Monday, April 11, 2011

உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?-மூன்று

              இது கண்டிக்கத்தக்கது!

              இல்லை,இதுதான் சரியானது!

              சீச்சீ அபச்சாரம்!

              அது கரெக்ட்!

               தண்டனை தரக்கூடிய ஒன்று!

               மேற்கண்ட வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்களா? இன்னும் இதுபோன்று இருக்கின்றன.நம் அருகில்,தெருவில் உள்ள மனிதர்களுக்கு எதிராக,அவர்களது செயல்களுக்கு எதிராக அல்லது ஒரு சமூகத்துக்கு எதிராக இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறோம்.

                 ஒரு எளிய உண்மையை நாம் மறந்து விட்டோம்.நம்மை நீதிபதியாக்கியது யார்? யாருமில்லை! நாம்தான்.நமக்கு நாமே நீதிபதி பட்டம் சூட்டிக் கொண்டு போகிற வருகிறவர்களை எல்லாம் விமர்சனம் செய்து தீர்ப்பு வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

                    மற்றவர்களை குறை சொல்வதால் தன்னை உயர்ந்தவனாக காட்டிக்கொள்ளும் செயலன்றி வேறு நோக்கம் இல்லை.சக மனிதன் மீது அன்பு இருக்குமெனில் உங்களை உறுத்தும் விஷயத்தை எடுத்து சொல்ல்லாம்.இதுகூட உங்கள் பார்வைதானே தவிர உலகத்தின் கருத்து அல்ல! உங்கள் கருத்தை புண்படாதவாறு தெரிவிக்க மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு.

                    சட்ட்த்தின் பார்வையில் சரி,தவறு என்றும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்றும் இருக்கின்றன.சில சட்டங்கள் பற்றி,தண்டனை குறித்து விவாதங்கள் இருக்கின்றன.எதிர்காலத்தில் சில சேர்க்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம்.இவை தனிமனிதன் செய்கிற காரியம் அல்ல.

                   நாம் அறிய வேண்டியது சட்ட்த்திற்குட்படாத பல விஷயங்களுக்கு நீதிபதியாகி தீர்ப்பு சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பதே! சட்டம் விசாரணைக்குப்பிறகுதான் தண்டனை வழங்குகிறது.நாம் உள் விசாரணைகூட செய்வதில்லை.குற்றம் சுமத்துகிறோம்.மனிதனை நேசிக்க இவை தடையாக இருக்கின்றன.

                   தனி மனிதன் சூழல் சார்ந்து இயங்கும் விலங்கு.பயன் தரத்தக்க கல்வி அவனுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.இளம் பருவத்தில் அப்போதைய நண்பர்கள் சார்ந்து சில பழக்கங்கள் உருவாகிவிடுகிறது.வளர்ந்துவந்த சமுதாயம் சார்ந்து மதிப்பீடுகள் அமையப் பெற்றிருக்கிறான்.

                    குற்றம் சுமத்துவதை விடுத்து அவனை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் உங்களால் மனப்பூர்வமாக உதவ முடியும்.
சகமனிதனை புரிந்து கொண்டு நேசித்தால் உங்களை அனைவரும் விரும்பவே செய்வார்கள்.
-

17 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vada

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இது கண்டிக்கத்தக்கது!

இல்லை,இதுதான் சரியானது!

சீச்சீ அபச்சாரம்!

அது கரெக்ட்!

தண்டனை தரக்கூடிய ஒன்று!

மேற்கண்ட வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்களா?

No.... Never

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நாம் அறிய வேண்டியது சட்ட்த்திற்குட்படாத பல விஷயங்களுக்கு நீதிபதியாகி தீர்ப்பு சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பதே! சட்டம் விசாரணைக்குப்பிறகுதான் தண்டனை வழங்குகிறது.நாம் உள் விசாரணைகூட செய்வதில்லை.குற்றம் சுமத்துகிறோம்.மனிதனை நேசிக்க இவை தடையாக இருக்கின்றன.

true true true....

yes really correct....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

thanks anne for sharing a super post

சி.பி.செந்தில்குமார் said...

>>சகமனிதனை புரிந்து கொண்டு நேசித்தால் உங்களை அனைவரும் விரும்பவே செய்வார்கள்.

ம் ம் சரிதான்

MANO நாஞ்சில் மனோ said...

// ஒரு எளிய உண்மையை நாம் மறந்து விட்டோம்.நம்மை நீதிபதியாக்கியது யார்?//

சரியான சாட்டையடி கேள்விதான்....

Unknown said...

//சகமனிதனை புரிந்து கொண்டு நேசித்தால் உங்களை அனைவரும் விரும்பவே செய்வார்கள்//
உண்மை உண்மை!

shanmugavel said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vada

நன்றி ரஜீவா

shanmugavel said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இது கண்டிக்கத்தக்கது!

இல்லை,இதுதான் சரியானது!

சீச்சீ அபச்சாரம்!

அது கரெக்ட்!

தண்டனை தரக்கூடிய ஒன்று!

மேற்கண்ட வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்களா?

No.... Never

நல்லது தம்பி,உனக்கு நல்ல தகுதிகள் இருக்கிறது.

shanmugavel said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நாம் அறிய வேண்டியது சட்ட்த்திற்குட்படாத பல விஷயங்களுக்கு நீதிபதியாகி தீர்ப்பு சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பதே! சட்டம் விசாரணைக்குப்பிறகுதான் தண்டனை வழங்குகிறது.நாம் உள் விசாரணைகூட செய்வதில்லை.குற்றம் சுமத்துகிறோம்.மனிதனை நேசிக்க இவை தடையாக இருக்கின்றன.

true true true....

ஆம் தம்பி,அவன் இன்ன ஜாதியா அப்படித்தான் இருப்பான் என்பார்கள்.

shanmugavel said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

குற்றம் சுமத்துவதை விடுத்து அவனை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் உங்களால் மனப்பூர்வமாக உதவ முடியும்.
சகமனிதனை புரிந்து கொண்டு நேசித்தால் உங்களை அனைவரும் விரும்பவே செய்வார்கள்.

yes really correct....

ஆம்,எடுத்ததுக்கெல்லாம் குறை சொல்பவனை யார் விரும்புவார்கள்?

shanmugavel said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

thanks anne for sharing a super post

மீண்டும் நன்றி தம்பி

shanmugavel said...

@சி.பி.செந்தில்குமார் said...

>>சகமனிதனை புரிந்து கொண்டு நேசித்தால் உங்களை அனைவரும் விரும்பவே செய்வார்கள்.

ம் ம் சரிதான்

ஆம்.நண்பரே புரிந்து கொள்வதில்தான் பிரச்சினை!நன்றி

shanmugavel said...

@MANO நாஞ்சில் மனோ said...

// ஒரு எளிய உண்மையை நாம் மறந்து விட்டோம்.நம்மை நீதிபதியாக்கியது யார்?//

சரியான சாட்டையடி கேள்விதான்....

நன்றி நண்பரே,அப்படிப்பட்டவர்கள் புரிந்துகொண்டால் சரி.

shanmugavel said...

@ஜீ... said...

//சகமனிதனை புரிந்து கொண்டு நேசித்தால் உங்களை அனைவரும் விரும்பவே செய்வார்கள்//
உண்மை உண்மை!

ஆம்,நண்பரே நன்றி

எண்ணங்கள் 13189034291840215795 said...

குற்றம் சுமத்துவதை விடுத்து அவனை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் உங்களால் மனப்பூர்வமாக உதவ முடியும்.//

குழந்தையை வன்புணர்ச்சி செய்து கொலை செய்தவனை என்ன சொல்வீர்கள்..?

அதேபோல பல விஷயங்களின் கெடுதல்களை சொல்லாமலும் கண்டிக்காமலும் இருப்பதுமே மிகப்பெரும் தவறு..

என்னைப்பொறுத்தவரை சமூக துரோகம்..

என்னை எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்பதற்காக மெளனியாக இருப்பதை விட தவறுகள் சொல்லப்படவேண்டும்..

தேவையற்ற குறைகள் தான் சொல்லக்கூடாது தேவையானவை சொல்லப்பட வேண்டும்.. திருத்தப்படவும்..