நவீன
மருத்துவம் இந்தியனின் சராசரி வாழ்நாளை அதிகரிக்கச் செய்துள்ளது.வெளிநாடுகளில்
இருந்து சிகிச்சை பெற இந்தியாவை தேர்ந்தெடுக்கிறார்கள்.மற்ற நாடுகளைக் காட்டிலும்
மலிவாகவும்,தரமாகவும் இங்கே சிகிச்சை பெற முடியும்.நிச்சயம் பெருமைக்குரிய இடம்
பெற்றிருக்கிறோம்.ஆனால் வெளிநாட்டினரை விடவும் மருத்துவமனைக்கு தாமதமாக வருவதில்
நாம்தான் முன்னணியில் இருப்போம்.
இன்னமும் ஒரு
பாட்டியின் குரல் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.” அவன் பயந்திருப்பான்,அவரைக்கூட்டி
வந்து பார்த்துவிட்டு பிறகு ஆஸ்பத்திரி போகலாம்!” அப்புறம் அவர்
வருகிறார்.தரையில் கோடு கிழிக்கிறார்.எண்ணுகிறார்,”ஆமாம்.பயந்திருக்கிறான்.கோழி
வெட்ட வேண்டும்.” மருத்துவமனை
போவது பிறகுதான்.
நோயில்
படுத்துவிட்டான்.என்ன காரணம் என்று தெரியவில்லை.அருள்வாக்கு கேட்க விரைகிறார்கள்.’’ நான்
பார்த்துக்கொள்கிறேன் மகனே!”
என்கிறது சாமி! ” இதை
மூன்று நாளைக்கு கொடு! மந்திரம் சொன்ன எலுமிச்சம்பழம்.’’உள்ளத்தில்
தைரியம் பிறந்து விட்ட்து.சில நாட்களில் தேறிவிடுகிறார்.தொடர்ந்தால்
மருத்துவமனைக்கும் போவதுண்டு.
உடலில் ஏற்பட்ட
நலக்குறைவுக்கு ஏதோ அரைக்கிறார் பாட்டி.குறிப்பிட்ட உணவு கூடாது என்கிறார்.நோயும்
சரியாகிவிடுகிறது.இல்லாவிட்டால் எங்கிருந்தோ மூலிகை பறித்து வந்து வைத்தியம்
செய்கிறார்.கஷாயம் தயாரித்து கொடுக்கிறார்.பலிக்கவில்லை என்றான பிறகு ஆஸ்பிடலாவது
போய் வரலாமா? என்று யோசிக்கிறார்கள்.
சொல்லப்பட்டவை
பழங்காலத்து விஷயம்தான்.ஆனால் இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பவையும் கூட! பெருமளவு
விழிப்புணர்வு வந்துவிட்டாலும் மிச்ச சொச்சங்கள் இருந்து
கொண்டிருக்கின்றன.கல்வியறிவு வளரவளர இவையெல்லாம் மாறிப்போய்விடும் என்றாலும்
அதற்குள் சமூகத்துக்கு தரும் துன்பங்கள் அதிகமாகவே இருக்கும்.
சில
சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நேரத்துக்குள் மருத்துவமனையை அடையவேண்டியது
அவசியம்.இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.ஆனாலும் அப்படி வராதவர்கள்
இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.எளிய கிராமத்து மனிதனுக்கு முன்னுரிமை என்பது
பாரம்பர்ய நம்பிக்கைகளில் அடங்கியிருக்கிறது.
காசநோய் போன்ற நோய்களில் இருமிக்கொண்டே
இருப்பார்கள். எளிதில் மருத்துவரை அணுக
மாட்டார்கள்.பத்து பதினைந்து பேருக்கு பரப்பிய பிறகே ஆபத்தான நிலையில் மருத்துவமனை
அடைகிறார்கள்.இந்நோயால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகமாகிறது.சுற்றி இருப்பவர்களும்
பாதிக்க்ப்பட்டு விடுகிறார்கள்.
இன்று எய்ட்ஸ்
நோய்க்கும் மூலிகை,வைத்தியம்,நாட்டு வைத்தியம் என்று விளம்பரங்கள்
காணப்படுகின்றன.குணமாக்குகிறேன் என்று நோட்டீஸ் ஒட்டுகிறார்கள்.மற்ற நாடுகளில் இது
சாத்தியமா என்று தெரியவில்லை.நோய்கள் குறித்த கல்வியும்,விழிப்புணர்வும் நமக்கு
அதிகமாகவே தேவைப்படுகிறது.
23 comments:
@நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமை.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
தங்கள் கருத்துரைக்கு நன்றி
மருத்துவர்கள் கொடுக்கிற மருந்தின் எண்ணிக்கை மயக்கம் வர செய்கிறதே !
நம்ம ஊரு பாட்டி வைத்தியமும், தமிழ் மருத்துவங்களும்
இன்னும் பல நோய்களை குணப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் நீங்கள் குறிப்பிட்டதுபோல மூட நம்பிக்கைகளை அதில் கலந்து
நோயின் தீவிரத்தை இன்றைய பொழுதில் அதிகப்படுத்திவிடாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.
இன்று நாடுகளுக்கிடையே ஆயுதப்போருக்கு பதிலாக, நோய்கள் பரப்பும்
நுண்ணுயிரிகளை அடுத்த நாட்டில் பரப்பி அதில் பணம் சம்பாதிக்கும் முறையையும், பொருளாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்தியும் தான் போர்புரிகிறார்கள். அதற்கேற்றார்போல அந்தந்த நேரத்தில் மருத்துவரை அணுகி வந்த நோய்க்கு தகுந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அருமையான விழிப்புணர்வு கட்டுரை நண்பரே.
இப்போ எல்லாம் யார் பாஸ் மூலிகை மருந்து பாவிக்கிறாங்க!!! காலம் அதை தூக்கி வீசிட்டுது.... அதில் கொஞ்சம் இன்னும் இருக்குத்தான்..... இதில் எது பெஸ்ட் என்று என்னால் முடிவுக்கு வர முடியவில்லை.... ஹா ஹா ...
பாட்டியை கேட்டால் இப்பவும் சொல்லுவா மூலிகை மருந்துதான் சிறந்தது என்று ;)
எளிய கிராமத்து மனிதனுக்கு முன்னுரிமை என்பது பாரம்பர்ய நம்பிக்கைகளில் அடங்கியிருக்கிறது.//
பெரும்பாலும் நோயின் ஆரம்ப கட்டத்தில் தான் இப்பரிசோதனை முயற்சிகள் இருக்க வேண்டும். முற்றிய பின் தெரியவரும் நோய்களுக்கெல்லாம் நவீன மருத்துவத்துக்கு செல்வதே உகந்தது.
@rufina rajkumar said...
மருத்துவர்கள் கொடுக்கிற மருந்தின் எண்ணிக்கை மயக்கம் வர செய்கிறதே !
சில இடங்களில் பணம் பிடுங்க அதிக மாத்திரைகள் பரிந்துரைப்பதாக சொல்கிறார்கள்.நன்றி
@சிநேகிதி said...
நல்ல தகவல்
நன்றி
@மகேந்திரன் said...
நம்ம ஊரு பாட்டி வைத்தியமும், தமிழ் மருத்துவங்களும்
இன்னும் பல நோய்களை குணப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் நீங்கள் குறிப்பிட்டதுபோல மூட நம்பிக்கைகளை அதில் கலந்து
நோயின் தீவிரத்தை இன்றைய பொழுதில் அதிகப்படுத்திவிடாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.
இன்று நாடுகளுக்கிடையே ஆயுதப்போருக்கு பதிலாக, நோய்கள் பரப்பும்
நுண்ணுயிரிகளை அடுத்த நாட்டில் பரப்பி அதில் பணம் சம்பாதிக்கும் முறையையும், பொருளாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்தியும் தான் போர்புரிகிறார்கள். அதற்கேற்றார்போல அந்தந்த நேரத்தில் மருத்துவரை அணுகி வந்த நோய்க்கு தகுந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அருமையான விழிப்புணர்வு கட்டுரை நண்பரே.
ஆமாம்,எய்ட்ஸ்கூட பயோவார் என்ற கருத்து உண்டு.நன்றி நண்பரே!
@துஷ்யந்தன் said...
இப்போ எல்லாம் யார் பாஸ் மூலிகை மருந்து பாவிக்கிறாங்க!!! காலம் அதை தூக்கி வீசிட்டுது.... அதில் கொஞ்சம் இன்னும் இருக்குத்தான்..... இதில் எது பெஸ்ட் என்று என்னால் முடிவுக்கு வர முடியவில்லை.... ஹா ஹா ...
பாட்டியை கேட்டால் இப்பவும் சொல்லுவா மூலிகை மருந்துதான் சிறந்தது என்று ;)
சில நோய்களுக்கு நவீன மருத்துவத்தை நாடவேண்டியது அவசியம்.தாமதம் செய்தால் ஆபத்து.நன்றி துஷ்யந்தன்.
@நிலாமகள் said...
எளிய கிராமத்து மனிதனுக்கு முன்னுரிமை என்பது பாரம்பர்ய நம்பிக்கைகளில் அடங்கியிருக்கிறது.//
பெரும்பாலும் நோயின் ஆரம்ப கட்டத்தில் தான் இப்பரிசோதனை முயற்சிகள் இருக்க வேண்டும். முற்றிய பின் தெரியவரும் நோய்களுக்கெல்லாம் நவீன மருத்துவத்துக்கு செல்வதே உகந்தது.
நோய்முற்றும் வரை இருப்பதும் பிரச்சினை.சில அறிகுறிகளுக்கு உடனே மருத்துவரை நாட வேண்டும்.நன்றி
மன தைரியம் இருந்தாலே அவன் பாதி குணமடைந்து விடுவான்.
அவசியமான பகிர்வு...
Arumaiyna Vizhippunarvu. Thodaravum.
TM 7.
உண்மைதான்!
//நோய்கள் குறித்த கல்வியும், விழிப்புணர்வும் நமக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது.//
நிச்சயமாக! நன்றாகச் சொன்னீர்கள்!
@சசிகுமார் said...
மன தைரியம் இருந்தாலே அவன் பாதி குணமடைந்து விடுவான்.
உண்மைதான்,சில நோய்களுக்கு உடனே மருத்துவரை பார்க்கவேண்டி இருக்கும்.நன்றி
@ராஜா MVS said...
அவசியமான பகிர்வு...
நன்றிசார்.
@துரைடேனியல் said...
Arumaiyna Vizhippunarvu. Thodaravum.
நன்றி
@ஸ்ரீராம். said...
உண்மைதான்!
கருத்துரைக்கு நன்றி
@சென்னை பித்தன் said...
//நோய்கள் குறித்த கல்வியும், விழிப்புணர்வும் நமக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது.//
நிச்சயமாக! நன்றாகச் சொன்னீர்கள்!
நன்றி
அருமையான விளக்கம்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கீங்களா?
நோய்களுக்கான காரணங்களை அறிந்து எம் வாழ்வினை வளம்படுத்திக் கொள்வதற்கான அருமையான ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறீங்க.
நன்றி.
சில விதமான நோய்களுக்கு இப்படி வீட்டு கைவைத்தியம் செய்துகொள்வதில் தவறில்லை.. ஆனால் சரியாக வில்லை என்றால் அதையே மீண்டும் மீண்டும் செய்யாமல் மருத்துவரை நாடுவதுதான் சிறந்தது..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
Post a Comment