Thursday, July 14, 2011

வேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்பு


வேலூரில் பொற்கோயில் இருப்பது கேள்விப்பட்டிருப்பீர்கள்.நான் அறிந்துகொண்ட்து கும்பாபிஷேகம் நடந்த அடுத்த நாள்.கணேஷ் என்று ஒரு நண்பர்.திருச்சியை சார்ந்தவர்.வேலூரில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தார்.ஒரு நாள் போன் செய்து வெகுநாளாயிற்று உங்களை சந்தித்து வேலூர் வருகிறீர்களா? என்றார்.தங்கத்திலேயே கோயில் கட்டியிருப்பதாகவும்,அங்கே போகலாம் என்றும் தெரிவித்தார்.அன்று ஓய்வாக இருந்த்தால் நானும் வருவதாக சொல்லிவிட்டேன்.

                                      மாலை வேலூர் ராஜா தியேட்டர் அருகே இருவரும் சந்தித்தோம்.நான்கு மணி இருக்கும்.தங்க கோயில் என்று கேட்டு பேருந்தில் ஏறிக்கொண்டோம்.அப்போது கோயில் வாசலிலேயே பேருந்து நிறுத்தம்.வெளியே செருப்புகள் இறைந்து கிடந்தன.டோக்கன் சிஸ்டம் எல்லாம் இல்லை.என்னுடையது புது செருப்பு.யாரும் எடுக்க மாட்டார்கள் என்றான்.நம்பி விட்டுவிட்டு உள்ளே நுழைந்தோம்.அப்போதே செல்போனை அனுமதிக்கவில்லை.அதை கொடுத்துவிட்டு போக அரைமணிநேரம் வரிசையில் நிற்க வேண்டியிருந்த்து.

                                      வரிசையில் நின்றது நானல்ல! அவனே முந்திக்கொண்டு போனான்.வெகு நேரம் காத்திருந்தேன்.செல்போனை கொடுத்துவிட்டு நான் நிற்பதை தெரியாதவன் போல அவன் பாட்டுக்கு போய்க்கொண்டிருந்தான்.கூடவே ஒரு அழகிய பெண்,ஒரு தம்பி,நான் அழைத்த்து காதில் வாங்கவில்லை.மெட்டல் டிடெக்டர் சோதனைகளுக்கு பிறகு உள்ளே நுழைந்தோம்.அவனை நெருங்கி நானும் நடந்து கொண்டிருந்தேன்.அங்கே இருக்கும் செடிகளையும்,மலர்களையும் கைகாட்டி பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தான்.

                                       என்னைக்கொஞ்சமும் கண்டுகொள்ளாத்து எனக்கு கஷ்டமாக இருந்த்து.ஆகட்டும் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.என்னவோ சொல்கிறார்கள்,நண்பேண்டா!,உயிர் நண்பன்,அது இதுஎன்று ஒரு அழகிய பெண் வந்து பேசட்டும்.நட்பு என்ன கதி ஆகிறதென்று தெரியும்.பூங்காவில் வழி முழுக்க வாசகங்கள்.மெதுவாக ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.நானும் அவர்களை மறந்துவிட்டேன்.

                                       புத்தம் புதிய கோயில்,தோட்டம் அதில் உள்ள வாசகங்களை படித்துக்கொண்டும்,ரசித்துக்கொண்டும் நடந்து கொண்டிருந்தேன்.இன்னொரு நண்பன் அழைத்து இரண்டாவது முறை போனபோது அந்த அமைதியும்,சந்தோஷமும் இல்லை.அப்போது தடுப்பு எதுவும் இல்லை.என் இஷ்டப்படி காலாற நடந்து கொண்டிருந்தேன்.அதெல்லாம் எனக்கே சொந்தமானது போல!சுமாரான கூட்டம்தான் அதுவும் நிறைய ஆந்திராக்கார்ர்கள்.

                                       எனக்கு சந்தோஷமாக இருந்த்து.ஏலகிரி மலையில் லேசான பனிப்பொழிவில் வயலில் நடந்த்து நினைவுக்கு வந்த்து.தங்கத்தால் வேயப்பட்ட கோபுரம் தகதகத்துக்கொண்டிருந்த்து.சுற்றி சுற்றி பார்த்தாகிவிட்ட்து..நண்பன் ஆளே காணோம்.வெளியில் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று வெளிவாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.பக்கத்தில் ஒருவர் செல்போனை வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டே வந்தார்.ஆச்சர்யம்.உங்களுக்கு மட்டும் எப்படி செல்போனை விட்டார்கள்? என்றேன்.என்னை ஆச்சர்யமாக பார்த்தவர் “செக் பண்றாங்களா? என்றார்.

                                     கேசரி கொடுத்தார்கள்.நல்லருசி. வெளியே அரைமணி நேரம் காத்துக்கொண்டிருந்தபின் வந்து சேர்ந்தான்.செல்போனை மீட்டு வந்தான்.அந்த பொண்ணு ஆந்திரா என்றான்.வசதியான பொண்ணு,அவள் அம்மாவுடன் வந்திருக்கிறாள்.நான் எதுவும் பேசவில்லை.செருப்பைத்தேடிக்கொண்டிருந்தேன்.நிறைய நாலேஜ்,உம் என்று சொன்னால் திருமணம் செய்து கொள்வேன் என்றான்.நான் பேசவில்லை.நம்பர் வாங்கிவிட்டேன்,ஏதாவது சாப்பிடலாமா? வேணாம்,பஞ்சாபிதாபா போயிடலாம்.

                                     சி.எம்.சி.போகும் வழியில் ஒரு பஞ்சாபி தாபாவுக்குள் நுழைந்தோம்.சைவம்.நல்ல பசியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.இப்போது எங்கே போயிருப்பார்கள்? என்றவன் செல்லை எடுத்து தொடர்பு கொள்ள ஆரம்பித்தான்.முகம்விழுந்து போய்விட்ட்து பாவம்.நான் எதுவும் கேட்கவில்லை,அவனே சொன்னான் –ராங் நம்பர் என்று பதில் வருகிறதாம்.
-

10 comments:

இராஜராஜேஸ்வரி said...

வேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்பு ஒளிர்கிறது.

Sankar Gurusamy said...

நல்ல வேளை, காசுக்கு வேட்டு வைக்காம,கொஞ்ச நேர கடலையோட பல்பு முடிஞ்சது.. அதுக்கு சந்தோசப்படுங்க..

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

வேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்பு ஒளிர்கிறது.

நன்றி

shanmugavel said...

@Sankar Gurusamy said...

நல்ல வேளை, காசுக்கு வேட்டு வைக்காம,கொஞ்ச நேர கடலையோட பல்பு முடிஞ்சது.. அதுக்கு சந்தோசப்படுங்க..

பகிர்வுக்கு நன்றி...

நன்றி சங்கர் குருசாமி

ad said...

நல்ல நட்பு.
நல்ல நொலேஜ்.

சாகம்பரி said...

நல்ல நண்பனின் வயிற்றேரிச்சல் உடனேயே கேட்டுவிட்டதோ? சரி, உள்ளே சாமி கும்பிட்டாராமாம்?

shanmugavel said...

@எஸ்.பி.ஜெ.கேதரன் said...

நல்ல நட்பு.
நல்ல நொலேஜ்.

ஆமாம் சார்,நன்றி

shanmugavel said...

@சாகம்பரி said...

நல்ல நண்பனின் வயிற்றேரிச்சல் உடனேயே கேட்டுவிட்டதோ? சரி, உள்ளே சாமி கும்பிட்டாராமாம்?

பின்னே? சாமி கும்பிடுவதா? பெரிய பக்திமான் முழுக்க முழுக்க கடவுளைப்பற்றியே பேசி அறுத்திருப்பான்.நன்றி

நிரூபன் said...

பாஸ், சான்ஸே இல்லை, படு கலக்கலாக சிறுகதையாக எழுதியிருக்கிறீங்க.

எதிர்பார்ப்போடு, இறுதியில் ஏமாற்றத்தினையும் முடிவு தந்திருக்கிறது.

நிஜமான சம்பவம் என்றாலும், நீங்கள் சிறுகதை வடிவில் தொகுத்து தந்திருப்பது அருமை.

காதர் அலி said...

பொற் கோவிலுக்கு நானும் போய் இருக்கிறேன்.போகும் வழியில் அவர்கள் எழுதி வைத்திருக்கும் வார்த்தைகள் சுகம்.ஆனால் அந்த கோவிலை உருவாக்க அவர்கள் செய்தது தகிடுதத்தம் வேலை. அந்த பக்கம் வசித்த அப்பாவி மக்களின் நிலங்களை பிடுங்கி இவர்கள் செய்த அட்டுழியம் கேட்டாலே பல ஆயிரம் பல்புகளை தாண்டிவிடும்.