Saturday, July 30, 2011

இந்தியாவின் முதல் லெஸ்பியன் திருமண ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு.

                               இந்தியாவின் முதல் லெஸ்பியன் திருமணம் டெல்லிக்கு அருகில் ஹரியானாவில் நடந்த்து. 25 வயதானசவீதா என்ற பல்கலைக்கழக மாணவியும்,20 வயதுள்ளவீணா என்ற அவரதுஇணையும் திருமணம் செய்து கொண்டார்கள் தம்பதிகள் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறார்கள்.அவர்களுடைய உயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளதால்,தம்பதிகள் தங்கியுள்ள வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியிருக்கிறது..

                              சவீதா ஏற்கனவே வேறொரு ஆணுடன் திருமணமானவர்.மணமாகி 5 மாதம் கழித்து கணவரை விட்டு வெளியே வந்துவிட்டார்.ஆணுடனான குடும்ப வாழ்க்கையில் அவரால் பொருந்திப் போகமுடியவில்லை.தன்னை கட்டாயப்படுத்தி வீட்டில் ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துவிட்ட்தாகவும்,வீணா என்பவருடன் லெஸ்பியன் உறவு இருப்பதாகவும் நீதிமன்றம் சென்றார்.

                               குர்கான் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதுடன் வீணாவை திருமணம் செய்து கொள்ளவும் அனுமதி அளித்த்து.ஜூலை 22 ல் சவீதா கணவனாகவும்,வீணா மனைவியாகவும் ஆனார்கள்.இந்தியாவில் நடக்கும் முதல் லெஸ்பியன் திருமணம் இது.ஆனால் தம்பதிகள் மீண்டும் கோர்ட்டுக்கு ஓடிவந்தார்கள்.என்ன நடந்திருக்கும் என்று நம்மால் ஊகிக்க முடியும்.ஆமாம்,கிராமத்தில் அவர்களுடைய உறவினர்கள் கொல்லப்போவதாக அறிவித்து மிரட்டியிருக்கிறார்கள்.

                                கொலை மிரட்டல் விடுத்த உறவினர்களுக்கு கோர்ட் நோட்டீஸ் போயிருக்கிறது.அந்த பகுதி கிராமங்களை பொருத்தவரை ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொண்டாலே கிராம பஞ்சாயத்து அனுமதியுடன் கொலை நிச்சயம் என்கிறார்கள்.இந்த லெஸ்பியன் ஜோடியின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறி.தற்போது பாதுகாப்பான வீட்டில் தங்க வைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ளது.

                                   லெஸ்பியன் உறவை காரணம் காட்டி ஆணுடனான திருமண பந்த்த்தில் இருந்து விலகிய சவீதா பாராட்டைப் பெற்று விட்டார்.உண்மையில் இது ஒரு தைரியமான முடிவுதான்.இல்லாவிட்டால் ஒரு போலியான மணவாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்.கணவனுக்கும்,அவருக்கும் சந்தோஷமில்லாமல் சமூகத்துக்கு பயந்து நடித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.இருவர் வாழ்க்கையையும் வீணடிக்காமல்அவர் எடுத்த சரியான முடிவு என்கிறார்கள் விமர்சகர்கள்.

                                   அவர்களது குடும்பத்தினரைப் பொருத்தவரை கொஞ்சம் ஜீரணிக்க கஷ்டமான விஷயம்தான்.இதெல்லாம் அவர்கள் கேள்விப்படாத ஒன்றாகவும்,அதிர்ச்சியாகவும்தான் இருந்திருக்கும்.ஆனால் நீதிமன்றம்,காவல்துறை நடவடிக்கை அவர்களிடம் ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தோன்றுகிறது.மாறிவரும் சூழலை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

                                   ஓரினச்சேர்க்கை போன்றவை எப்போதும் சமூகத்தில் இருந்து வந்திருக்கிறது.அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் இப்போதுதான் துணிவுடன் வெளியே வர ஆரம்பித்திருக்கிறது.இந்தியாவுக்கு இது புதிதாக தோன்றினாலும் தனி மனித உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது.தானும் கெட்டு இன்னொருவரையும் கெடுப்பதற்கு பதிலாக தைரியமாக முடிவெடுப்பது நல்லது.
-

13 comments:

Unknown said...

வாழ்க வளமுடன்!!

நிகழ்வுகள் said...

அவ்வ்வ்வ் இப்பிடியெல்லாம் நடக்குதா ...

எண்ணங்கள் 13189034291840215795 said...

தனி மனித உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது

// சரியானது

எண்ணங்கள் 13189034291840215795 said...

உயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளதால்// http://tribune.com.pk/story/218250/honour-killings-man-guns-down-six-daughters/#.TjASCOmTs8k.email


இந்தளவு மோசமில்லையே..

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

வாழ்க வளமுடன்!!

நன்றி சிவா

shanmugavel said...

@நிகழ்வுகள் said...

அவ்வ்வ்வ் இப்பிடியெல்லாம் நடக்குதா ...

ஆமாம் சார்.நன்றி

shanmugavel said...

@எண்ணங்கள் 13189034291840215795 said...

தனி மனித உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது

// சரியானது

தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@எண்ணங்கள் 13189034291840215795 said...

உயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளதால்// http://tribune.com.pk/story/218250/honour-killings-man-guns-down-six-daughters/#.TjASCOmTs8k.email


இந்தளவு மோசமில்லையே..

பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.சட்டப்பூர்வ நடவடிக்கை இல்லாவிட்டால் இங்கும் நிலை மோசமாகியிருக்கும்.நன்றி

ஓசூர் ராஜன் said...

இனிமேல் அதிகம் வெளிவரும் என்று நினைக்கிறேன்

shanmugavel said...

@ராஜன் said...

இனிமேல் அதிகம் வெளிவரும் என்று நினைக்கிறேன்

நன்றி சார்

shanmugavel said...

@Jayadev Das

தங்கள் கருத்துரை நீதிமன்ற அவமதிப்பு என்பதால் வெளியிடவில்லை,நன்றி

Sankar Gurusamy said...

இது எங்குபோய் முடியும் என்பது புரியவில்லை.. ஒரு கலாச்சார அதிர்ச்சி.. ஜீரணிக்க சற்று கடினமாகத்தான் இருக்கிறது...

பகிர்வுக்கு நன்றி..



http://anubhudhi.blogspot.com/

நிரூபன் said...

மகிழ்சிக்குரிய விடயம் சகோ, எல்லோரையும் மனிதர்களாக மதித்துப் பழமும் நிலை வந்தால், நாட்டில் போர் என்ற ஒன்றே இருக்காது தானே.

அதன் ஒரு பரிணாம வளர்ச்சியாக இந்தத் திருமணம் இடம் பெற்றிருக்கிறது.

அந்தத் தம்பதிகள் வாழ்க!