
குற்றமாக தண்டனைக்குரியதாக கருதப்பட்ட சில செயல்கள் தற்போது இயல்பானதென்று புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.தனி மனித உரிமைகளாக விவாதிக்கப்பட்டு மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ள சமூகம் தயாராகிவிட்டது.எளிய உதாரணம்.-ஓரினச்சேர்க்கை.இதே போல பாலியல் தொடர்பான இன்னொரு பொருள் கள்ளக்காதல்.
                                                                                            சட்டப்பூர்வ திருமண உறவை தாண்டி  ஆணோ,பெண்ணோ வேறொரு நபருடன் காதலில் ஈடுபடுவதை கள்ளக்காதல் என்கிறோம்.காமமே  இதன் அடிப்படையாக கருதப்படுகிறது "கணவனுக்கு அல்லது மனைவிக்கு போதுமான  பாலியல் திறன்கள் இல்லை என்று கருதுவோர் இருக்கிறார்கள்.நாட்டுப்புற  நம்பிக்கைகளில் ஒன்றாக இவை இருந்தது.
                                                                                            வாத்ஸ்யாயனார் காம சூத்திரத்தில்  கள்ளக்காதலை குறித்துள்ளார்.அவரது காலத்தை கவனியுங்கள்.வேலி தாண்டுவது  காலந்தோறும் தொடர்ந்து வருவதை நாம் உணர முடியும்.தம்பதியர் ஒருவருக்கொருவர்  உண்மையான அன்பும்,குழந்தைகள் மீது மிகுந்த பாசமுடையவர்கள் தவிர மற்றவர்கள்  கள்ளக்காதலில் விழுபவர்கள்தான் என்கிறார்.மதிக்கப்படாத நிலை,சூழல்  போன்றவற்றை முக்கிய காரணமாக கூறுகிறார்.
                                                                                          பரிணாமக்கொள்கையும் ,பிராய்டிசமும்  உலகை மாற்றின.தற்போது கள்ளக்காதலுக்கு மரபணுக்களை காரணமாக கருதுவோர்  இருக்கிறார்கள்.மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தவன்.ஒருவனுக்கு  ஒருத்தி என்பது நமது முன்னோர்களுக்கு ஏது?விலங்குகளுக்கு  குடும்பம்,அவமானம்,கௌரவம் என்று ஏதேனும் உண்டா?மனிதன் கால்களால் நிமிர்ந்து  நடந்து சிந்திக்க ஆரம்பித்து என்னென்னவோ  கொண்டு வந்தான். 
                                                                                             ஒருவருக்கு மேற்பட்ட காதல்  உணர்ச்சிகள்  மரபணுக்கள் மூலம் பெறப்பட்டாலும் மனிதர்கள் அனைவருக்கும்  பொருந்தாது.ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.சுய இன்பம்,ஓரினச்சேர்க்கை உள்பட  மற்ற வக்கிரங்கள் விலங்குகளிடம் உண்டா என்று யாரும் கேட்கவேண்டாம்.ஒரு  குறிப்பிட்ட நோய்க்கான மரபணுக்கள் எல்லோருக்கும் இருப்பதில்லை.கள்ளக்காதல்  இன்னும் விலங்கு நிலையிலேயே இருப்பவர்களால் நிகழ்த்தப்படுவது என்றும்  கொள்ளலாம்.
            26.12.2010  அன்றுநடைபெற உள்ள  ஈரோடு  பதிவர் சங்கமம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்.பெரியார் மண்ணிலிருந்து  நாம் சமூக மேம்பாட்டுக்கான கருவியைப் பெறுவோம்.
- 
5 comments:
//.சுய இன்பம்,ஓரினச்சேர்க்கை உள்பட மற்ற வக்கிரங்கள் விலங்குகளிடம் உண்டா என்று யாரும் கேட்கவேண்டாம்.//
சிந்தனைக்குரிய வரிகள்.
ந்ன்றி சத்ரியன்.
\\வேலி தாண்டுவது காலந்தோறும் தொடர்ந்து வருவதை நாம் உணர முடியும்.தம்பதியர் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பும்,குழந்தைகள் மீது மிகுந்த பாசமுடையவர்கள் தவிர மற்றவர்கள் கள்ளக்காதலில் விழுபவர்கள்தான்\\ this is true. also the multimedia (cinema, tv, magazines), our working situation in floating population, consumerism has increased this phenomenon.
\\ வேலி தாண்டுவது காலந்தோறும் தொடர்ந்து வருவதை நாம் உணர முடியும்.தம்பதியர் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பும்,குழந்தைகள் மீது மிகுந்த பாசமுடையவர்கள் தவிர மற்றவர்கள் கள்ளக்காதலில் விழுபவர்கள்தான்\\ very true.
நல்ல ஆய்வு நன்றி தொடர வாழ்த்துகள்
Post a Comment