சத்தியத்தை
கடைபிடித்தால் சோதனைக்கு உள்ளாகித்தான் தீர வேண்டுமா?நேர்மையாக இருப்பது பெரிய
தவறா? எங்கெங்கும் லஞ்சமும் ஊழலும் பெருக்கெடுத்து ஓடும்போது நான் லஞ்சம்
வாங்கமாட்டேன் என்றால்? அப்படியும் யாரோ ஒருவர் இருக்கவே செய்கிறார்கள்.பிறருடைய
ஏளனத்தையும்,நமட்டுச்சிரிப்புக்கும் ஆளாகி நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நேர்மை என்பது
இன்று சமூகத்திற்கு எதிரான குணமாக பார்க்கப்படுகிறது.லஞ்சம் வாங்கமாட்டேன் என்பவர்
ஓநாய்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு விழிப்பவர் போல இருக்கிறார்.கிட்ட்த்தட்ட
தனிமைப்படுத்தப் படுகிறார்.ஒதுக்கப் படுகிறார்.அலுவலகத்தில் மனசாட்சி போல நடமாடிக்
கொண்டிருக்கிறார்.மற்றவர்களை அந்த மனசாட்சி உறுத்துகிறது.
தாங்கள்
செய்வது குற்றம் என்ற எண்ணத்தை வலிமையாக உருவாக்குகிறார்.அவர்களிடம் குற்ற
உணர்ச்சியை ஏற்படுத்துவதால் வெறுக்கப்படுகிறார்.சிக்கலான சூழ்நிலைகளில் உதவி
தேவைப்பட்டால் சக பணியாளர்கள் கண்டு கொள்வதில்லை.காட்டிக்கொடுப்பாரோ என்ற பயம்
அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது.யாருடனும் அவர் நெருக்கமானவர் இல்லை.
சத்தியத்தை
கடைபிடிப்பேன் என்று சொல்லி ஏன் இத்தனை சோதனைகளை அனுபவிக்க வேண்டும்.இப்படி
ஒதுக்கப்படுவதால் மனம் பாதிக்கப்படாதா? பாதிக்கப்படாமல் இருப்பதும்
சாத்தியம்தான்.மற்றவர்கள் பார்வையில் இவர் பைத்தியக்காரனாக இருக்கும்போது இவருக்கு
மற்றவர்கள் அப்படி தெரிவார்கள்.தான் நேர்மையானவன் என்ற எண்ணம் சுய மதிப்பை
அதிகப்படுத்துகிறது.
தன்னை அவர்
பெருமையாக நினைத்துக் கொள்கிறார்.குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பதால் நிம்மதியாக
இருக்கிறார்.மோசமான பழக்கவழக்கங்கள் இல்லாமல் இருப்பவர்களே அதிகம்.லஞ்சம்
வாங்குபவர்களை இவர் கேலியாகப் பார்ப்பார்.இவர்களில் சிலர் மனதளவில்
பாதிக்கப்படுவதும் உண்டு.சரி ஏன் யாரோ ஓரிருவர் மட்டும் இப்படி இருக்கிறார்கள்?
ஒருவர் என்னிடம் கை சுத்தமான ஆள்
ஒருவரைப்பற்றி பேசியது நினைவுக்கு வருகிறது.” அவனுக்கு பயம்
சார்,தைரியம் இல்ல! மாட்டிக்கிட்டா மானம் போயிடுமேன்னு நடுக்கம்,நாட்டக்
காப்பாத்தப்போறானா என்ன? கொஞ்சம் எரிச்சலாக சொன்னாலும் இப்படி இருக்கவும்
வாய்ப்புண்டு.சட்டம்,விதிகள் ஆகியவற்றின் நோக்கம் இதுதான்.தண்டனை கிடைக்கும் என்ற
பயத்தில் குற்றம் செய்யாமல் இருப்பார்கள்.
சிலர் நல்ல
புத்தகங்களை படித்து தொலைத்து விடுகிறார்கள்.தனக்கென்று கொள்கைகளை உருவாக்கிக்
கொள்கிறார்கள்.அநியாயத்திற்கு எதிராக எப்போதும் சிந்திக்கிறார்கள்.ஒழுக்கம்
நிறைந்த ஆளுமையை பெற்றிருக்கிறார்கள்.மிகச் சிலருக்கு சின்ன வயதில் இருந்தே பொய்
சொல்லி,தவறு செய்தே பழக்கம் இருக்காது.நல்ல சூழலில் இருந்து வந்திருப்பார்கள்.
34 comments:
சத்திய சோதனைகளைக் கடந்து கறைபடாமல் இருக்க வேண்டும். அதற்கான மனஓட்டம் இளமை முதல் வேண்டும்.
நல்ல பதிவு.
ஒரே அலுவலகத்தில் சக ஊளியர்கள் கையூட்டு வாங்குவதை பார்க்கிறார், 4,5-முறை இவரிடமும் சிலர் முயற்சிக்கிறார்கள். அடுத்தமுறை இயல்பாகவே மனதுக்குள் தோன்றும். நாமும் வாங்கினால் என்ன? என்று இது மனித இயல்பு.
அப்புறமும் வாங்காமல் இறுதிவரை நேர்மையாக இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அது அவருடைய ஒழுக்கமான பண்பு.
தங்களின் நண்பர் ஒருவரை பற்றி சொல்லி இருக்காரே, அவருக்கு பயம் அல்ல.
நல்ல ஒழுக்கமான முறையில் வளர்க்கப்பட்டிருக்கிறார். அவர் வளர்ந்த சூழலும் நல்ல பண்புகளை அவருக்குள் ஊட்டியிருக்கிறது என்றே சொல்லலாம்...
நல்ல அருமையான அலசல்...
பகிர்வுக்கு மிக்க நன்றி... நண்பரே...
உண்மையான கருத்து. சத்தியத்தை கடைபிடிக்க மற்றவரை பகைத்துக் கொள்ளாத சாமர்த்தியமும் இருக்க வேண்டும். இல்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் கவிழ்க்கப்படுவார்கள். ஆனாலும் மனதளவில் தலை நிமிர்ந்து நிற்கும் நிம்மதி வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும்.
ஒத்துக்கொள்ள வேண்டிய விசயம்..
@சென்னை பித்தன் said...
சத்திய சோதனைகளைக் கடந்து கறைபடாமல் இருக்க வேண்டும். அதற்கான மனஓட்டம் இளமை முதல் வேண்டும்.
நல்ல பதிவு.
ஆமாம் அய்யா! நன்றி
@ராஜா MVS said...
ஒரே அலுவலகத்தில் சக ஊளியர்கள் கையூட்டு வாங்குவதை பார்க்கிறார், 4,5-முறை இவரிடமும் சிலர் முயற்சிக்கிறார்கள். அடுத்தமுறை இயல்பாகவே மனதுக்குள் தோன்றும். நாமும் வாங்கினால் என்ன? என்று இது மனித இயல்பு.
அப்புறமும் வாங்காமல் இறுதிவரை நேர்மையாக இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அது அவருடைய ஒழுக்கமான பண்பு.
கலக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம் நண்பரே ! நன்றி
@ராஜா MVS said...
நல்ல அருமையான அலசல்...
பகிர்வுக்கு மிக்க நன்றி... நண்பரே...
பாராட்டுக்கு நன்றி
@சாகம்பரி said...
உண்மையான கருத்து. சத்தியத்தை கடைபிடிக்க மற்றவரை பகைத்துக் கொள்ளாத சாமர்த்தியமும் இருக்க வேண்டும். இல்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் கவிழ்க்கப்படுவார்கள். ஆனாலும் மனதளவில் தலை நிமிர்ந்து நிற்கும் நிம்மதி வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும்.
மற்றவர்களின் கொள்கைக்கு எதிராக இருக்கும்போது பகை தானாகவே ஏற்பட்டுவிடுகிறது.நன்றி
@நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ஒத்துக்கொள்ள வேண்டிய விசயம்..
நன்றி சார்!
இப்போது எல்லாம் இப்படி யார் பாஸ் இருக்காங்க :((((
குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பதால் நிம்மதியாக இருக்கிறார்<<<<<<<<<<<<<
மிக உண்மை.......
@துஷ்யந்தன் said...
இப்போது எல்லாம் இப்படி யார் பாஸ் இருக்காங்க :((((
அபூவமாக யாரேனும் ஒருவர் கை சுத்தமாக் இருந்து கொண்டிருக்கிறார்கள்.நன்றி
@துஷ்யந்தன் said...
குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பதால் நிம்மதியாக இருக்கிறார்<<<<<<<<<<<<<
மிக உண்மை.......
நன்றி துஷ்யந்தன்.
சத்தியம் உரைத்தால்
வெம்பகை வந்து சேரும்...
இன்றைய காலகட்டத்தில் இது நிதர்சனமான உண்மை நண்பரே.
சுற்றியுள்ள் சூழல் அப்படி. உண்மை அவ்வளவு சுடுகிறது.
வைரத்தை மண்ணிலிருந்து எடுத்தவுடன் பட்டை தீட்டவேண்டும்.
இல்லையேல் அதற்கும் கல்லின் குணம் வந்துவிடும்.
அதுபோல குழந்தையிலிருந்தே குணங்கள் பட்டை தீட்டப்பட வேண்டும்.
அழகாக சொன்னீர்கள் நண்பரே.
வணக்கம் அண்ணே,
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
சத்தியத்தினைக் கடைப் பிடிக்கையில் ஏற்படும் இடர்களையும், சத்தியத்தினைக் கடைப் பிடிப்பதால் கிடைக்கும் விடயங்களையும் அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
ஊரோடு ஒத்து வாழப் பழகிக் கொண்டால் நல்லது என நினைக்கிறேன்.
மாட்டிக்கொள்வோம் என்ற பயம் ஆரம்பத்தில் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.. காலப்போக்கில் இது மற்றவரைப் பார்த்து மாறிவிடுகிறது.. சிலரை பயமுறுத்தியும் மாற்றுகிறார்கள்.
உண்மையில் மனதளவில் நேர்மையாக இருக்கவேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தை மற்றும் கொள்கைப்பிடிப்பு இருப்பவர்கள்தான் இன்றும் நேர்மையாக இருக்கிறார்கள்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
//மிகச் சிலருக்கு சின்ன வயதில் இருந்தே பொய் சொல்லி,தவறு செய்தே பழக்கம் இருக்காது.நல்ல சூழலில் இருந்து வந்திருப்பார்கள்//
- enakke enekkenru eluthiyathu pol irukkirathu Nanbare! Arumaiyana Pathivu.
Tamilmanam 9.
சத்திய சோதனைகளைக் கடந்துவர மனத்திடமும் நல்லபண்புகளும் இருக்க வேண்டும். அதற்கான வல்லமையை இளமை முதல் ஊட்டவேண்டும்.
நல்ல பதிவு.
அநியாயத்திற்கு எதிராக எப்போதும் சிந்திக்கிறார்கள்.நல்லது தானே! நண்பா!
கோவணம் கட்டற ஊர்ல வேட்டி கட்டறவன் பைத்தியக்காரன் என்பார்கள்! அது போல ஊழல் மலிந்த ஊரில் நேர்மை பார்க்கப் படுகிறது. 'எங்கேயாவது மனிதன் இருந்தாள் என்னிடம் சொல்லுங்கள், இருக்கும் அவனும் புனிதன்தானா என்னிடம் காட்டுங்கள்' என்ற கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருகிறது!
நல்ல, உண்மையான அலசல்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
சத்திய சோதனையை கடை
பிடித்து வேதனைப் பட்டவர் மட்டுமல்ல அதனால் அந்த கொள்கைய விட்டவரும் உண்டு
விடாமல் வாழ்ந்து காட்டியவரும் உண்டு
புலவர் சா இராமாநுசம்
@மகேந்திரன் said...
சத்தியம் உரைத்தால்
வெம்பகை வந்து சேரும்...
இன்றைய காலகட்டத்தில் இது நிதர்சனமான உண்மை நண்பரே.
சுற்றியுள்ள் சூழல் அப்படி. உண்மை அவ்வளவு சுடுகிறது.
வைரத்தை மண்ணிலிருந்து எடுத்தவுடன் பட்டை தீட்டவேண்டும்.
இல்லையேல் அதற்கும் கல்லின் குணம் வந்துவிடும்.
அதுபோல குழந்தையிலிருந்தே குணங்கள் பட்டை தீட்டப்பட வேண்டும்.
அழகாக சொன்னீர்கள் நண்பரே.
நல்ல கருத்துரைக்கு நன்றி நண்பரே!
@நிரூபன் said...
வணக்கம் அண்ணே,
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
சத்தியத்தினைக் கடைப் பிடிக்கையில் ஏற்படும் இடர்களையும், சத்தியத்தினைக் கடைப் பிடிப்பதால் கிடைக்கும் விடயங்களையும் அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
நன்றி சகோ!
@சத்ரியன் said...
ஊரோடு ஒத்து வாழப் பழகிக் கொண்டால் நல்லது என நினைக்கிறேன்.
அய்யோ ஏன் சத்ரியன்? நன்றி
@Sankar Gurusamy said...
மாட்டிக்கொள்வோம் என்ற பயம் ஆரம்பத்தில் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.. காலப்போக்கில் இது மற்றவரைப் பார்த்து மாறிவிடுகிறது.. சிலரை பயமுறுத்தியும் மாற்றுகிறார்கள்.
உண்மையில் மனதளவில் நேர்மையாக இருக்கவேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தை மற்றும் கொள்கைப்பிடிப்பு இருப்பவர்கள்தான் இன்றும் நேர்மையாக இருக்கிறார்கள்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
நன்றி சங்கர்.
@துரைடேனியல் said...
//மிகச் சிலருக்கு சின்ன வயதில் இருந்தே பொய் சொல்லி,தவறு செய்தே பழக்கம் இருக்காது.நல்ல சூழலில் இருந்து வந்திருப்பார்கள்//
- enakke enekkenru eluthiyathu pol irukkirathu Nanbare! Arumaiyana Pathivu.
நன்றி சகோ!
@அம்பலத்தார் said...
சத்திய சோதனைகளைக் கடந்துவர மனத்திடமும் நல்லபண்புகளும் இருக்க வேண்டும். அதற்கான வல்லமையை இளமை முதல் ஊட்டவேண்டும்.
நல்ல பதிவு.
ஆமாம் அய்யா! நன்றி
@ஓசூர் ராஜன் said...
அநியாயத்திற்கு எதிராக எப்போதும் சிந்திக்கிறார்கள்.நல்லது தானே! நண்பா!
யார் நண்பா? நன்றி
@ஸ்ரீராம். said...
கோவணம் கட்டற ஊர்ல வேட்டி கட்டறவன் பைத்தியக்காரன் என்பார்கள்! அது போல ஊழல் மலிந்த ஊரில் நேர்மை பார்க்கப் படுகிறது. 'எங்கேயாவது மனிதன் இருந்தாள் என்னிடம் சொல்லுங்கள், இருக்கும் அவனும் புனிதன்தானா என்னிடம் காட்டுங்கள்' என்ற கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருகிறது!
எங்காவது இருக்கக்கூடும் நன்றி சார்.
@திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல, உண்மையான அலசல்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
தங்களுக்கும் நன்றி நண்பரே!
@புலவர் சா இராமாநுசம் said...
சத்திய சோதனையை கடை
பிடித்து வேதனைப் பட்டவர் மட்டுமல்ல அதனால் அந்த கொள்கைய விட்டவரும் உண்டு
விடாமல் வாழ்ந்து காட்டியவரும் உண்டு
ஆமாம் அய்யா! நன்றி
Post a Comment