Showing posts with label HUMOUR. Show all posts
Showing posts with label HUMOUR. Show all posts

Tuesday, October 4, 2011

சீரியஸ் பதிவரின் ஆசைக்காதல்-நகைச்சுவை


பதிவுலகில் நகைச்சுவை குறைந்து கொண்டே போகிறது.கடைசியில் என்ன கதி ஆவது என்று தெரியவில்லை.காமெடி செய்வது கஷ்டமான வேலை என்று பாக்யராஜ் விகடனில் சொல்லிவிட்டார்.பன்னிக்குட்டியாருக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து போய்விட்ட்தா என்று ஜோதிஜி கேட்கிறார்.நாமாவது காமெடியாக எழுதிப்பார்க்கலாம் என்றால்,அண்ணே இது நீங்கள் எழுதியதா? என்று கேட்டு மானத்தை வாங்குகிறார்கள்.சீரியஸ் பதிவர் ஒருவரை பார்க்கப்போனேன். நாடு இருக்கும் நிலை சிரிக்கிற மாதிரியா இருக்கிறது என்று  கேட்கிறார்.அவரைப் பார்த்து விட்டு வந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று.

                                 வாசலிலேயே பிரச்சினை.அவருடைய பெண் குழந்தை.மூன்று வயதிருக்கும்.என்னைப்பார்த்தவுடன் புன்னகை. என்னை குனியுமாறு சிரித்துக்கொண்டே சொன்னது.என் காதில் கிசுகிசுத்த வார்த்தைகள்’’அங்கிள் அப்பா அழறாங்க,ஜாலி  ஹே..ஹே..ஹே.. என்று ஒரே சிரிப்பு.பக்கத்து வீட்டு பையனை அழைத்து வேறு காட்டியது “எங்க அப்பா அழறாங்கடா! நல்லாருக்கில்ல! ஒரே ஆனந்தம்.
                                 உண்மையில் மனிதர் அழுது கொண்டுதான் இருந்தார்.அவரது கையில் நாளிதழ்.கோயம்புத்தூரில் பாதாள சாக்கடை எடுத்து இன்னும் மூடாமல் இருப்பதை புகைப்படம் எடுத்து போட்டிருந்தார்கள்.கொஞ்சம் கவனத்தை திசை திருப்பலாம் என்று பார்த்தேன்.மக்கள் தொகை பெருகிவிட்ட்து என்றேன்.அவரிடம் சமூகப் பிரச்சினைகள் பற்றித்தான் பேசமுடியும்.
                                 ஏன் சார் நான் கேட்கிறேன்! டாக்டர்கள் ஏன் பத்து மாதம் நாள் குறிக்கிறார்கள்? குழந்தை பெறும் காலத்தை முப்பது மாதம் ஆக்கவேண்டியதுதானே!??அரசாங்கத்துக்கும் அக்கறை இல்லை. எனக்கு வயிற்றை புரட்டியது.கொஞ்சம் சமாளித்துக்கொண்டே “அது இயற்கை அய்யா! 280 நாட்கள் ஒன்பது மாதம் பத்து நாள்.கடைசி மாத விலக்கு நாளிலிருந்து ஏழுநாள்,ஒன்பது மாதங்கள் கூட்டிக்கொள்ளவேண்டும்.அதுதான் பிரசவம் எதிர்பார்க்கும் தேதி.அதிலிருந்து ஒருவாரம் முன்போ,பின்போ குழந்தை பிறக்கும்.அவரை தெளிவு படுத்தி விட்ட்தாக எனக்கு தோன்றியது.

                                  அதெல்லாம் நம்பாதீங்க சார்! வெளிநாட்டு சதி.இந்தியாவை ஒழிக்க நினைக்கிறார்கள் தெரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்.என்றார்.பேச்சை மாற்றலாம் என்று எனக்கு தோன்றியது.வசமாக மாட்டிக்கொண்டார்.இதில் இழுத்து விட்டுவிட்டால் நாம் தப்பித்துவிடுவோம்.சரி இந்த காவிரிப் பிரச்சினை பெரிய பிரச்சினையாக இருக்கிறது!? என்றேன்.
                           ஆஹா! அந்த மாற்றத்தை எப்படி வர்ணிப்பது? ஆண்கள் வெட்கப்பட்டு அதுவரை நான் பார்த்த்து கிடையாது! அழுகை முகம் பிரகாசமாக ஒளி வீசியது.நீங்கள் பெரிய ஆள்! உங்களுக்கு எப்படித் தெரியும்? என் முதல் காதல்! ஆறு வருடங்களாக காதலித்தேன்,ஒரு நாள் தைரியமாக கடிதம் எழுதி கொடுத்து விட்டேன்.ஒரே வரி நறுக்கென்று! “ உன்னை காதல் செய்வேன்;நான் உன்னைக் கட்டிக் கொல்வேன் அவ்வளவுதான்

                           ஆற அமர படித்துவிட்டுசிரித்துக்கொண்டே என்னை அழைத்தாள்.நானே உங்கள் வீடு தேடி வருவேன்,அது வரை என்னைப் பார்த்தால் தெரியாத மாதிரி வேறு வழியில் போய்விட வேண்டும்.பின்னால் வரக்கூடாது என்றாள்.இன்றுவரை அப்படித்தான் இருக்கிறேன்.இப்போது பார்க்கவே முடிவதில்லை.அவளுக்காகத்தான் காத்திருக்கிறேன்.
                           உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்ட்தே? என்றேன்.இருந்தால் என்ன? காதலை விட்டுவிட முடியுமா? அவள் ஒருநாள் வருவாள் என்னைத்தேடி! என் மனைவியும் நல்லவர்தான்கொட்டிக்கிறீங்களா? என்று கேட்காமல் சாப்பாடு கொண்டு வந்து வைக்க மாட்டார்இரண்டு பேரும் இருந்து விட்டுப்போகட்டுமே!
                              உடனே நான் வீட்டுக்குப்போக வேண்டும் என்று எழுந்துவிட்டேன்.கொஞ்சம் தடுமாற்றமாக இருந்த்து.பார்த்துப்போங்கள் என்றார்.அவருக்கு நல்ல மனசு! வெளியே அவருடைய குழந்தை அதே புன்சிரிப்புடன்! என்னைக்குனியச்சொன்னது.அங்கிள் HOW DO YOU FEEL?  என் பதிலை எதிர்பார்க்கவில்லை.குதித்து சிரிக்க ஆரம்பித்த்து.

டிஸ்கி: மொக்கை போடுபவர்கள் சீரியஸானால் சீரியஸ் பதிவர்கள்   மொக்கை போடுவார்கள்.
-

Thursday, September 22, 2011

பெண் பார்க்கப்போய் காலில் விழுந்த பதிவர்-காமெடிபீஸ்


                             சில வலைப்பதிவுகளைப் படிப்பது வாழ்க்கையில் எந்தமாதிரியெல்லாம் கஷ்டம் தரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.கல்யாணமாகாத இளம்பெண்ணென்றால் சொல்லத்தேவையில்லை.பல்லைக்கடித்துக்கொண்டு படித்தால் கொஞ்சம் கொஞ்சமாக புரியும்.விவரமாகச் சொல்கிறேன்.

                             தனக்குக் கல்யாணமாகவில்லை என்று மனம் நொந்து எழுதிய பதிவை படித்தார் அந்த இளம்பெண்.என்ன நேரத்தில் படித்த்தோ தெரியவில்லை.அவ்வளவு நாளும் கல்யாணத்தின் மீது இருந்த வெறுப்பு மாயமாய் மறைந்து விட்ட்து.கல்லும் கரையும் என்பார்களே? இங்கே கரைந்து கடலில் கலந்து விட்ட்து.பெண்ணுக்கு காதலும்,கல்யாண ஆசையும் துளிர்த்து விட்ட்து.

                             ஆசைஆசையாய் வலைப்பதிவருக்கு தனது காதலை இல்லை,உயிரையே கொட்டி எழுதினார் காதல் கடிதம்.கல்யாணத்திற்கு அழைப்பாகவும் கருதலாம்.அந்தக் கடிதம் கீழே!

அன்பே,

                              உங்களைப் பார்ப்பதற்காக தூங்காமல் காத்திருப்பேன்.குளிக்காமல் உட்கார்ந்திருப்பேன்.நீங்கள் பெண் பார்க்க வரும் வரை வாசலை விட்டு எழுந்து உள்ளே போக மாட்டேன்.நீங்கள் எதற்காக பதிவு எழுத வேண்டும்? நான் ஏன் அதை விடிகாலையில் படிக்கவேண்டும்? இப்போது புரிந்துவிட்ட்தா? இருவருக்கும் கல்யாணமாகவில்லை.இனி நீங்களில்லாமல் என்னால் நடக்க முடியாது,ஓட முடியாது,கோலம் போட முடியாது! கீழ்கண்ட முகவரிக்கு உடனே வரவும்.

                              இளம்பெண் பழசை மறக்காதவர்.தான் வளர்க்கும் புறா காலில் கட்டி பதிவரிடம் தனது கடித்த்தை சேர்க்குமாறு அனுப்பினார்.கடித்த்தை படித்த பதிவருக்கு தலை சுற்றாமலா இருக்கும்.ஆஹா! நம்முடைய எழுத்தையும் படித்து நம்முடைய அறிவில் மயங்கி ஒரு பெண்ணுக்கு வந்த காதல்!

                              கடிதம் கிடைத்த்வுடன் புறப்ப்ட்டு முகவரி கண்டு பிடித்து ஊர் போய் சேர்ந்து விட்டார்.உண்மையில் அந்த பெண்ணும் வாசலில்தான் இருந்த்து.பதிவருக்கு அதைப் பார்க்க எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!ஆமாம்,உலகத்தில் இருக்கும் அத்தனை காதலும் அவருக்கு வந்து விட்ட்து.அவர்களது காதலையும்,உணர்ச்சிவேகத்தயும் கண்ட காக்கைகள் அலறி அடித்து ஓடின.

                              வீட்டுக்குள்ளே அழைத்துச்சென்றவுடன் உங்களிடம் நான் நிறைய பேச வேண்டும் என்றார் பெண்.’’தாராளமாக! அதற்குத்தானே வந்திருக்கிறேன்!

’’ உங்களுக்கு வடிவேல் பிடிக்குமா? விவேக்கா?’’

இது எதற்கு என்று பதிவருக்கு தோன்றினாலும்சொல்லி வைத்தார்,’’வடிவேல்

ச்சீ நீங்கள் ரொம்ப மோசம்,எனக்கும்தான்! பாவம் போக்கிரியில் அசினை உயிருக்கு உயிராக காதலிப்பார்,நடுவில் விஜய் வந்து கெடுத்து விட்டார்.அவர் மனசு எப்படி இருந்திருக்கும்?’’ நகைச்சுவை உணர்வு நிரம்பியவர் என்று பதிவருக்கு தோன்றியது.

’’உங்களுக்கு சமைக்கத்தெரியுமா?’’ஆண்கள் சமைத்தால் ருசியாக இருக்கும் என்று என் தோழி சொன்னாள்.’’

இந்த அதிரடியை நம்ம ஆள் எதிர்பார்க்கவில்லை! “ தெரியாது என்றார்

நீங்கள் கவலைப்படவேண்டாம்,எள்ளுருண்டை செய்ய உங்களுக்குத் தெரியும்தானே? அது போதும்.நான் தினம் இரண்டு எள்ளுருண்டை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வேன்

பதிவருக்கு குழப்பம் வந்தாலும் விடவில்லை.உயிர் வாழ்வது எங்கே! என் உயிரை எடுப்பாய்! அதில் இரண்டு வைட்டமின் தான் இருக்கிறது,வைட்டமின் சி இல்லை.அது நல்லதுதான்.ஆனால் மற்ற உணவும் வேண்டும்.நிரூபன் பதிவை படித்தீர்களா? சலிப்புடன் கேட்டார்.

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று எனக்குத் தெரியும். நீங்கள் நிரூபன் இல்லாமல் வேறு யாராம்?

என்னது? நான் நிரூபன் இல்லை! நீ நிரூபனை காதலிக்கிறாயா?

ஆமாம்,நான் அவருக்குத்தான் கடிதம் எழுதினேன்,என்றார் அதிர்ச்சியுடன்.

பதிவர் மயக்கம்போட்டு பெண்ணின் காலடியில் விழுந்துவிட்டார்.நீங்கள் காலில் விழுந்தாலும் நான் நிரூபனைத்தான் காதலிப்பேன்இவ்வார்த்தை பதிவரின் காதில் விழவில்லை.மயங்கிக் கிடந்தார்.புறா ஓரமாக நின்று சிரித்துக்கொண்ட்து.காமெடி செய்யலாம் என்று திட்டமிட்டு வேறு பதிவரிடம் கடித்த்தை கொடுத்துவிட்ட்து..

டிஸ்கி: பதிவர்கள்,அதிலும் கல்யாணமாகாதவர்கள் பிளாக்கில் போட்டோ போட வேண்டும்.






-

Tuesday, September 13, 2011

அய்யோ! அய்யோ! பதிவத் திருடிட்டாங்களே!-லகலக பேட்டி.

அய்யோ,அய்யோன்னு ஏன்யா சத்தம் போடறீங்க? யாரு உங்க பதிவ திருடினது? சுத்த நான்சென்ஸா போச்சு! திருட்டுன்னா என்ன்ன்னு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?இப்படித்தான் ஒரு பதிவர் ஆக்ரோஷமாக வந்தார்.அவரை இழுத்துப்போய் அவருடைய பிளாக்கை ஓபன் செய்து காட்டினேன்.அவர் எழுதியது அங்கேயே இருந்த்து.சாரி சொல்லி சர்பத் வாங்கிக் கொடுத்துவிட்டு போனார்,நாங்களும் மனுஷங்கதான்!’’

                             ஆதங்கத்துடனும்,வருத்த்துடனும் மனம் திறந்து பேசுகிறார் வலைத்தள அதிபர் வக்கில்லாதவன்(புனை பெயராம்).அவர் மீதான தவறான குற்றச்சாட்டுகள் அம்புகளாய் பாய்ந்து அவரது மனத்தை புண்படுத்தியிருப்பதை உணர முடிந்த்து.பல பதிவர்கள் தங்களது பதிவுகளை திருடி தளத்தில் போட்டுக்கொள்கிறார் என்று குற்றம் சாட்டி பதிவு எழுதியது அவரை வேதனைக்குள்ளாக்கியிருந்த்து.அவருடன் பேசியதிலிருந்து சென்சார் செய்யப்படாமல் அனைத்து பகுதிகளும்:

நீங்கள் சொந்தமாக எழுதியதுண்டா?

                                அது பெரும் பிரச்சினையில் முடிந்து விட்ட்து.மதுப்பழக்கம் தவறு என்று எழுதினேன்.அடுத்த நாள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய நிலை.தமிழ்நாட்டில் மொத்தமாக குடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.அரசாங்கத்தை நினைத்து ஒரு நிமிடம் பதறிப்போய்விட்டேன்.உடனே மது குடிப்பது முடி,நகம் வளர உதவி செய்யும்,கொஞ்சமாக குடித்தால் தப்பில்லை என்று இன்னொரு கட்டுரை எழுதியதும் பிரச்சினை தீர்ந்த்து.

அப்போதிருந்து காபி பேஸ்ட் தானா?

                               ஆமாம்,வலைப்பதிவுகளில் சில நேரம் நல்ல கட்டுரைகள் கிடைக்கிறது.பத்திரிகைகளிலும் எடுப்பேன்.கல் தோன்றி முன் தோன்றா சாரி! கம்பியூட்டரில் காபி,பேஸ்ட் என்று எதற்காக இருக்கிறது? வடிவமத்தபோதே கொண்டுவந்து விட்டார்கள்.ரைட் கிளிக் செய்தால் copy என்று வருகிறது.அதே போல சுலபமாக பேஸ்ட் செய்யலாம்.தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால்தான் தமிழ் வளரும்.

நீங்கள் சந்த்தித்த பிரச்சினைகள் என்ன?

                                   காபி பேஸ்ட் செய்வதே பிரச்சினைதான்.சொந்தமாக எழுதுபவர்கள் கொஞ்ச நேரத்தில் எழுதிவிடுகிறார்கள்.நாங்கள் வாசகர்களுக்கு பிடித்த்தை தர பலதையும் படிக்க வேண்டும்.தவிர காபி செய்யும்போது எழுதியவர் பெயரும்,பிளாக் முகவரியும் விடுபட்டுப் போகிறது.தவறுவது யாருக்கும் சகஜம்.உடனே திருட்டு என்று சொல்லிவிடுகிறார்கள்.

மறக்க முடியாத சம்பவம் ?

                                  ஒரு முறை பிரபல பத்திரிகையிலிருந்து காபி செய்யும்போது விளம்பரத்தை காபி செய்து போட்டுவிட்டேன்.தவறாக நிகழ்ந்த விஷயம்.ஆனால் கம்பெனியிலிருந்து வந்து பாராட்டிவிட்டு இரண்டு துணி சோப்பு கொடுத்து விட்டுப் போனார்கள்.

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

                               எப்படியாவது வெளிநாட்டிலிருக்கும் கறுப்பு பணத்தை காபி செய்து இந்தியாவில் பேஸ்ட் செய்யவேண்டும்.முடியுமா? என்று கேட்கிறார்கள்.அனைத்து காபி பேஸ்ட்டர்களும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் முடியாதா? ஒரு வலைப்பதிவில் ரூபாய் நோட்டு படம் போட்டிருந்தார்கள்.காபி செய்து பேஸ்ட் செய்து பார்த்தேன் ஈஸியாக இருக்கிறது.

-

Saturday, March 26, 2011

என் வளர்ச்சி பொறுக்காமல் கிளப்பிவிடுகிறார்கள்-பிரபல பதிவர் அதிரடி

 
                           அவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.ஆம்.அவரேதான்.அவருடன் பேட்டியிலிருந்து சில பகுதிகள்.

 தாங்கள் எழுத்தாளரான பின்னணி என்ன?

                               அது சுவையானது.என்னுடைய சிறு வயதில் என் தாயார் எழுந்திரு என்றது என் காதில் எழுத்து என்று விழுந்துவிட்ட்து.அப்போதிருந்து அதை பிடித்துக் கொண்டு விட்டேன்.ஆரம்ப்ப் பள்ளியில் சேர்த்தார்கள்.எழுத சொன்னால் நான் ‘எஎன்று எழுதினேன்.அப்போதிருந்து எங்கேயாவது எழுதிக் கொண்டுதான் இருப்பேன்.எந்த பஸ் ஸ்டாண்ட்,தியேட்டர் பாத்ரூமிலும் எழுதாமல் வந்த்து இல்லை.


வலையுலகிற்கு எப்படி வந்தீர்கள்?
                                மூக்குப்பொடி வாங்கிய பேப்பரை படித்த போது கூகுள் இலவசமாக பிளாக் தருவது தெரியவந்த்து.இலவசமாக தரும் எதையும் நான் விட்ட்தில்லை.என் வாழ்வில் திருப்பம் நிகழ்ந்த்து.அப்புறம் கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டேன்.இதோ இப்போது பிரபல பதிவர்.

பிரபல பதிவர் என்பதற்கு என்னதான் இலக்கணம்?
                                இங்கே பொறாமை பிடித்தவர்கள்தான் அதிகம்.அதனால் பிரபல பதிவர் என்று நானே சொல்லிக் கொண்டேன்.மற்றவர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தால் விடிந்து விடும்.தவிர அதை ஏன் இன்னொருவர் சொல்லவேண்டும்? அவர்களுக்கு கஷ்ட்த்தை தர நான் விரும்பவில்லை.


உங்களுக்கும் ஓட்டுபோட குழு இருப்பதாக சொல்லப்படுகிறதே?

                               ஒருவர் எத்தனை பிளாக் வேண்டுமானாலும் ஆரம்பித்துக் கொள்ள முடியும்.எனக்கு நான்கு இருக்கிறது.நண்பர்களும் இருக்கிறார்கள்.எங்கே குழு இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? மகளிர் குழுக்கள் இருக்கிறது.பாராளுமன்றத்தில் குழுக்கள் இருக்கின்றன.ஆண்கள் சுய உதவிக் குழுக்கள்கூட இருக்கிறது.

ஒரு நாளைக்கு எத்தனை பேர் படிக்கிறார்கள்.? நீங்கள் STAT வெளியில் காட்டவில்லையே?
                               ஏற்கனவே வயிறு எரிந்து சாகிறார்கள்.அதை பார்த்தால் அவ்வளவுதான்.பதிவர்கள் எல்லாம் வெந்து போய்விடுவார்கள்.எத்தனை பதிவர்கள்,எத்தனை குடும்பங்கள் யோசித்துப் பாருங்கள்.அந்த பாவம் எனக்கு வேண்டாம். அப்புறம் நான் மட்டும்தான் பதிவிட வேண்டும் திரட்டிகள் என் ஒருவனுடைய பதிவை மட்டும் காட்டிக் கொண்டிருக்க முடியாது.

பதிவுலகம் வந்த பிறகு உங்கள் மனைவி பிரிந்து விட்ட்தாக கூறப்படுகிறதே?

                                   கணவன் மனைவி ஊடல் சங்க காலத்தில் இருந்து வரும் ஒன்று.கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.ஒரு வருடம்கூட ஆகவில்லை.நேற்றுகூட நான் பேசினேன்.அது கிராம்ம் என்பதால் டவர் வீக்காக இருக்கும்.காது கேட்ட்தோ,இல்லையோ அவர் செல்ஃபோனை எடுக்கவில்லை.நேரில் போகலாம் என்றால் பதிவுலகை விட்டு செல்ல முடியவில்லை.லட்சக்கணக்கான வாசகர்களை ஏமாற்றியதுபோல ஆகிவிடும்.அவர் நல்லவர்.கல்யாணமாகி ஆறு மாதங்கள் டி.வி.பார்த்துக்கொண்டு சந்தோஷமாகவே இருந்தார்.நான் எழுதிக் கொண்டிருக்கும்போது தொல்லை தரமாட்டார்.என்னுடைய வளர்ச்சி பொறுக்க முடியாமல் ஏதேதோ கிளப்பிவிடுகிறார்கள்.


உங்கள் எழுத்து புகழ் பெற்றதற்கு என்ன காரணம்?

                             நான் NHM WRITER-ல் எழுதுகிறேன்.சுலபமாக இருக்கிறது.ஆங்கிலத்தில் ka என்று டைப் செய்தால் ‘கஎன்று வருகிறது.

-

Thursday, March 24, 2011

பதிவர் வெளியிட்ட புத்தகத்தால் பரபரப்பு;தமிழ் எழுத்தாளர்கள் அதிர்ச்சி!


சென்னை,மார்ச் 33
                                தமிழ் பதிவர் ஒருவர் வெளியிட்ட புத்தகத்தால் தமிழ் எழுத்தாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இது பற்றி கூறப்படுவதாவது,

                              தமிழில் 1800 பக்கம் கொண்ட நாவலை எழுதி புகழ்பெற்றவர் எழுத்தாளர் மலைநாட்டான்.அதை அவரே பதிப்பித்து தமிழ் இலக்கிய உலகை வியப்படைய வைத்த்து வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.சம்பவத்தன்று காலைகாக்காஎன்ற இலக்கிய பத்திரிகையை புரட்டியபோது தன்னுடைய பாம்பின் அப்பா அம்மாநாவலுக்கு 20 பக்கத்துக்கு மதிப்புரை எழுதியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

                               மதிப்புரையை முழுக்க படிக்கவேண்டுமென்பதற்காக  காலை டிஃபன் வேண்டாம் என்று சொல்லிவிட்ட்தாக அவரது மனைவி தெரிவித்தார்.சந்தோஷத்துடன் படித்துக் கொண்டிருந்தவர் இறுதியில் நூலாசிரியர் பெயரும்,பதிப்பகத்தின் பெயரும் மாறியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.


                                அதிர்ச்சியில் மலைநாட்டான் போட்ட கூப்பாடு தமிழ் எழுத்தாளர்களின் காதுகளில் ஒலித்த்து.சப்தம் கேட்ட அரை மணி நேரத்தில் அனைத்து எழுத்தாளர்களும் மலைநாட்டான் வீட்டில் கூடிவிட்டார்கள். தமிழ் எழுத்தாளர்கள் ஒன்று திரண்ட்து ஒரு வரலாற்றுநிகழ்வுஎன்கிறார்கள் இலக்கிய விமர்சகர்கள்.செய்தி கேட்ட நிருபர்களும்,பானிபூரி,வறுகடலை உள்ளிட்ட தள்ளூவண்டி கடைகளும் விரைந்தன.

                                 மலைநாட்டான் நாவலை தன் பெயரில் வெளியிட்ட்து தமிழ்வலைப்பதிவர் என்பது அவருக்கு ஆகாத பதிவர் ஒருவர் மூலம் தெரிய வந்துள்ளது.தமிழ் எழுத்தாளர் ஒருவர் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது “இது கொடூர திருட்டு.மலைநாட்டான் இந்த நாவலுக்காக பாம்புகளுடன் படுத்துறங்கியிருக்கிறார்.தேள்களுடன் வாக்கிங் போனார்.முப்பதாண்டு காலம் உழைத்து எழுதிய 1800 பக்க நாவலை சுலபமாக திருடியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதுஎன்றார்.


                                  சட்ட ஆலோசனைக்காக வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு ஏழாவது ரவுண்டு டிஃபன்,காஃபி உள்ளே போயும் ஆலோசனை எதுவும் தரவில்லை.தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.இதற்கிடையே பதிவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் சிங்கப்பூரில் திரைப்பட ஆலோசனையில் இருப்பது தெரிய வந்துள்ளது.(அவர்-திருடி- பதிப்பித்த நாவலை படித்த இயக்குனர் ஒருவர் வசனம் எழுத ஒப்ப்ந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.) அவரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சற்று முன் வந்த செய்தி:

                              சிங்கப்பூரில் டி.வி.யை பார்த்து செய்தி தெரிந்து கொண்ட அந்த பதிவர் எழுத்தாளர் மலைநாட்டானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.புத்தகத்தை பார்க்காமல் விமர்சனம் மட்டும் படித்து விட்டு தன்னைப் பற்றி தவறாக நினைத்த்தற்காக வருத்தப்பட்டுள்ளார்.


                               தான் மலைநாட்டானின் தீவிர வாசகன் என்றும்,அவ்வளவு மட்டமானவன் இல்லை என்றும்,புத்த்கத்தை சரியாக படிக்குமாறு கேட்டுக்கொண்டார்.நாவலின் இறுதியில் நன்றி-மலைநாட்டான் என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்காமல் ஆத்திரப்பட்டுவிட்டீர்கள் என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

                               இதைக் கேள்வியுற்ற அனைத்து எழுத்தாளர்களும் “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுஎன்பது சரியாகப் போய்விட்ட்து என்று நினைத்துக்கொண்டே கலைந்து சென்றார்கள்.அநியாயமாக ஒரு தமிழ் பதிவர் பற்றி தவறான செய்தி பரவியது வருத்தம் தரும் ஒன்று.
-

Thursday, March 17, 2011

நகைச்சுவை பதிவுகள் நாட்டுக்குத்தேவையா?

                              சிட்டுக்குருவி லேகியம்-சில குறிப்புகள் பதிவின் தொடர்ச்சியாகவும் கொள்ளலாம்.வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கும் நேரங்களே உலகில் உண்மையாக வாழ்ந்த காலங்கள் என்றேன்.மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் நகைச்சுவை இல்லாமல் எப்படி?

                               ஆனந்த விகடன் தமிழர்களோடு ஒன்றிப்போனதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது அதன் நகைச்சுவை உணர்வுதான்.விகடனின் குறும்பும்,களிப்புமே என்னை பள்ளிப் பருவத்திலிருந்து வாசகனாக தொடர வைத்திருக்கிறது

                              நகைச்சுவை உணர்வுள்ள மனிதர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பதை பார்க்க முடியும்.சவால்களை எளிதில் வெற்றியாக மாற்றுவதில் வல்லவர்கள் அவர்கள்.சிரிப்பு எல்லாவிதமான அழுக்குகளையும் போக்கிவிடுகிறது.நெருக்கத்தை அதிகமாக்கி விடுகிறது.

                                சிரிப்பைத் துணையாக கொண்டவர்களுக்கு மனநோய்கள் நெருங்காது.இறுக்கத்தைப் போக்கி விடுவதால் மன அழுத்தம் போன்ற நலக்குறைவுகள் ஏற்படுவதில்லை.மற்ற நோய்களும்தான்.ஆரோக்யத்தின் திறவுகோல் அது.உடனிருப்பவர்கள் உடல்நலனையும் கூட்டும் மந்திரம்.

                              நகைச்சுவை உணர்வுள்ள மனிதர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பதை பார்க்க முடியும்.சவால்களை எளிதில் வெற்றியாக மாற்றுவதில் வல்லவர்கள் அவர்கள்.சிரிப்பு எல்லாவிதமான அழுக்குகளையும் போக்கிவிடுகிறது.நெருக்கத்தை அதிகமாக்கி விடுகிறது.

                                சிரிப்பைத் துணையாக கொண்டவர்களுக்கு மனநோய்கள் நெருங்காது.இறுக்கத்தைப் போக்கி விடுவதால் மன அழுத்தம் போன்ற நலக்குறைவுகள் ஏற்படுவதில்லை.மற்ற நோய்களும்தான்.ஆரோக்யத்தின் திறவுகோல் அது.உடனிருப்பவர்கள் உடல்நலனையும் கூட்டும் மந்திரம்.
 
                                  தவறு செய்து மாட்டிக்கொண்டவர்கள் சிரித்து வைப்பதை பார்த்திருக்கிறேன்.அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள்(அரசியல்வாதிங்கள சொல்ல்லப்பா!) அல்லது குறைந்த தண்டனையே பெறுகிறார்கள்.சிரிப்பின் சாகசம் அது.
                                  ஒன்றாக சிரிக்கத் தெரிந்த குடும்பங்களில் பிரச்சினைகள் இருப்பதில்லை.அந்த குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை.ஒரு குடும்பத்தில் தனி மனிதன் சந்தோஷமாக இருந்தால் அக்குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது.அது தொற்றிக் கொள்ளக் கூடியது என்பதால்! குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நாடும் வளமாக இருக்கும்.எனவே நகைச்சுவை பதிவுகள் நாட்டுக்குத்தேவைதான்.

                                 சிரிக்க வைப்பவர்கள் புண்ணியவான்கள்.உலகம் அவர்களுடயது.நகைச்சுவை பதிவர்கள் வாழ்க!

     இப்போதுதான் வீடு வந்தேன்.இந்தப்பதிவு வெகுநாட்களாக டிராஃப்டில் இருந்த்து.வழக்கமாக கமெண்டும்,ஓட்டும் போடும் ஓரிருவருக்குக்கூட அதைச் செய்ய முடியவில்லை.மன்னிக்கவும்.போகட்டும் நகைச்சுவைக்கு ஒரு சீரியஸ்பதிவா? என்று கேட்பவர்களுக்கு எப்போதோ படித்து நினைவில் இருக்கும் ஒன்று.

                            மகனுக்கு எந்த வேலை ஏற்றதாக இருக்கும் என்று கண்டறிய மனோத்த்துவ மருத்துவரிடம் அழைத்துப்போனார் ஒரு அம்மா.டாக்டர் நர்ஸை அழைத்து,ஒரு சுத்தி,ஒரு திருப்புளி,ஒரு குறடு மூன்றையும் மேசை மீது வை! பையன் சுத்தியலை எடுத்தால் தச்சன் ஆவான்.குறடை எடுத்தால் மெக்கானிக் ஆவான்,திருப்புளியை எடுத்தால் எலக்ட்ரீசியன் ஆவான்.’’ பையன் மூன்றையும் விட்டுவிட்டு நர்ஸை பிடித்து இழுத்தான்.




            
                         

     

                               

 
                              
-