Wednesday, November 9, 2011

மருத்துவமனைக்குச் செல்வீர்களா?

உடல் நலம் இல்லாவிட்டால் வேறு என்ன செய்ய முடியும்.வசதி இருந்தால் தனியார் மருத்துவமனை,வசதி இல்லாவிட்டால் அரசாங்க ஆஸ்பத்திரி.எப்படியும் மருத்துவரிடம் போய்த்தான் ஆக வேண்டும்.சுரண்டலாக இருந்தாலும் உட்பட்டு மாத்திரை மருந்தை விழுங்கியாக வேண்டும்.எனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவரின் அனுபவம் இது.
                              புதியதாக வேலைக்கு அரசு மருத்துவராக வேலைக்குச் சேர்ந்தார்.திருவண்ணாமலை மாவட்டம்தான் கிடைத்த்து.இரண்டாவது நாளில் இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்திருக்கிறார்.அந்த பெண் பேசவில்லை.அவருடைய அம்மா,சலிப்பு என்றிருக்கிறார்.வட்டார வழக்கு என்று சொல்வோமே அப்படி! சலிப்பு என்றால் அங்கே சளி பிடித்திருக்கிறது,சில இடங்களில் ஜலதோஷம் என்று சொல்வார்கள்.
                              அவர்கள் கொடுத்த சீட்டை பார்த்தால் பல முறை மருத்துவமனை வந்து சென்றிருப்பது தெரிந்த்து.இதற்கு முன்பெல்லாம் எதற்காக வந்தீர்கள்”? என்று கேட்டால் அதற்கு பதில் சலிப்பு!என்றிருக்கிறார்கள்.அவர்கள் சொலவதை வைத்து பார்த்தால் ஆறு மாதமாக ஜலதோஷம்.மருத்துவர் ஆச்சர்யப்பட்டு இருமல் இருக்கிறதா?என்று கேட்க அதற்கு பதில் ஆமாம்”.மாலையில் காய்ச்சல் வருகிறதா? என்று கேட்டால் ஆமாம்”.எடை குறைந்து விட்ட்தா? என்று கேட்டால்ஆமாம்
                               நம்ம மருத்துவருக்கு புரிந்து போய்விட்ட்து.அவர்களை விசாரித்த வரையில் அவர்களுடைய பிரச்சினை ஜலதோஷம் அல்ல! இருமல்!.அதைச் சொல்லாமல் சலிப்பு என்று சொல்கிறார்கள்.சளி பரிசோதனை செய்ய அனுப்பி வைத்து விட்டார்.அவர் நினைத்த்து சரியாகப் போய்விட்ட்து.பரிசோதனை முடிவில் அப்பெண்ணுக்கு கடுமையான காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட்து.கவனிக்காமல் விட்டிருந்தால் மரணம் கூட ஏற்பட்டிருக்கலாம்.இந்தியாவில் காசநோயால் மரணமடைபவர்கள் அதிகம்.
                                மிக எளிமையாகவே இருக்கிறது.நாம் தவறும் இடங்களில் இது முக்கியமானது.நமது உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள தொந்தரவுகளை நாம் சரியான வார்த்தையில் சொல்வதில்லை.காய்ச்சல்,உடல் வலி,பசியின்மை என்று மூன்று கோளாறுகள் இருந்தால் பசி எடுப்பதில்லை என்று நாம் மருத்துவரிடம் சொல்வதில்லை.இது ஒரு உதாரணம்தான்.
                                பொதுவாக உடல்நலக்குறைவின்போது பல அறிகுறிகள் இருக்கும்.முழுமையாக சொல்லாமல் நம்மை அதிகம் பாதிப்படைய செய்திருக்கும் ஒரு அறிகுறியை மட்டும் சொல்கிறோம்.மேற்கண்ட நிகழ்வில் கவனித்தால் தெரியும்.மாலையில் காய்ச்சல் வருவதை சொல்லவில்லை.சளி பிடித்தால் சகஜம் என்று நினைத்திருக்கலாம்.
                                 பல மருத்துவர்களுக்கு இன்று பொறுமையாக கேட்க நேரம் இல்லை.தவிர அவர்களுக்கு என்ன அக்கறை? நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.இன்னொன்று வட்டார மொழி.வேறு மாவட்ட்த்தை சேர்ந்தவர்களாக இருந்தால் பழகும் வரை சில வார்த்தைகள் புரியாமல்கூட இருக்கலாம்.தெளிவாக விளக்க வேண்டும்.
                                 பெண்ணின் விஷயத்தில் பழைய சீட்டை எடுத்துச் சென்றது புத்திசாலித்தனம். நோய் அறிவதில் முக்கிய பங்கு அந்த சீட்டுக்கும் இருக்கிறது.வேறுவேறு நலக்குறைவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் மருத்துவர்,ரத்த ஆய்வு,மருந்துக் கடையில் கொடுத்த அத்தனை காகிதங்களையும் எடுத்துச் செல்லவேண்டும்.சில முக்கியமானவற்றை அதில் குறித்திருப்பார்கள்.குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருப்பது நல்லது.
-

23 comments:

சென்னை பித்தன் said...

நல்ல ஆலோசனை.

சாகம்பரி said...

பழைய மருந்து சீட்டையும் எடுத்துச்செல்ல வெண்டும் என்பது முக்கியம். இந்த பகிர்வு மிகவும் முக்கியமானது. நோய் குறியீட்டியல் இப்போது சிறப்பு மருத்துவமாகவே ஆகி வருகின்றது. குழப்பமெல்லாம் தீருமா என்று பார்க்கலாம்.

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

நல்ல ஆலோசனை.

நன்றி அய்யா!

பிரெஞ்சுக்காரன் said...

அவசியமான ஆலோசனை அண்ணா!

shanmugavel said...

@சாகம்பரி said...

பழைய மருந்து சீட்டையும் எடுத்துச்செல்ல வெண்டும் என்பது முக்கியம். இந்த பகிர்வு மிகவும் முக்கியமானது. நோய் குறியீட்டியல் இப்போது சிறப்பு மருத்துவமாகவே ஆகி வருகின்றது. குழப்பமெல்லாம் தீருமா என்று பார்க்கலாம்.

குழப்பம் தீர இந்தியா வெகுதூரம் பயணிக்கவேண்டும்,நன்றி

shanmugavel said...

@பிரெஞ்சுக்காரன் said...

அவசியமான ஆலோசனை அண்ணா!

thanks brother

RAVICHANDRAN said...

நமக்கே தெரியாமல் முழுசாக சொல்லாமல் விட்டுவிடுவதுண்டு.நல்ல ஆலோசனை,நன்றி

இராஜராஜேஸ்வரி said...

குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருப்பது நல்லது./

அருமையான பயனுள்ள வரவேற்கத்தக்க பகிர்வு. பாராட்டுக்கள்>>

RAVICHANDRAN said...

அரசு வேலை செய்பவர்கள் முதலில் வட்டார வழக்கை தெரிந்து கொள்ளவேண்டும்.

shanmugavel said...

@RAVICHANDRAN said...

நமக்கே தெரியாமல் முழுசாக சொல்லாமல் விட்டுவிடுவதுண்டு.நல்ல ஆலோசனை,நன்றி

சொன்னால்தான் முழுப்பலன்,நன்றி அய்யா!

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருப்பது நல்லது./

அருமையான பயனுள்ள வரவேற்கத்தக்க பகிர்வு. பாராட்டுக்கள்>>

தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@RAVICHANDRAN said...

அரசு வேலை செய்பவர்கள் முதலில் வட்டார வழக்கை தெரிந்து கொள்ளவேண்டும்.

ஆமாம் சார்,நன்றி

கேணியூர் வீறுடை வேந்தனார் said...

பழைய மருந்து சீட்டையும் எடுத்துச்செல்ல வெண்டும் என்பது முக்கியம். இந்த பகிர்வு மிகவும் முக்கியமானது. நோய் குறியீட்டியல் இப்போது சிறப்பு மருத்துவமாகவே ஆகி வருகின்றது. குழப்பமெல்லாம் தீருமா என்று பார்க்கலாம்.:////

இக்கருத்தை ஆதரிக்கிறேன்.

shanmugavel said...

@உல்டா உலகநாதன் said...

பழைய மருந்து சீட்டையும் எடுத்துச்செல்ல வெண்டும் என்பது முக்கியம். இந்த பகிர்வு மிகவும் முக்கியமானது. நோய் குறியீட்டியல் இப்போது சிறப்பு மருத்துவமாகவே ஆகி வருகின்றது. குழப்பமெல்லாம் தீருமா என்று பார்க்கலாம்.:////

இக்கருத்தை ஆதரிக்கிறேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

சத்ரியன் said...

//அவர்களுக்குஎன்ன அக்கறை? நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.//

உண்மை தான்.

Sankar Gurusamy said...

இப்பொல்லாம் ஒவ்வொரு பேஷண்ட்க்கும் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் மட்டுமே செலவிடும் மருத்துவர்களுக்கு பழைய சீட்டு பழைய மருத்துவ பரிசோதனை விசயங்களை பார்ப்பதற்கு கூட நேரம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

மேலும் அவர்கள் சொல்லும் லேபில் டெஸ்ட் எடுத்தால்தான் பார்க்கவே செய்வார்கள்..

குடும்ப டாக்டர் எல்லாம் வச்சுக்கர அளவுக்கு இப்ப வசதி எல்லாருக்கும் இல்லை..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

Unknown said...

நல்ல ஆலோசனைகள்
எடுத்துக் காட்டோடு
சொன்னது நன்று!




புலவர் சா இராமாநுசம்

SURYAJEEVA said...

மருத்துவ துறையில் பொதுவாக கூறப் படும் ஒரு அறிகுறி, gas trouble ... இப்படி சொல்பவர்களிடம் நான் பத்து முதல் இருபது கேள்விகள் கேட்க்க வேண்டி இருக்கும் என்ன நோய் என்று கண்டறிய...
காய்ச்சல், வாந்தி, தலைவலி என்று பெரும்பாலானவர்கள் கூறுவார்கள்.. நான் கேட்க்கும் ஒரே கேள்வி மலத்தின் நிறம் என்ன என்று? பெரும்பாலும் சரியான விடை வராது... வெள்ளை நிறத்தில், நிறம் இல்லாமல் இருந்தால் மஞ்சள் காமாலை அறிகுறி என்று அறிவுறுத்துவேன்...
இதில் மக்களை குறை கூற முடியாது, மருத்துவர்கள் தான் விசாரிக்க வேண்டும்..
அந்த வகையில் உங்கள் நண்பருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி

சசிகுமார் said...

முக்கியமான குறிப்புகள் சார் நன்றி...

ஸ்ரீராம். said...

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வரும் கூட்டத்துக்கு அங்கிருக்கும் மருத்துவர்களால் பொறுமையாகப் பேச முடிவதில்லை. மெதுவாகப் பார்க்க முடிவதுமில்லை. ஆஸ்தான மருத்துவர் என்று ஒருவரைவைத்துக் கொள்வது சிறந்ததுதான். இந்த வியாபாரயுகத்தில் சேவையை மட்டும் எதிர்பார்ப்பது அர்த்தமில்லாதது. சிந்தனையைத் தூண்டி விட்டது உங்கள் பதிவு.

ராஜா MVS said...

மருத்துவர்கள் நோயாளியை அக்கரையுடன் கவனிக்கத் தொடங்கினாலே பலன் கிடைக்கும்.

பலர் அவர்களை அலட்சியத்துடன் நடத்துகிறார்கள்...

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணா,

நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

மருத்துவமனைக்குச் செல்லும் போது எம்மை எப்படித் தயார்படுத்த வேண்டும் என்பதனை எளிமையான உதாரணத்தோடு விளங்கப்படுத்தியிருக்கிறீங்க.

நன்றி அண்ணே.

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...