Friday, July 22, 2011

நலம்பெறத் தவிர்க்கவேண்டிய உணவுகள்.

குப்பைகளை ஏன் தின்று கொண்டிருக்க வேண்டும்? இன்றைய தலைமுறை அப்படித்தான் இருக்கிறது.உடல் நலனுக்கு கொஞ்சமும் பயனளிக்காத உணவுகளை விழுங்கிக்கொண்டிருக்கிறது.junk  food என்றால் குப்பை உணவு என்றுதான் அர்த்தம்.இளம் வயதினர் கிட்ட்த்தட்ட அடிமையாகிப்போனார்கள் என்கிறது ஒரு ஆய்வறிக்கை.பீட்ஸா,பர்கர்,சிப்ஸ் என்று சுவைக்காக மட்டுமே இந்த வகைகள் விழுங்கப்படுகின்றன.

                                கார்பானிக் அமிலம் சேர்க்கப்பட்ட குளிர்பான்ங்கள் பற்றி பல விழிப்புணர்வு செய்திகள் வந்துவிட்ட்து.ஆனால் அதைக்காது கொடுத்து கேட்பவர்கள் இருப்பதாக தெரியவில்லை.காரணம் விளம்பரம்தான்.இதற்கான விழிப்புணர்வு செய்பவர்கள் அடையாளம் இல்லாதவர்கள்.குடிக்கச்சொல்பவர்கள் மதிப்புக்குரிய நடிகைகளும்,கிரிக்கெட் வீர்ர்களும்.மனிதனுக்கு சிறிதும் உபயோகமில்லாத ஒன்றை விளம்பரம் மூலம் விற்று மனிதனை முட்டாளாக்க முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

                                 மக்கள் நலனில் விருப்பம் கொண்ட தனி மனிதர்களும்,அமைப்புகளும் இவற்றின் நன்மை,தீமையைப் பற்றி பேசுகிறார்கள்.யாரும் கேட்கவில்லை என்னும்போது அரசாங்கத்தை நாடுகிறார்கள்.அவர்களும் கண்டுகொள்ளாவிட்டால் இருக்கவே இருக்கிறது நீதிமன்றம்.இந்தியனுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்தான்.குப்பை உணவுகள் விவகாரமும் இப்போது நீதிமன்றம் போயிருக்கிறது.

                                  டெல்லி உயர்நீதிமன்றத்தில் உதய் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது.குறைந்த பட்சம் பள்ளி,கல்லூரிகளிலாவது இவற்றை தடை செய்யலாம் என்பது கோரிக்கை.நன்மையளிக்காத உணவுகளையும்,குளிர்பான்ங்களையும் 1500 அடிக்குள் விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் என்கிறார்கள்.மத்திய அரசுக்கு நோட்டீஸ் போயிருக்கிறது.ஓரளவுக்காவது இதன் நுகர்வை இளைஞர்களிடமிருந்து குறைக்க முடியும் என்பதே நோக்கம்.

                                 இந்த வகை உணவுகளில் நுண்ணூட்டச்சத்துக்கள் எதுவும் இல்லை.தினசரி அத்யாவசியத் தேவையான வைட்டமின்கள்,தாதுக்கள்,அமினோ அமிலங்கள்,நார்ச்சத்து போன்றவை இல்லாத குப்பைகள்.ஆனால் இவற்றை தின்பது மட்டும் அதிகரித்தவாறு இருக்கிறது.மது,புகை போன்றவை போல எதிர்த்துப்போராடும் நிலை ஏற்பட்டு விட்ட்து.அதே சமயம் மது,புகை போன்றவற்றிற்கு இருக்கும் உளவியல் காரணிகள் இவற்றுக்கு பொருந்தாது.

                                 அவர்கள் காசில்தானே தின்கிறார்கள் எங்கோ போகட்டும் என்று விட்டுவிடலாமா? இதன் மூலம் ஏற்படும் உடல் பருமன்,இதய நோய்கள்,சர்க்கரை,பல் வியாதி போன்றவை எதிர்காலத்தில் இந்திய சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.ஏராளமானவர்கள் நோயாளிகளாக இருப்பார்கள்.உழைக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையில்  குறைவு ஏற்படும்.பொருளாதாரம் பாதிக்கப்படும்.இன்னொரு பக்கம் நோய்களுக்கு சிகிச்சை வகையிலும் அரசு செலவு செய்யவேண்டும்.

                                 இன்று வசதி படைத்தவர்கள்கூட நீரிழிவு,இதய நோய் மாத்திரைகளுக்காக அரசு மருத்துவமனையை நாடுகிறார்கள்.வாழ்வு முழுக்க செய்யும் செலவை குறைக்க முயற்சி செய்கிறார்கள்.குப்பை உணவுகளும் இத்தகைய நீண்டகால நோய்களை உருவாக்க்க்கூடியவை.இதனால் பல வகையிலும் நாட்டிற்கு இழப்பு இருக்கிறது.இப்போதே விழித்துக்கொண்டால் நல்லது.
-

12 comments:

அம்பாளடியாள் said...

அருமையான காலத்துக்கு ஏற்ற நல்லொதொரு தகவலைப்
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்................

Anonymous said...

விழிப்புணர்வு இடுகை ,

இராஜராஜேஸ்வரி said...

.குப்பை உணவுகளும் இத்தகைய நீண்டகால நோய்களை உருவாக்க்க்கூடியவை.//

பயனுள்ள பகிர்வு.

மாய உலகம் said...

உணவே மருந்து... அந்த உணவு சரியானதாக இருக்க வேண்டும் என்பதை அருமையாக சொல்லியுள்ளீர்கள்... பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

Sankar Gurusamy said...

உண்மையில் இந்த மாதிரி உணவுகளுக்கான விளம்பரங்களை மொத்தமாக தடை செய்யவேண்டும். அப்போதுதான் இது குறையும்.

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

shanmugavel said...

@அம்பாளடியாள் said...

அருமையான காலத்துக்கு ஏற்ற நல்லொதொரு தகவலைப்
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்......

தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@கந்தசாமி. said...

விழிப்புணர்வு இடுகை ,

நன்றி சார்

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

.குப்பை உணவுகளும் இத்தகைய நீண்டகால நோய்களை உருவாக்க்க்கூடியவை.//

பயனுள்ள பகிர்வு.

தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@மாய உலகம் said...

உணவே மருந்து... அந்த உணவு சரியானதாக இருக்க வேண்டும் என்பதை அருமையாக சொல்லியுள்ளீர்கள்... பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

நன்றி சார்

shanmugavel said...

@அர்ஜுன் said...

முனி-2 காஞ்சனா திரை விமர்சனம்

தங்கள் வருகைக்கு நன்றி

shanmugavel said...

@Sankar Gurusamy said...

உண்மையில் இந்த மாதிரி உணவுகளுக்கான விளம்பரங்களை மொத்தமாக தடை செய்யவேண்டும். அப்போதுதான் இது குறையும்.

பகிர்வுக்கு நன்றி..

நன்றி சங்கர்

நிரூபன் said...

உடல் ஆரோக்கியத்தினைப் பேணுவதற்கேற்றவாறு,
எத்தகைய உணவினைத் தவிர்க்க வேண்டும் என்பதனை பகிர்ந்திருக்கிறீங்க.
பயனுள்ள பதிவு பாஸ்.