Tuesday, December 28, 2010

தமிழ்மணம் போட்டியில் இரண்டாம் கட்ட்த்துக்கு தேர்வான கதை.


கடுமையான போட்டியில்!?நான் கூட இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.சென்ற ஆகஸ்டு மாதத்திலிருந்துதான் பதிவுலகில் இருக்கிறேன்.எனக்கு நேரடியாக எந்த பதிவரையும் தெரியாது.(ஈரோட்டிற்கு செல்ல முடியவில்லை.)தமிழ்மணம் விருது அறிவிப்பை பார்த்தவுடன் கலந்துகொண்டால் நான்கு பேர் பார்வை படும் என்று நினைத்து பரிந்துரை செய்தேன்.

முதல் கட்ட வாக்கெடுப்பு துவங்கியவுடன் சில நாட்களில் மங்கை அவர்கள் எனது இடுகை ஒன்றிற்கு பின்னூட்டம் இட்டிருந்தார்.அருமை.வாழ்த்துக்கள்.’-என்று.ஏதேது நாம் கூட கவனிக்கப்படுகிறோம் என்று சந்தோஷமாக இருந்த்து.மீண்டும் ஒரு முறை நன்றி! மங்கை அவர்களே!

தமிழகத்தின் பாரம்பரிய கலையான தெருக்கூத்து தொடர்பான நாட்டுப்புற நம்பிக்கைகள் பற்றியது.ரதி,மன்மதன் கதை.யாரையும் முட்டாளாக்கும் காமத்தை கட்டுப்படுத்துவது பற்றிய நம்பிக்கை அது.இடுகைத்தலைப்பு,

நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காம்ம்.

(தமிழிசை,நடனம்,தமிழ்கிராமியக்கலைகள்-பிரிவில்) கதைக்கு வருகிறேன்.போட்டியில் கலந்துகொள்ளும் எல்லா இடுகைகளையும் எத்தனை பேர் படித்து வாக்களித்து இருப்பார்கள்.?அப்படி யாராவது இருந்தால் அவருக்கு தரலாம் எல்லா விருதையும்!.நாலு பேருக்குக் கூட தெரியாமல் நான் எப்படி இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு வந்தேன்?

யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் என்றால் அந்த ரகசியத்தை சொல்கிறேன்.வேறொன்றுமில்லை.அந்த்த் தலைப்பில் மொத்தம் எட்டு இடுகைகள்தான் முதல் கட்ட போட்டியில் இருந்த்து.எட்டும் இரண்டாம் கட்ட்த்துக்கு வந்து விட்ட்து.எனக்கும் வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்கப் போகிறவர்களுக்கும் மிக்க நன்றி.


-

No comments: