Friday, March 11, 2011

குடித்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் குத்தாட்டம் போட்ட பெண்.




                             சேலம் பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் ஒன்று.ஒரு பெண் மித மிஞ்சிய போதையில் கலாட்டா செய்து கொண்டு,வழியில் எதிர்படும் பேருந்துகளை நிறுத்திக் கொண்டு ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்.நடுநடுவே குத்தாட்டம் வேறு.

                             நாளிதழில் படித்தவுடன் நண்பனின் கணிப்பு அவர் பாலியல் தொழிலாளியாக இருக்க்க் கூடும் என்பது.பெரும்பாலான பாலியல் தொழிலாளிகள் குடிப்பவர்கள் என்பதும்,புகையிலை பொருட்களை பயன்படுத்துகிறவர்கள் என்றும் தொடர்புடைய தொண்டு நிறுவன பணியாளர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

                             குற்ற உணர்வு என்பது தவறு செய்து விட்டோம் அல்லது செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு.சமூகம் பாலியல் தொழிலையும்,அவர்களிடையே குற்ற உணர்வையும் சேர்த்தே வளர்த்து வந்திருக்கிறது.குற்ற உணர்வை தாங்கிக் கொள்ளவே குடிக்கிறார்கள் என்பது நிஜம்.

                             பேருந்து நிலையங்களில் போதையில் கமெண்ட் அடித்து ஆட்களை தேடிக்கொண்டிருக்கும் பெண்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் மீது இரக்கமும் அனுதாபமுமே ஏற்பட்டிருக்கிறது.தேசம் சமூக மேம்பாட்டில் தோல்வியடைந்த்தன் அடையாளம் அவர்கள்.

                              சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு மறுவாழ்வு தரும் வகையில் ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது.சட்ட பாதுகாப்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.பாலியல் தொழிலை சமூகத்தில் இருந்து அகற்றிவிட முடியாது என்று பலரும் வாதிடுகிறார்கள்.

                               பல தொண்டு நிறுவன்ங்கள் பாலியல் தொழிலாளிகளுக்கு பணியாற்றி வருகின்றன.அவர்களிடம் பட்டியல் இருக்கிறது.இதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு பணியை ஏற்படுத்த வேண்டும்.வெற்றிபெறுமா என்பதில் வாதப்பிரதிவாதங்கள் இருக்கின்றன.

                              மனைவியை இழந்தவர்கள்,வீட்டை விட்டு பிரிந்திருப்பவர்கள்,திருமணமாகாமல் தனித்திருப்பவர்கள்,ஆர்வம் கொண்டுள்ள இளம் வயதினர்,பணி காரணமாக நெடுந்தூரம் பயணம் செய்பவர்கள் ஆகியோர் இவர்களது வாடிக்கையாளர்கள்.

                              தொடர்ந்து வாடிக்கையாளர்கள் குடிக்க வற்புறுத்தும்போது அல்லது எளிதில் கிடைப்பதால் சில நேரங்களில் அதிகம் குடிப்பது தவிர்க்க முடியாமல் போகிறது.போதையில் தாறுமாறாக நடந்து கொள்வதும்,பொது மக்களுக்கு இடையூறு நேர்வதுமாக ஆகி விடுகிறது.
-

10 comments:

சக்தி கல்வி மையம் said...

ஆகா.. எப்படியெல்லாம் இருக்காங்க பாருங்க...

மதுரை சரவணன் said...

karuththu sariyanathe...

shanmugavel said...

நீங்களே பாருங்க கருன்,நன்றி

Anonymous said...

மிகவும் சரியான பார்வையில் ஒரு பதிவு ... ஆதரிக்கின்றேன் ...

shanmugavel said...

நன்றி,சரவணன்

shanmugavel said...

இக்பால்செல்வன்,தங்களுக்கு நன்றி

ரஹீம் கஸ்ஸாலி said...

உங்களின் கண்ணோட்டம் சூப்பர்

shanmugavel said...

மிக்க நன்றி ரஹீம்

cheena (சீனா) said...

பொதுவான கருத்து இதுதான்

shanmugavel said...

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா.