Saturday, April 16, 2011

சிரிப்பாய் சிரிக்கும் கள்ளக்காதல்கள்.


பெரும்பாலானோருக்கு தெரிந்தே நடக்கும் ஒரு விஷயம்தான்.தெர்ந்த இடங்களில்,பக்கத்து தெருவில் பணியிடங்களில்,பயிற்சி முகாம்களில் மணம் மீறிய உறவு ஏற்பட்டு வளர்வதை பார்த்திருப்போம்.இளம் வயது காதலர்கள் போலவே துடிப்புடன் காதல் செய்வார்கள்.

                                                                              கடைக்குச் சென்று கடலை மிட்டாய் வாங்கி வருவதிலிருந்து பேருந்தில் இடம் பிடித்து தருவது வரை ஆண்மகன் தீயாய் உதவி செய்து கொண்டிருப்பான்.வேறு ஆண்களுடன் அப்பெண் பேசிவிட்டால் மொத்த மனமும் கெட்டுப்போய் இரவு அவன் தூங்குவது கஷ்டமாகிவிடும்.

                              அது ஒன்றும் ரகசியம் கிடையாது.குற்றவாளி ஏதாவது ஒரு தடயத்தை விட்டு வைப்பான் என்று கோட்பாடு இருக்கிறது.கள்ளக்காதல்களில் நிறைய பேருக்கு அவர்கள் ரொம்ப நெருக்கம் என்று பலர் கருத ஆரம்பித்த பிறகுதான் அவர்களுக்குள் காதலே முழுமையடையும்.

                               சுற்றி இருக்கும் மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்ற கூச்ச நாச்சமெல்லாம் அவர்களுக்கு இருப்பதில்லை.அநேகமாக நம்மை வேடிக்கை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் தெரிந்திருக்க மாட்டார்கள்.காதலில் ஆழ்ந்த ஈடுபாட்டோடு இருப்பதால் சுற்றி உள்ளவர்களை கவனிக்க தோன்றுவதில்லை.

                                  உடனடியாக இதை தெரிந்துகொள்வது காதல் நாயகியின் உடனிருக்கும் தோழிகள்தான்.புன் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துவிட்டு மற்ற பெண்களுக்கு,ஆண்களுக்கும் போட்டுக் கொடுப்பவர்கள் இவர்கள்தான்.ஒரு குழுவை சேர்த்துக் கொண்டு அவர்களை கமெண்ட் செய்துகொண்டு ஜாலியாக இருப்பார்கள்.

                                  நான் ஒரு பெண்ணைக் கேட்டேன்,நீங்கள் கொஞ்சம் புத்தி சொல்லக்கூடாதா? என்னை அப்பாவி போல பார்த்தார்.சொல்ல்லாம்தான் ஆனால் அதற்குப் பிறகு என் முன்னால் மட்டும் உஷாராக நடந்து கொள்வார்கள்.என்னை பார்க்கும்போது அவளுக்கும் ஒரு மாதிரி இருக்கும்.

                                  மூன்று குழந்தைகள் உள்ள ஒரு பெண் எழுதிய கடிதம் ஒன்றை எனக்கு காட்டினார்கள்.எப்படியோ எடுத்திருக்கிறார்கள்.அதில் இருந்த வாசகம் என் மனதை கவர்ந்துவிட்ட்து.எனக்கு உங்களைத் தவிர வேறு எண்ணமில்லை.குழந்தைகள் நினைவுகூட வருவதில்லை.

                                  மனிதர்கள் முழுமையான விலங்காக மாறி விடுவதை இப்படிப்பட்ட காதல்களில்தான் பார்க்க முடியும்.உணர்ச்சி தவிர எந்த சிந்தனையும் அவர்களிடம் பார்க்கமுடியாது.காதல்,காம்ம் மட்டுமல்ல! ஆத்திரம்,கோபம்,பொறாமை போன்ற உணர்ச்சிகளும் அவர்களுக்கு அதிகம்.அதனால் கொலைகளும்,தற்கொலைகளும் மலிந்து போகின்றன.குடும்பங்கள் சிதறிப் போகின்றன.சுற்றி உள்ளவர்கள் யாராவது கொஞ்சம் யோசிக்கவைத்தாலே சிலரை பிரச்சினைகளில் இருந்து வெளியே கொண்டு வந்து விடலாம்.
-

23 comments:

Sankar Gurusamy said...

Really true. There must be some psychological reason for such human behaviour. When such events start happening we should be very careful to jump that phase in life.

Thanks for sharing..

shanmugavel said...

உண்மைதான் சங்கர் நன்றி

எண்ணங்கள் 13189034291840215795 said...

மூன்று குழந்தைகள் உள்ள ஒரு பெண் எழுதிய கடிதம் ஒன்றை எனக்கு காட்டினார்கள்.எப்படியோ எடுத்திருக்கிறார்கள்.அதில் இருந்த வாசகம் என் மனதை கவர்ந்துவிட்ட்து//

அது உண்மையா பொய்யா என கூட தெரியாமல் ஜட்ஜ் பண்ணாதீர்கள்.. சுவரஸ்யமான கிசு கிசு முறையில் ஒரு பிரச்னையை அணுக கூடாது.. பிரச்னையின் வேரிலிருந்து பார்த்து தீர்வும் சொல்லணும்.. அதைவிட்டு உலகமே கெட்டுபோச்சு என்பது போல் சொல்வது பயனளிக்காது.. அது சில ஊடகத்தினரின் வேலை ..

அதிகமான அடக்குமுறை , அடிமைத்தனம் இருக்குமிடத்தில் கண்டிப்பாக இருக்கும்.. ஒண்ணும் செய்ய முடியாது..


அதிலும் இப்போது பெண்கள் முன்னேற , வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.. பல வழிகளும் எளிது .. இன்னும் கட்டுப்பெட்டித்தனமாய் நடத்த முயன்றால் இவை அதிகரிக்கும்..

நல்லதொரு நட்பும் மரியாதையும் மட்டுமே இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாகும்..

MANO நாஞ்சில் மனோ said...

சாட்டையடி அலசல்.....

வலிப்போக்கன் said...

இது போன்ற பிரச்னைகளுக்கு காரணகர்த்தா யாருன்னு
சொல்லுங்க சார்.

shanmugavel said...

@எண்ணங்கள் 13189034291840215795 said...

உண்மைதான் அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக இருக்கும்.நல்ல கருத்து .நன்றி

shanmugavel said...

@MANO நாஞ்சில் மனோ said...

சாட்டையடி அலசல்.....


Thanks mano

shanmugavel said...

@வலிபோக்கன் said...

இது போன்ற பிரச்னைகளுக்கு காரணகர்த்தா யாருன்னு
சொல்லுங்க சார்.

காரணங்களா? காரண கர்த்தாவா? சொல்லிட்டா போச்சு சார் !

ராஜி said...

நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றி

shanmugavel said...

@ராஜி said...

நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றி

தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி

நிரூபன் said...

இளம் வயது காதலர்கள் போலவே துடிப்புடன் காதல் செய்வார்கள்//

நாற்பதிலும் தாங்கள் இருபது என்பதனை நிரூபிக்கத் தானோ!

நிரூபன் said...

உடனடியாக இதை தெரிந்துகொள்வது காதல் நாயகியின் உடனிருக்கும் தோழிகள்தான்//

நன்றாகத் தான் அலசியிருக்கிறீர்கள்..ஹி..


காதலுக்கு எப்பவுமே தோழிகள் தான் பக்க பலமாம்.. இது பல இலக்கியங்கள் மூலம் அறிந்த உண்மை. காரணம்.. தூது போவதற்கு.

நிரூபன் said...

எனக்கு உங்களைத் தவிர வேறு எண்ணமில்லை.குழந்தைகள் நினைவுகூட வருவதில்லை.//

இவர்களை எல்லாம் திருத்தவே முடியாது...

நிரூபன் said...

கள்ளக் காதல்கள் பற்றிய பல பேரின் அனுபவங்களைப் பெற்று பதிவினை எழுதியிருக்கிறீர்கள். பிள்ளைகளையும், தன் உறவினர்கள் பற்றிய எண்ணத்தையும் கைவிட்டு விட்டு ஓடிப் போகும் காதலர்கள் பற்றி நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது.

shanmugavel said...

@நிரூபன் said...

இளம் வயது காதலர்கள் போலவே துடிப்புடன் காதல் செய்வார்கள்//

நாற்பதிலும் தாங்கள் இருபது என்பதனை நிரூபிக்கத் தானோ!

வயது கூடக்கூட இளமையாக இருக்கும் எண்ணம் அதிகரிக்கும்.நன்றி நிரூபன்

shanmugavel said...

@நிரூபன் said...

உடனடியாக இதை தெரிந்துகொள்வது காதல் நாயகியின் உடனிருக்கும் தோழிகள்தான்//

நன்றாகத் தான் அலசியிருக்கிறீர்கள்..ஹி..


காதலுக்கு எப்பவுமே தோழிகள் தான் பக்க பலமாம்.. இது பல இலக்கியங்கள் மூலம் அறிந்த உண்மை. காரணம்.. தூது போவதற்கு.

ஆனால் கள்ளக்காதலுக்கு யாரும் தூது போவதில்லை சகோதரம்.

shanmugavel said...

@நிரூபன் said...

எனக்கு உங்களைத் தவிர வேறு எண்ணமில்லை.குழந்தைகள் நினைவுகூட வருவதில்லை.//

இவர்களை எல்லாம் திருத்தவே முடியாது...

தன்னிலை இழந்து விடுகிறார்கள்.

shanmugavel said...

@நிரூபன் said...

கள்ளக் காதல்கள் பற்றிய பல பேரின் அனுபவங்களைப் பெற்று பதிவினை எழுதியிருக்கிறீர்கள். பிள்ளைகளையும், தன் உறவினர்கள் பற்றிய எண்ணத்தையும் கைவிட்டு விட்டு ஓடிப் போகும் காதலர்கள் பற்றி நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது.

ஆம் நிரூபன் இது ஒரு சமூகப் பிரச்சினையும் கூட

Jana said...

சுற்றி இருக்கும் மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்ற கூச்ச நாச்சமெல்லாம் அவர்களுக்கு இருப்பதில்லை.


யதார்த்தம். அந்த அளவுக்கு கண்ணை மறைக்கின்றது அது!!

shanmugavel said...

@Jana said...

சுற்றி இருக்கும் மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்ற கூச்ச நாச்சமெல்லாம் அவர்களுக்கு இருப்பதில்லை.


யதார்த்தம். அந்த அளவுக்கு கண்ணை மறைக்கின்றது அது!!

ஆம்.ஜனா நன்றி

சாகம்பரி said...

இதே பிரச்சினைதான் சமீபத்தில் ஒரு மாணவி கொலை செய்யப்பட்டாள். தவறு அவள் அம்மாவுடையது. 98% வைத்திருக்கும் பெண் இறந்துவிட்டாள். இதெல்லாம் சாட வேண்டிய விசயங்கள்தான். ஆனால் ஒரு request சில விசயங்களை பதிவு செய்யும்போது அப்பட்டமாக சொல்லாமல் அழகான வார்த்தைகளை உபயோகித்தால் நன்றாயிருக்கும் . ஒரு சகோதரியாக சொல்கிறேன். நன்றி.

shanmugavel said...

நீங்கள் கூறுவது ஏற்கத்தகுந்ததே சகோதரி!நன்றி

நித்ய அஜால் குஜாலானந்தா said...

..