தெனாலிராமனின்
சூடுபட்ட பூனையை நினைவிருக்கிறதா? சூடான பாலை சுவைத்து நாக்கை சுட்டுக்கொண்ட பூனை
மீண்டும் பாலை வைத்தால் குடிக்கவில்லை.சமூக பயம் என்பது இப்படித்தான்.கடந்தகால
அனுபவங்களே பயத்தை ஏற்படுத்துகின்றன.செல்லுமிடமெல்லாம் வெற்றியை கண்டால்
அச்சத்திற்கும் கலக்கத்திற்கும் மனம் ஆட்படாது.ஒதுங்கிப்போகாமல்,ஒளிந்து கொள்ளாமல்
சமூகத்தை எதிர்கொள்வோம்.நிலத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பிக்
கொண்டிருக்கிறேன்.மாலை நேரம்.லேசான இருட்டு படியத்துவங்கி இருக்கிறது.கவனிக்கவில்லை.பாம்பை
மிதித்திருப்பேன்.இருதயத்துடிப்பு அதிகமாக உடல் வியர்த்து கொடூர அனுபவம்.அவ்வளவு
நெருக்கமாக பாம்பை அதுவரை நான் பார்த்த அனுபவம் இல்லை.
                                அதே வழியில்
நான் நடமாடித்தான் ஆக வேண்டும்.அந்த இட்த்தை கடக்கும் போதெல்லாம் என்னிடம் அதே
விளைவு.சில காலம் வரை அப்படி இருந்து கொண்டிருந்த்து.கவனிக்கவும் சில
காலம்தான்.பிறகு சரியாக போய் விட்ட்து.இதே போன்ற அனுபவங்கள் தொடர்ந்திருந்தால்
வழியில் நடப்பதே பிரச்சினையாக இருக்கும்.கடந்த காலத்தில் சந்தித்த சூழ்நிலைகளே
பயத்தை உருவாக்குகின்றன.அடிக்கடி தோல்விகளை எதிர்கொண்ட ஒருவர் சமூக பயத்திற்கு
ஆளாக வேண்டி இருக்கலாம்.நிறம் காரணமாக,சமூக தகுதி நிலை காரணமாக,இயலாமை,உறவுகள்
தொடர்பாக கேலிக்கும்,கிண்டலுக்கும் ஆளாக நேர்வது பிரச்சினையை கொண்டு வருகிறது.
                                பொத்திப் பொத்தி
வளர்க்கும் சில குடும்பங்கள் இருக்கின்றன.” அம்மா விளையாடுகிறேன்’’
என்றால் ’’ஏதாவது
காயம் பட்டு விடும் வேண்டாம்’’
என்பார்கள்.மிக சாதாரணமாக அதெல்லாம் உன்னால் முடியாது வேண்டாம்
என்பார்கள்.நெகட்டிவ் வார்த்தைகளையே சொல்லி வளர்க்கும் குடும்பங்களில் இருந்தும்
சமூகத்தை எதிர்கொள்ள முடியாத மனிதர்கள் தோன்றலாம்.வாழ்க்கை முழுக்க எந்த
ரிஸ்க்கும் எடுக்காமல் முன்னோர் சம்பாதித்த சொத்தை வைத்தே பிழைப்பு நடந்துவிடும்.மிக
நெருங்கிய உற்றார் உறவினர்கள் மட்டுமே இவர்களுடைய சமூகம்.
                                   டீனேஜ் இளைஞனுக்கு
மிகப் பெரிய அடி,பெண்கள் முன்னால் கேலி,கிண்டல் செய்யும்போது ஏற்படுகிறது.மனம்
எதிர்பாலினர் அங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும்போது,உலகமே நம்மை
மதிக்கவேண்டும் என்று பேராவல் உள்ள வயதில் நண்பர்களின் கிண்டல் அதிக பாதிப்பை
ஏற்படுத்தும்.என்னடா? வேற சட்டையே இல்லையா உங்கிட்ட? இவங்கப்பன் நேத்து
குடிச்சுட்டு வந்து அடிச்சாண்டா! இவங்காளுங்க இப்படித்தாண்டா! சில
நம்பிக்கைகள்,குடும்ப சூழ்நிலை போன்றவையும் சுற்றி உள்ளவர்களால் சுட்டிக்காட்டி
கேலி செய்யப்படும்.அவனால் மாற்ற முடியாத விஷயமாக இருக்கும்.
                                    தாழ்வு மனப்பான்மை
அதிகரித்து மற்றவர்களை தவிர்க்கவே விரும்புகிறார்கள்.தனிமை,சமூகத்தில் ஒட்டாத
நிலையால் பொது அறிவும் விழுந்துவிடும்.நான்கு பேரோடு கலந்து பழகும்போது தெரிந்து
கொள்ளும் விஷயங்கள் தெரியாமல் போய்விடுகிறது.இப்படி இருக்கும் பலர் போதை
மருந்துகளுக்கு,குடிக்கு ஆளாவதும் சாத்தியம்.சூழல் தொடர்ந்து மாறாமல் இருந்தால் மன
அழுத்தம் ஏற்பட்டு தற்கொலையில் முடிவதும் உண்டு.
                               சுற்றியுள்ள
சமூகமே சோஷியல் போபியாவுக்கான காரணமாக இருக்கிறது.குறிப்பிட்ட இட்த்தில் பாம்பை
பார்த்த அனுபவம் பாம்பின் மீது பயத்தை உருவாக்குவது போலவே சமூகம் தந்த அனுபவம்
சமூகத்தின் மீது பயத்தை ஏற்படுத்துகிறது.தொடர் தோல்விகள் முயற்சியில்லாமல் ஒதுங்க
வைக்கிறது.இப்படிப்பட்டவர்களை நண்பர்கள் அடையாளம் கண்டால் மற்றவர்களிடம் பெருமையாக
அறிமுகப்படுத்தலாம்.அவரது கருத்துக்கு முக்கியத்துவம் தரலாம்.அவர் முக்கியமானவர்
என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம்.
அடுத்த
பதிவில் முடியும்.



24 comments:
பதிவு நன்று..நன்றி..
நல்ல அலசல். ஊக்கப் படுத்தும் உறவுகள், நன்மை செய்யும் நண்பர்கள் அமைவதும் வரம்தான்.
@Kumaran said...
பதிவு நன்று..நன்றி..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
@ஸ்ரீராம். said...
நல்ல அலசல். ஊக்கப் படுத்தும் உறவுகள், நன்மை செய்யும் நண்பர்கள் அமைவதும் வரம்தான்.
நன்றி அய்யா!
அன்பு நண்பரே,
இன்றைய காலகட்டத்தில் அவசியமான பதிவு இது.
முட்டிமோதி முன்னுக்கு வரும் சூழல்
நெஞ்சில் தேவையில்லாது இருக்கும் சமுதாய பயத்தை போக்கி
முன்னேறினால் மட்டுமே வெற்றி வாகை சூட முடியும்.
பகிர்வுக்கு நன்றிகள் பல.
வணக்கம் அண்ணா,
எமது அகத்தடை காரணமாகவும், பயங் காரணமாகவும், எம் பேச்சு எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க. நன்றி.
@மகேந்திரன் said...
அன்பு நண்பரே,
இன்றைய காலகட்டத்தில் அவசியமான பதிவு இது.
முட்டிமோதி முன்னுக்கு வரும் சூழல்
நெஞ்சில் தேவையில்லாது இருக்கும் சமுதாய பயத்தை போக்கி
முன்னேறினால் மட்டுமே வெற்றி வாகை சூட முடியும்.
பகிர்வுக்கு நன்றிகள் பல.
நன்றி நண்பரே!
@நிரூபன் said...
வணக்கம் அண்ணா,
எமது அகத்தடை காரணமாகவும், பயங் காரணமாகவும், எம் பேச்சு எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க. நன்றி.
நன்றி நிரூ!
ஆழமான விசயம் இது.
நல்ல பதிவு.
தனிமையும் சமூக பயமும் குடும்பத்திலும் வளர்ப்பிலும் தான் இருக்கின்றன என அருமையாக விளக்கி இருக்கிறீர்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
TM-7
http://anubhudhi.blogspot.com/
நீங்கள் கூறும் ஒவ்வொரு காரணங்களும் உண்மை.... அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கிறோம்....
மிக அருமை. தன்னம்பிக்கை என்பது நம் செயல்களை எவ்வாறு பாதிக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள். குழந்தைகளை வளர்க்கும்போதே, நெகட்டிவ் ஆன வார்த்தைகளை தவிர்த்தால், அவர்களது தன்னம்பிக்கை வளரும்.
நல்ல அலசல் ..
Social Phobia patriya arumaiyana visayam arinthu konden. Nanri.
நல்ல பதிவு. ஊக்கம்தரும் நட்புக்களும் உறவுகளும் கிடைப்பது வரம்.
@நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ஆழமான விசயம் இது.
நல்ல பதிவு.
நன்றி அய்யா!
@Sankar Gurusamy said...
தனிமையும் சமூக பயமும் குடும்பத்திலும் வளர்ப்பிலும் தான் இருக்கின்றன என அருமையாக விளக்கி இருக்கிறீர்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
நன்றி சங்கர்.
@சசிகுமார் said...
நீங்கள் கூறும் ஒவ்வொரு காரணங்களும் உண்மை.... அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கிறோம்....
நன்றி சார்!
@பாலா said...
மிக அருமை. தன்னம்பிக்கை என்பது நம் செயல்களை எவ்வாறு பாதிக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள். குழந்தைகளை வளர்க்கும்போதே, நெகட்டிவ் ஆன வார்த்தைகளை தவிர்த்தால், அவர்களது தன்னம்பிக்கை வளரும்.
நன்றி பாலா!
@"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல அலசல் ..
நன்றி
@துரைடேனியல் said...
Social Phobia patriya arumaiyana visayam arinthu konden. Nanri.
நன்றி சகோ!
@அம்பலத்தார் said...
நல்ல பதிவு. ஊக்கம்தரும் நட்புக்களும் உறவுகளும் கிடைப்பது வரம்.
ஆமாம் அய்யா! நன்றி
இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன்.மிக மிகத் தேவையான பதிவுகள் கண்ணில் படுகிறது.அதில் இதுவும் ஒன்று.நன்றி மீண்டும் !
Post a Comment