பணி துவங்கும் நேரங்கள், பள்ளி கல்லூரி துவங்கும் காலை நேரம்,அதேபோல மாலைநேரங்களில் பேருந்துகள் நிறைந்து வழிகின்றன.”பீக் ஹவர்”என்று கூறப்படும் இந்த நேரங்களில் பிக்பாக்கெட் போன்ற சமூகவிரோத செயல்கள் ஒருபுறம் என்றால் பெண்களுக்கு நேரும் சங்கடங்கள் சகிக்க முடியாத ஒன்று.
சில ஆண்டுகளுக்கு முன்பு தனித்தனியாக பிரித்துப்பார்த்தார்கள்.எடுபடவில்லை.அவசரத்தில் முண்டியடித்து ஏறி உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.சென்னை பேருந்துகளில் மகளிர் அமருமிட்த்தில் இருந்தாலும் எழுந்து இடம் விட்டுவிடுகிறார்கள்.தமிழகத்தின் மற்ற இடங்களில் அப்படி பார்க்க முடிவதில்லை.
பேருந்துகளில் பெண்களை உரசி சுகம் காண்பதும் ஒரு பாலியல் திருப்தி பெறும்செயலே! இதில் நாட்டமுள்ளவர்கள் அதிக கூட்டமுள்ள பஸ்களையே தேர்ந்தெடுப்பார்கள்.இவர்கள் ஏறினால் இடி வாங்காமல் பெண்கள் இறங்கிவிட முடியாது.இவர்களில் இரண்டுவகை உண்டு.
இரண்டில் ஒருவகை எதிர்பாலினர் மீது ஆர்வம் கொண்டவர்கள்.பெரும்பான்மையோர் இவர்கள்தான்.பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நபர்கள்.இன்னொரு வகை நீங்கள் அறியாத ஆச்சர்யமான விஷயம்.ஆம்.அவர்கள் ஆண்மீது மோகம் கொண்டவர்கள்.அரவாணி ஆவதற்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள்.
ஆண்மீது மோகம் கொண்டவர்கள் ஏன் பெண்களை இடிக்க வேண்டும்? அவர்கள் பெண்ணாக மாற விரும்புவதால்,பெண்ணிடம் நெருக்கமாக பழக விரும்புவதால்,தன்னையும் பெண் என்று கருதிக்கொள்வதால் பெண்ணை நெருங்கி நிற்பார்கள்.ஆளைப்பார்த்தால் ஆண்.உள்ளுக்குள் பெண்.பெண்களை தொட்டுதொட்டு பேசுவார்கள்.
இவர்களில் சிலரை சுலபமாக அடையாளம் காணமுடியாது.இம்மாதிரி இருப்பவர்களை அவர்களிடம் உள்ள பெண் தன்மைக்கேற்றவாறு பிரிக்கிறார்கள்.பத்து,இருபது சதவீதம் பெண் தன்மை உள்ளவர்களை உற்று கவனித்தால்தான் தெரியும்.முழுமையாக ஆண்களைபோலவே இருப்பார்கள்.
எதிர்பாலினரை உரசி சுகம் காணும் செயல் உலகம் முழுக்க பரவலாக காணப்படும் ஒன்று.பெண்கள் சிறிது எச்சரிக்கையாக இருந்தால் தவிர்த்துக் கொள்ளலாம்.காலை,மாலை நேரங்களில் மகளிருக்கான பேருந்துகளை அதிகம் இயக்கலாம்.வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பேருந்துகளின் எண்ணிக்கையும் கூட்ட வேண்டும்.
உரசுவதன் மூலம் சுகம் காண்பதும் பழகிக் கொள்ளும் ஒன்றுதான்.சிலர் அவற்றுக்கு அடிமையாகி விடுவதும் உண்டு.இன்றைய அவசர வாழ்வில் நெருங்கி வழியும் கூட்டம் அவர்களை வளர்த்துக் கொண்டிருக்கிறது.
8 comments:
உண்மைதான், நன்றாக அலசி உள்ளீர்கள்...
@இரவு வானம் said...
உண்மைதான், நன்றாக அலசி உள்ளீர்கள்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
பேரூந்தில் உரசுவோரில் இரண்டு வகை மனிதர்கள் என்பதனை இன்று தான் அறிந்து கொண்டேன் சகோதரம். புதிய தகவலைத் தந்துள்ளீர்கள். நன்றிகள். கிறவுட் பஸ்ஸினை சாதகமாக்கி தங்களது ஆண்மையினை நிரூபிக்க முனையும் நபர்களும், இதற்கென்றே அல்லது இவ்வாறான சேட்டைகளுக்கென்றே அலையும் நபர்களும் கண்டிக்கத்தக்கவர்களே!
@நிரூபன் said...
பேரூந்தில் உரசுவோரில் இரண்டு வகை மனிதர்கள் என்பதனை இன்று தான் அறிந்து கொண்டேன் சகோதரம். புதிய தகவலைத் தந்துள்ளீர்கள். நன்றிகள். கிறவுட் பஸ்ஸினை சாதகமாக்கி தங்களது ஆண்மையினை நிரூபிக்க முனையும் நபர்களும், இதற்கென்றே அல்லது இவ்வாறான சேட்டைகளுக்கென்றே அலையும் நபர்களும் கண்டிக்கத்தக்கவர்களே!
ஆம்,நிரூபன் நன்றி
உரசுபவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு நோக்கத்தோடுதான் செய்கிறார்கள். அதுவும் பெண்களைக் குறிவைத்து. இதுவே நிஜம்.
நல்ல அலசல். பகிர்வுக்கு நன்றி.
http://anubhudhi.blogspot.com/
@Sankar Gurusamy said...
உரசுபவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு நோக்கத்தோடுதான் செய்கிறார்கள். அதுவும் பெண்களைக் குறிவைத்து. இதுவே நிஜம்.
நல்ல அலசல். பகிர்வுக்கு நன்றி.
தங்கள் கருத்துரைக்கு நன்றி,சங்கர்
ஹீல்ஸ் வைத்த செருப்பை வைத்து அருகில் வந்தால், ஓங்கி ஒரு மிதி மிதித்தால் போதும். எல்லாம் தெளிந்து விடும்.
@சாகம்பரி said...
ஹீல்ஸ் வைத்த செருப்பை வைத்து அருகில் வந்தால், ஓங்கி ஒரு மிதி மிதித்தால் போதும். எல்லாம் தெளிந்து விடும்.
ஆஹா! நன்றி சகோதரி
Post a Comment