல்போன் இல்லாமல் இனி வாழ்க்கையும் இல்லை.போட்டி எல்லாம் முடிந்து ஓரளவு நிலை பெற்றாகிவிட்ட்து.அப்புறம் இந்த மக்கள் அடிமைகள்தானே! விலை ஏற்றினால் சிம்மை தூக்கியா எறிந்து விடப்போகிறான்? ஏர்டெல் பல பகுதிகளில் விலை ஏற்றத்தை அறிவித்து விட்ட்து.இருபது சதவிகிதம் ரேட்டை கூட்டியிருக்கிறது.அடுத்து வோடஃபோன்,ஜடியா செயலில் இறங்க இருக்கிறது.இனி ஜோராய் சுரண்டல்தான்.

                                  என்னதான் அடிமையாக மாறிப்போனாலும் செல்போனால் அடையும் பலனும் அதிகம் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.இன்று பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய செல்போன்கள்தான் பயன்படுகின்றன.காவல்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் இது.பல கொலைகளில்,வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளை செல்போனை வைத்தே காவல்துறை உடனடியாக வளைத்திருக்கிறது.

                                   இரண்டு பேர் ஓடிப்போனார்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.அவர்களுடைய செல்போன் இயக்கத்தை வைத்து வீட்டு முன்பு போய் போலீஸ் நின்றது.தில்சன் கொலையில் செல்போன் கூவம் வரை போய் வந்திருப்பதை பார்த்தார்கள்.துப்பாக்கி கிடைத்து விட்ட்து.ஒரு கொலையில் கடைசியாக யாருடன் பேசியிருக்கிறார் என்று கவனித்தார்கள்.அவரை விசாரித்தவுடன் கொலையாளிகளை பிடித்து விட்டார்கள்.

                                   என் பெயரில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சிம் இருந்தால்தானே கண்டுபிடிக்க முடியும்? வேறுவேறு சிம்மை மாற்றிக்கொண்டிருந்தால்? இப்படித்தான் புத்திசாலித்தனமாக சிந்தித்தார் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.நில மோசடி வழக்கில் தேடிக்கொண்டிருந்தார்கள் காவல்துறையினர்.ஓமலூர் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசு கேரளாவில் இருந்தார்.சிம்மை தூக்கியெறிந்து விட்டு வேறு சிம்மை போட்டுக்கொண்டார்.

                                  அவரது உறவினர்களுடைய நம்பர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள் காவல்துறையினர்.கேரளாவில் உள்ள ஒரு நம்பரிலிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன.அங்கே போய் கைது செய்து அழைத்து வந்து விட்டார்கள்.தலைமறைவாக இருந்த போது அவர் மாற்றியது மட்டும் ஏழு சிம்கார்டுகள்.தலைமறைவாகி எவ்வளவு காலத்துக்கு மனைவி,குழந்தைகளுடன் பேசாமல் இருக்க முடியும்?

                                   முன்பெல்லாம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் ரொம்பவும் மூளையை கசக்க வேண்டியிருந்த்து.இப்போது செல்போன்கள் போதும்.குற்றவாளிகளுக்கு இனி கஷ்ட காலம்தான்.ஒருவருடைய  எல்லா நட்த்தைகளையும் எளிதாக காட்டிக்கொடுத்து விடுகிறது.நமக்கெல்லாம் எவ்வளவோ தொல்லைகள் இருந்தாலும் செல்போன்களால் கிடைக்கும் நன்மைகளும் அதிகம்.எப்படியோ குற்றங்கள் குறையுமானால் நல்லதுதானே!
-

16 comments:

Unknown said...

ஹிஹி சிக்கினானுக!!

Unknown said...

தமிழ்மணம் சமர்ப்பியுங்கள் பாஸ்!

மாய உலகம் said...

சிம்கார்டால் குற்றவாளிகள் பிடிபடுகின்றனர் என்பதை லாவகமாக சொல்லியிருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

ஹிஹி சிக்கினானுக!!

தப்பவே முடியாது சிவா,நன்றி

shanmugavel said...

@மாய உலகம் said...

சிம்கார்டால் குற்றவாளிகள் பிடிபடுகின்றனர் என்பதை லாவகமாக சொல்லியிருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்

நன்றி சார்

Yaathoramani.blogspot.com said...

தீமைகளை விட நன்மைகள் அதிகம் உள்ள
இந்த செல்போனைவிட்டு யாரும்
விலகி இருக்க சாத்தியமே இல்லை
தெளிவான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கூடல் பாலா said...

ஒரு பிடிமானம் இருப்பது நல்லதுதான் ....

Sankar Gurusamy said...

உண்மையே.. செல்போன்களால் நன்மைகளே அதிகம்.. அதை சரியாக உபயோகிக்கும் பட்சத்தில்...

தவறாக உபயோகித்தால் ஆப்புதான்..

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

ரா: அரசகுமாரன் said...

அருமையான பதிவு...
இதையும் படிக்கவும்

http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_7108.html

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
செல்போன் மூலம் ஏற்படும் கதிரியக்கம் பற்றிய தீமைகளை விட, எமக்கு இப்போது கிடைத்திருக்கும் நன்மை இது தான். இப்படியாவது குற்றங்கள் குறைந்து வளமான சமூகம் உருவாகினால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

ஓசூர் ராஜன் said...

goodpost

Anonymous said...

செல்போன் காவல்துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் தான்.. நல்ல தகவல் நண்பரே!

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

சாகம்பரி said...

செல் போனால் அனாமதேய மிரட்டல் அழைப்புகள் குறைந்துவிட்டன. நல்ல பதிவு.

Karthikeyan Rajendran said...

செல்போன் மக்களுக்கு மட்டுமல்ல காவலருக்கும் ஒரு வரப்ரசாதம் என்று சொல்லுங்கள்........