Thursday, December 1, 2011

குளிர்கால உணவுகள்.


                            பனி,குளிர், வெப்ப நிலைமாறுபாடு போன்றவை ஒன்றோடொன்று தொடர்புள்ளவை.சளி பிடித்தல்,அலர்ஜி,சைனஸ் ஆகிய மூச்சு மண்டலம் தொடர்புடைய நோய்கள் சிரமப்படுத்தும்.ஆஸ்துமா உள்ளவர்கள் அதிகம் அவதிப்படும் காலம்.படுக்கையை விட்டு எழுவதற்கே கஷ்டமாக இருக்கும்.சில நேரங்களில் பத்துமணி வரைகூட பனி விலகாது.
                             குளிர்காலத்திற்கென்று பொருத்தமான உணவு வகைகளாக நம்முடைய தேர்வு என்ன? சூடான உணவு,அடிக்கடி தேநீர்,காபி,கொரிக்கும் வகைகள் போன்றவை.பலர் குளிர்காலத்தில் அதிக அளவு அசைவத்தை விரும்பி உண்பதை பார்த்திருக்கிறேன்.பிறகு ஜங்க்புட் எனப்படுபவை,துரித உணவுகள் பிடித்தமானதாக இருக்கின்றன.
                             பெரும்பாலானவர்கள் இதைக்கேள்விப்பட்டிருக்க முடியும்.கோடை காலத்தில் எளிதில் செரிமானம் ஆகிவிடுகிறது,ஆனால் குளிர்காலத்தில் அப்படியில்லை என்று சொல்வார்கள்.இது ஓரளவு உண்மைதான்.பனி ஒத்துக்கொள்ளாமல்,சீதோஷ்ண நிலை மாறுபடுவதால் பலருக்கு தும்மல்,மூக்கடைப்பு,சளி பிடித்தல் என்று இருக்கும்.
                             சுவாசக்கோளாறுகள் செரிமான பிரச்சினைகளையும் கொண்டுவருகிறது.அஜீரணம்,கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிட்ட்ட்து போன்ற உணர்வு,உப்பிசம்,வயிற்றில் அதிக அமிலசுரப்பு போன்ற தொந்தரவுகள் இருக்க வாய்ப்புண்டு.குளிருக்காக அடிக்கடி அதிகம் காபி,டீ குடிப்பதும் வயிற்றுப்பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.புகை பிடிப்பவர்கள் குளிர்காலத்தில் அதிக முறை பிடிக்கிறார்கள்.இதுவும் சுவாசக்கோளாறுகளையும்,செரிமான தொந்தரவுகளையும் உருவாக்குகிறது.
                                காலையிலும்,மாலை இரவு நேரங்களில் செரிமானத்திற்கு எளிதான உணவுகளை உட்கொள்ளலாம்.மதிய நேரத்தில் மட்டும் அசைவம்,கொழுப்பு பொருட்கள் சேர்க்கலாம்.பொதுவாகவே அசைவ உணவுகளை எக்காலத்திலும் மதிய உணவில் சேர்ப்பதே நல்லது.உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.அசைவ உணவுடன் ப்ப்பாளி பழத்தை சேர்ப்பது ஜீரணிக்க உதவும்.
                               வறுத்த உணவுகள்,சிப்ஸ்,வெண்ணெய்,க்ரீம் சேர்ப்பது பலருக்கு செரிக்காது.ஒத்துக்கொள்ளாத உணவை விலக்கி விடவேண்டும்.வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம்.சிலருக்கு நான் என்ன சாப்பிட்டாலும் எந்த பிரச்சினயும் இல்லை என்பார்கள்.அதுவும் சாத்தியம்தான்.
                               கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த்து போன்ற உணர்வு சிலருக்கு இருக்கும்.இத்தொல்லை இருக்கும்போது சாப்பாட்டுடன் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.காலிஃபிளவர்,முட்டைக்கோஸ்,வெங்காயம்,பீன்ஸ் உள்ளிட்டவை வாயுவை அதிகரிக்கும்.இவற்றையும் தவிர்க்கலாம்.
                              பொதுவாக உணவு ஆலோசனை என்பது அவரவர் குடும்ப வருமானம்,உடல்நிலை,நோய்கள்,வயது,கிடைக்கும் சூழல் என்று பல காரணிகளைக் கொண்டு இருக்கும்.மேலே சொல்லப்பட்டவை பொதுவானவை ஆனாலும் கருத்தில் கொள்ளலாம்.
-

29 comments:

ம.தி.சுதா said...

காலத்திற்கேற்ற சிறந்த பதிவ ஒன்று மிக்க நன்றியுங்க...

நம்மளுக்கு கல்லுக் கூட செமிக்குமங்க....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உடல் நலம் சார்ந்த சிறந்த பதிவு

முனைவர் இரா.குணசீலன் said...

காலத்துக்கு ஏற்ற தேவையான பதிவு அன்பரே..

Sankar Gurusamy said...

நல்ல உபயோகமான பதிவு...

பகிர்வுக்கு மிக்க நன்றி..

Mathuran said...

உபயோகமான தகவல்

மாய உலகம் said...

சரியான நேரத்தில் பதிவிட்டுள்ளீர்கள்... அவசிய பதிவு.. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

ராஜா MVS said...

பலரும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்... தகுந்த நேரத்தில்...

பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

பாலா said...

சீசனுக்கு ஏற்ற சரியான பதிவு. அருமை.

சென்னை பித்தன் said...

காலத்துக்கேற்ற சிறந்த பதிவு.நன்றி.

சுதா SJ said...

பொருத்தமான நேரத்தில் பொருத்தமான பதிவு போடுவதில் உங்களை மிஞ்ச முடியாது போல்
ஹா ஹா.... ஆரோக்கியமான பதிவு

shanmugavel said...

@♔ம.தி.சுதா♔ said...

காலத்திற்கேற்ற சிறந்த பதிவ ஒன்று மிக்க நன்றியுங்க...

நம்மளுக்கு கல்லுக் கூட செமிக்குமங்க....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா

ஓடியாடி வேலை செய்தால் கல்லும் செமிக்கும் என்பது உண்மையே! நன்றி

shanmugavel said...

@rufina rajkumar said...

உடல் நலம் சார்ந்த சிறந்த பதிவு

நன்றி

shanmugavel said...

@முனைவர்.இரா.குணசீலன் said...

காலத்துக்கு ஏற்ற தேவையான பதிவு அன்பரே..

கருத்துரைக்கு நன்றி முனைவரே!

shanmugavel said...

@Sankar Gurusamy said...

நல்ல உபயோகமான பதிவு...

பகிர்வுக்கு மிக்க நன்றி..

நன்றி சங்கர்.

shanmugavel said...

@மதுரன் said...

உபயோகமான தகவல்

நன்றி மதுரன்.

shanmugavel said...

@மாய உலகம் said...

சரியான நேரத்தில் பதிவிட்டுள்ளீர்கள்... அவசிய பதிவு.. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

நன்றி நண்பா!

shanmugavel said...

@திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நன்றி நண்பரே!

வருகிறேன் நண்பா! நன்றி

shanmugavel said...

@ராஜா MVS said...

பலரும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்... தகுந்த நேரத்தில்...

பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

நன்றி ராஜா

shanmugavel said...

@பாலா said...

சீசனுக்கு ஏற்ற சரியான பதிவு. அருமை.

நன்றி சார்!

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

காலத்துக்கேற்ற சிறந்த பதிவு.நன்றி.

நன்றி அய்யா!

shanmugavel said...

@துஷ்யந்தன் said...

பொருத்தமான நேரத்தில் பொருத்தமான பதிவு போடுவதில் உங்களை மிஞ்ச முடியாது போல்
ஹா ஹா.... ஆரோக்கியமான பதிவு

நன்றி நன்றி

ஸ்ரீராம். said...

நல்ல ஆலோசனைகள். குளிகாலத்தில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் குறைந்து போய் விடும். சிறுநீரகக் கல் பிரச்னை இருப்பவர்கள் இந்நாட்ட்களில் தண்ணீர் குடிப்பது குறைந்து போய் கல்லினால் ஏற்படும் பிரச்னைகள் தலை தூக்கும். எனவே ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் மூன்று லிட்டர் தண்ணீராவது குடிப்பது பயனுள்ளதாக இருக்கும்..

சசிகுமார் said...

வழக்கம் போல அவசியமான பதிவு சார்....

RAVICHANDRAN said...

தங்களுடைய பயனுள்ள பதிவுகளின் வரிசையில் இதுவும் நல்ல பதிவு.

RAVICHANDRAN said...

முட்டை,உருளைக்கிழங்கு வாயுவை உண்டாக்கும் என்று சொல்கிறார்கள்.

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
குளிர் காலத்திற்கு ஏற்றாற் போல நாம் தெரிவு செய்து உட் கொள்ள வேண்டிய உண்வுகள் பற்றியும் சமிபாட்டுத் தன்மை பற்றியும் அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

மார்கழிக்கு ஏற்ற பதிவு!

Advocate P.R.Jayarajan said...

காலத்தே கிடைத்த பயன்மிகு பதிவு...
http://sattaparvai.blogspot.com/2011/12/blog-post.html

curesure Mohamad said...

பெரிய பிரமாதமாய் ஒன்றும் சொல்லவில்லை