Sunday, January 9, 2011

IndiBlogger சந்திப்பில் தமிழ் பிளாக்கர்ஸ் ராக்!பெங்களூருவில் நடைபெறும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு IndiBlogger-ல் இருந்து மெயில் வந்திருந்தது.ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் எனக்கு இரண்டு மணி நேர பயணம்தான் என்பதாலும் கலந்து கொள்ள முடிவுசெய்து பதிவு செய்தேன்.ஈரோட்டில் நடைபெற்ற சந்திப்பு போலல்ல இது.ஏழை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் அக்ஷய பாத்ரா என்னும் தொண்டு நிறுவனத்திற்கு உதவுவதற்கான சந்திப்பு.ஏற்பாடு அனைத்தும் பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள ஹரே கிருஷ்ணா கோயிலுடன் இணைந்த --அந்நிறுவனமே.இது ஐந்தாவது சந்திப்பு என்றார்கள்.

கோவிலின் உள்ளே உள்ள அரங்கில்தான் சந்திப்பு.வெளியிலிருந்து பார்க்கும்போதே தமிழர்களின் உழைப்பில் உருவான பிரமாண்டம் என்பது நினைவுக்கு வந்தது.பிரபலமான அந்த ஆலயத்தின் கட்டுமான பணியாளர்கள் அனைவரும் தமிழர்களே! பல ஆண்டுகள் எங்கள் ஊரிலும்,சுற்றியுள்ள ஊரைச்சார்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்ததுஅந்தக்கோயில்.வாயிலில் டி-சர்ட் அடையாளத்தோடு நின்றிருந்தவர் உதவியுடன் அரங்கத்தை அடைந்தேன்.இளம்பெண்கள் இரண்டுபேர் என்னுடைய இ-மெயில் முகவரியை அங்கிருந்த கணினியில் டைப் செய்யுங்கள் என்றார்கள்.டைப் செய்தவுடன் ஹலோ,சண்முகவேல் என்றது திரை.நான் தான் என்று உறுதிசெய்து மதிய உணவு கூப்பன்,பழச்சாறுடன் உள்ளே அனுப்பினார்கள்.

அரங்கினுள்ளே மூன்றாவது வரிசையில் இரண்டுபேர் மட்டும் அமர்ந்த்திருந்தார்கள்.ஒரு இருக்கையை விட்டு தள்ளி அமர்ந்தேன்."எங்கிருந்து வருகிறீர்கள்?''.என்று கேட்டேன்.என்னுடைய அதிர்ஷ்டம் அவர் சென்னை தமிழர்.எங்கு சென்றாலும் நமக்கு ஆள் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.பிரேம் என்பது அவருடைய பெயர்.சாப்ட்வேர் எஞ்சினியர்.தமிழில் ஒன்றும் ஆங்கிலத்தில் ஒன்றுமாக இரண்டு வலைப்பதிவுகள்.அதிகம் எழுதுவதில்லைஎன்றார்.வால்பையனின் தீவிர வாசகர்.மற்ற பிரபலமானவர்கள் யாரையும் அதிகம் தெரிந்திருக்கவில்லை.

அறுபது வலைப்பதிவர்கள் மட்டுமே அறிமுகம் செய்துகொள்ள அனுமதித்து அவர்களே தேர்வு செய்திருந்தார்கள்.எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.என்னைப்பற்றி கூறும்போது வலைப்பதிவு முகவரி ,பெயர்,முகவரி கணினி திரையில் தெரிந்தது.அறிமுகம் செய்து கொண்டு Tamil Blogger thanks to IndiBlogger என்று சொல்லிவிட்டு அமர்ந்தேன்.வந்திருந்தவர்களில் நான் மட்டுமே தமிழில் மட்டும் எழுதுபவன்.கன்னடத்தில் ஒருவர்.இந்தி உள்பட வேறு இந்திய மொழிகளில் பதிவிடுபவர்கள் யாருமில்லை.தமிழின் பெயர்சொல்ல நான்இருந்தேன்.

கலந்துகொண்ட வலைப்பதிவர்களில் பெரும்பாலானோர்பெங்களூரு.கொல்கத்தா,மும்பையிலிருந்தும்வந்திருந்தார்கள்.தமிழர்கள் சென்னை,கோவை,ராஜபாளையம் என்று வந்திருந்தாலும்ஆங்கிலத்தில் எழுதும் பதிவர்களே! பெங்களூருவில் அண்ணன்,தம்பி என இரண்டு தமிழர்கள் இருந்தார்கள்.ஒருவர் தமிழிலும் ஒரு வலைப்பதிவு பதிவு செய்திருக்கிறேன் என்றார்.சந்திப்பின் நோக்கம் பற்றி விளககிவிட்டு மதிய உணவுக்கு அனுப்பினார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு சார்ட்(chart) கொடுத்தார்கள்.முதுகுக்கு பின்னால் கட்டிக்கொண்டு மற்றவர்களிடம் கருத்துரை (comment)வாங்கவேண்டும்.இங்கேயுமா? எனக்கு வழக்கமாக ஒரு கமென்ட் வந்தாலே அதிசயம்.அங்கே பதினெட்டு வந்தது.அதில் முக்கியமானவை,

தமிழ் ப்ளாக்கர்ஸ் ராக்

மெல்லத்தமிழ் இனி வாழும்

தமிழனா? கொக்கா?

நம்ம ஆட்கள் வந்திருந்ததே ஆறு பேர்தான்.அவர்கள் கருத்துரை இது.எழுபதுக்குமேல் நான்குபேர் கமென்ட் வாங்கியிருந்தார்கள் .அவ்ரர்களுக்கு பிரேம் போட்ட குழந்தைகள் படம் படம் பரிசளித்தார்கள்.குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டம் பற்றி விவாதம்,கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது.பிறகுநான்கு குழுவாக பிரித்து ஆளுக்கொருதலைப்பில் விவாதம்
வைத்தார்கள்.எனக்கு நேரமாவதால் விடைபெற்றுக் கொண்டேன்.


அக்ஷய பாத்ரா திட்டத்தின் தலைவர் பேசும்போது,"சந்திப்பிற்கு பிறகு வலைப்பதிவர்கள் அன்னதான திட்டம் பற்றி பதிவிடுவதன் மூலமாக தாங்கள் பெரிய அளவு நன்மையடைந்து வருவதாக" குறிப்பிட்டார்.வலைப்பதிவர்களின் ஆற்றல் சாதனைகளை நிகழ்த்தும்.நன்மை பயக்கும் மாற்றங்களை கொண்டுவரும்என்ற என்னுடைய எண்ணம் உறுதியான ஒரு சந்திப்பாக அமைந்தது.
-

8 comments:

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

நானும் வரலாம்னு தான் ப்ளான் பண்ணி பதிவும் பண்ணிட்டன்.

விசிட்டிங் கார்ட் சரியா வரலைனு நான் வரலை. (ஹி ஹி) வாழ்த்துக்கள்

shanmugavel said...

உங்களை எதிர்பார்த்தேன்.மெயில் அனுப்பியிருந்தேன்.நீங்கள் இல்லாத குறையை பிரேம் தீர்த்து வைத்துவிட்டார்..நன்றி

ஜோதிஜி said...

வாழ்த்துக்கள்

சிநேகிதி said...

cong

shanmugavel said...

நன்றி,ஜொதிஜி.நன்றி சிநேகிதி

THOPPITHOPPI said...

//ஈரோட்டில் நடைபெற்ற சந்திப்பு போலல்ல இது.ஏழை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் அக்ஷய பாத்ரா என்னும் தொண்டு நிறுவனத்திற்கு உதவுவதற்கான சந்திப்பு//

நச்//ஒவ்வொருவருக்கும் ஒரு சார்ட்(chart) கொடுத்தார்கள்.முதுகுக்கு பின்னால் கட்டிக்கொண்டு மற்றவர்களிடம் கருத்துரை (comment)வாங்கவேண்டும்.இங்கேயுமா?//


ஹஹாஹா

shanmugavel said...

அதிக கமெண்டுக்கு பரிசு தருவார்கள் என்று தெரியாது.தெரிந்திருந்தால் வாங்கியிருப்பேன்.நமது தமிழர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டிருப்பதில் நேரம் போய் விட்டது.பரிசை விட சந்தோசம் அது.நன்றி THOPPITHOPPI

shanmugavel said...

ஈரோடு சந்திப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை.அது நமக்கானது.நம்மை வலுப்படுத்திக்கொண்டால்தான் மற்றவர்களுக்கு உதவ முடியும்.