Sunday, April 17, 2011

இறைவன் அருளிய ஆயுர்வேதம்-சில குறிப்புகள்

                               உலகில் நவீன மருத்துவம் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தாலும் மரபு சார்ந்த மருத்துவ முறைகள் இந்தியாவில் முக்கியத்துவம் இழந்துவிடவில்லை.ஆயுர்வேதம் உலகின் மிகப் பழமையான மருத்துவக்கலை.இன்றும் கேரளத்தில் பெரும் தொழிலாகவே வளர்ந்திருக்கிறது.

                              பக்க விளைவுகள் இல்லை என்று கருதப்படுவதால் ஆயுர்வேதம்,சித்த மருத்துவம் போன்றவை மக்களிடம் இன்று பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது.தற்போது பொதுபுத்தி ஆங்கில மருத்துவத்துக்கு பதிலாக இந்திய மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் அதிகரித்திருகிறது.

                              கிராமத்தில் இன்னும்கூட நாடி பிடித்து பார்ப்பவர்களை பார்க்க முடியும்.வாதம்,பித்தம்,கபம் என்று சொல்வார்கள்.இதுதான் திரிதோஷ த்த்துவம்.இந்த மூன்று தோஷங்களும் சம நிலையில் இல்லாவிட்டால் நோய் ஏற்படுகிறது.இவை சம்மாக இருந்தால் மனிதன் ஆரோக்யமாக இருப்பான்.

                              வாதம் அதிகமாக இருந்தால் அதற்கு தக்க மருந்து கொடுப்பார்கள்.சரியாக ஜீரணம் ஆகாமல் வாந்தியெடுத்தால் பித்தம் என்பார்கள்.ஜீரணம் பித்த தோஷத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.கிராமத்தில் பல இடங்களில் வீட்டு மருத்துவம் செய்வது இதன் அடிப்படையில்தான்.

                               ஒரு நோய்க்கு மருந்து சாப்பிடும்போது சிலவற்றை விலக்க வேண்டும் என்பது பத்தியம் என்பார்கள்.ஆங்கில மருத்துவத்தில் ஒத்துக்கொள்ளாத்தை சாப்பிடவேண்டாம் என்பார்கள்.ஆயுர்வேத்த்தில் கட்டாயம் சிலவற்றை தவிர்க்கவேண்டும்.

                                ஆயுர்வேத்த்தில் புகழ்பெற்றது பஞ்சகர்மா சிகிச்சை.ரஜினி,வாஜ்பாய் ஆகியோர் கேரளாவுக்கு சென்று சிகிச்சை செய்து கொண்ட்தில் அதிகமாகவே புகழ்பெற்றுவிட்ட்து.இது அய்ந்து விதமான சிகிச்சை முறைகளை உள்ளடக்கியது.சென்னையில் இப்போது நிறைய இடங்களில் ஆரம்பித்து விட்டார்கள்.

                                 பஞ்ச கர்மா போன்ற சிகிச்சை முறைகள் ஏழைகள் அணுக்க்கூடிய நிலையில் இல்லை.ஆயிரக்கணக்கில் பணம் இருந்தால்தான் சிகிச்சை கிடைக்கும்.ஆங்கில மருத்துவருக்கு இணையாக பொருளீட்ட வேண்டும் என்ற மனோபாவத்தில் இன்று பணம் படைத்தோரின் வைத்திய முறையாக இந்திய மருத்துவ முறைகள் மாறி வருகின்றன.

                                  மூலிகையால் தயாரிக்கப்படும் மருந்துகள் பல ஆங்கில மருந்துகளை விட விலை அதிகம்.அதனால் சாதாரண மக்கள் இவற்றை அணுகுவதில்லை.மருந்துகளை பெரும் நிறுவன்ங்கள் கையில் வைத்திருக்கின்றன.டாபர்,ஹிமாலயா போன்றவை முக்கிய நிறுவன்ங்கள்.அஸ்வகந்தா லேகியம்,ச்யவன்பிராஷ் போன்றவை புகழ்பெற்ற சில மருந்துகள்.

-

10 comments:

Jana said...

ஆயுள்வேத, சித்த மருத்துவப்பக்கம் மறுமலாச்சி ஒன்று தற்போது பரவலாக ஆரம்பித்து வருகின்றது. இயற்கையான மருந்துகள், பக்கவிளைவற்ற நச்சுத்தன்மை ஊறாத மூலிகைகளின் நிரூபனங்கள் என்பன காரணமாக இருக்கலாம்.
இந்த மருத்து முறைகளுக்கு அரசாங்கம் உரிய வழிவகைகளை வகுத்து கொடுப்பதுடன், மானிய உதவிகளையும் வழங்குவது சிறப்பாக இருக்கும்.

நிரூபன் said...

கிராமத்தில் இன்னும்கூட நாடி பிடித்து பார்ப்பவர்களை பார்க்க முடியும்.//

அஃதே... அஃதே.. நம்ம ஊரிலும் இம் முறை இன்று வரை இருக்கிறது சகோ.

நிரூபன் said...

லேகியம் பற்றியும் சொல்லியிருக்கீங்க..ஹி..

உண்மையில் கேரள ஆயுர் வேத வைத்தியம் பற்றியும், அவை ஏன் ஏழைகளைச் சென்றடையாமல் இருக்கின்றன என்பது பற்றியும் அருமையாக அலசியுள்ளீர்கள்.

இன்றைய கால கட்டத்தில் அரசாங்கம் தான் இத்தகைய மருத்துவ முறைகளை ஊக்குவித்து, பொது மக்களிற்கும் இவற்றினைச் சென்று சேரும் வண்ணம் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

Sankar Gurusamy said...

மூலிகைகளின் தரம் மருந்து தயாரிப்பில் முக்கியம். இப்போதய பெரும்பாலான மூலிகைகள் தோட்டத்தில் வளர்க்கப்படுபவையே. சில சூழல் களில் வளரும் மூலிகைகளுக்கு வலிமை அதிகம். இவையே விரைந்த பலன் தரும்.. ஆனால் அப்படிப்பட்ட சூழல் இப்போது மிகவும் குறைந்து விட்டது. எனவேதான் இப்படிப்பட்ட விலை வைத்து விற்கிறார்கள்.

அதுவும் போக சில மூலிகைகளை பறிக்கும் போதும் மருந்து தயாரிக்கும்போதும் அதற்குரிய மந்திரப் பிரயோகம் செய்தால் மிக வலிமையான மருந்தாகப் பரிமளிக்கும். இதுபற்றிய அறிவு உடையவர்கள் மிகவும் குறைவு என்பது இந்த விலை ஏற்றத்தின் இன்னொரு காரணி.

இதில் இப்போது போலிகளும் பெருகிவிட்டதால் இதன் நம்பகத்தன்மை மிகவும் குறைந்துவிட்டது.

தங்களின் விழிப்புணர்வுப் பதிவுக்கு மிக நன்றி.

http://anubhudhi.blogspot.com/

சக்தி கல்வி மையம் said...

உண்மையான பயனுள்ள பதிவு.. நன்றி..

shanmugavel said...

@Jana said...

ஆயுள்வேத, சித்த மருத்துவப்பக்கம் மறுமலாச்சி ஒன்று தற்போது பரவலாக ஆரம்பித்து வருகின்றது. இயற்கையான மருந்துகள், பக்கவிளைவற்ற நச்சுத்தன்மை ஊறாத மூலிகைகளின் நிரூபனங்கள் என்பன காரணமாக இருக்கலாம்.
இந்த மருத்து முறைகளுக்கு அரசாங்கம் உரிய வழிவகைகளை வகுத்து கொடுப்பதுடன், மானிய உதவிகளையும் வழங்குவது சிறப்பாக இருக்கும்.

அரசு மருத்துவமனைகளில் ஆயுர்வேத பிரிவு இருக்கிறது.அதிக வரவேற்பில்லை.

shanmugavel said...

@நிரூபன் said...

கிராமத்தில் இன்னும்கூட நாடி பிடித்து பார்ப்பவர்களை பார்க்க முடியும்.//

அஃதே... அஃதே.. நம்ம ஊரிலும் இம் முறை இன்று வரை இருக்கிறது சகோ.

எளியமுறை எக்காலத்திலும் அழியாது .நன்றி நிருபன்

shanmugavel said...

@நிரூபன் said...

லேகியம் பற்றியும் சொல்லியிருக்கீங்க..ஹி..

உண்மையில் கேரள ஆயுர் வேத வைத்தியம் பற்றியும், அவை ஏன் ஏழைகளைச் சென்றடையாமல் இருக்கின்றன என்பது பற்றியும் அருமையாக அலசியுள்ளீர்கள்.

இன்றைய கால கட்டத்தில் அரசாங்கம் தான் இத்தகைய மருத்துவ முறைகளை ஊக்குவித்து, பொது மக்களிற்கும் இவற்றினைச் சென்று சேரும் வண்ணம் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

ஆம் .சகோதரம் நன்றி

shanmugavel said...

@Sankar Gurusamy said...

மூலிகைகளின் தரம் மருந்து தயாரிப்பில் முக்கியம். இப்போதய பெரும்பாலான மூலிகைகள் தோட்டத்தில் வளர்க்கப்படுபவையே. சில சூழல் களில் வளரும் மூலிகைகளுக்கு வலிமை அதிகம். இவையே விரைந்த பலன் தரும்.. ஆனால் அப்படிப்பட்ட சூழல் இப்போது மிகவும் குறைந்து விட்டது. எனவேதான் இப்படிப்பட்ட விலை வைத்து விற்கிறார்கள்.

அதுவும் போக சில மூலிகைகளை பறிக்கும் போதும் மருந்து தயாரிக்கும்போதும் அதற்குரிய மந்திரப் பிரயோகம் செய்தால் மிக வலிமையான மருந்தாகப் பரிமளிக்கும். இதுபற்றிய அறிவு உடையவர்கள் மிகவும் குறைவு என்பது இந்த விலை ஏற்றத்தின் இன்னொரு காரணி.

இதில் இப்போது போலிகளும் பெருகிவிட்டதால் இதன் நம்பகத்தன்மை மிகவும் குறைந்துவிட்டது.

தங்களின் விழிப்புணர்வுப் பதிவுக்கு மிக நன்றி.

முக்கியமான கருத்துக்கள் .நன்றி சங்கர்

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உண்மையான பயனுள்ள பதிவு.. நன்றி..

thanks karun