Thursday, September 1, 2011

கிருஷ்ணகிரிய எதுக்கு கிழிக்கணும் பதிவர்களே?

                           கிருஷ்ணகிரியை ஆளாளுக்கு கிழித்து தள்ளுகிறார்கள்.கிழிந்துபோய் மழை பெய்தால் வீடு,ரோடு என்று எல்லா இட்த்திலும் விழுகிறது.இங்கே சிறு பையனைக்கூட ஏமாற்ற முடியாது.ஸ்கூட்டர் எப்படி ஓடுகிறது என்று கேட்டுப்பாருங்கள்’’டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’’ என்று தெளிவாக பதில் வரும்.

                           உலகமறிந்த ரஜினிகாந்த்,ராஜாஜி எல்லாம் இந்த மாவட்ட்த்தில் பிறந்தவர்கள்.ரஜினிகாந்தின் அண்ணனை அடிக்கடி இங்கே பார்த்திருக்கிறேன்.இங்கே விளையும் மாம்பழத்தை சுவைக்காத உலக நாடுகள் குறைவு.கிரானைட் கற்களையும் நாடுகள் பார்த்திருக்கின்றன.பெரும்பாலான நாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி ஆகிறது.

                           மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது இங்கே சீதோஷ்ண நிலை நன்றாக இருக்கும்.பெங்களூருக்கு அருகில் இருக்கிறது.ஓசூர் நிறைய பேருக்கு தெரியும்.தொழில் நகரம்.எல்லா மாவட்ட்த்து ஆட்களையும்,மாநிலத்து ஆட்களையும்,வெளிநாட்டினரையும் இங்கே பார்க்க முடியும்.
           
                           ஓசூருக்கு அருகில் தளி என்ற ஊர் இருக்கிறது.தொகுதியும் கூட!லிட்டில் இங்கிலாந்துஎன்று சொல்வார்கள்.பெரும்பாலான வீடுகளில் மின் விசிறியை பார்க்க முடியாது.இங்கிலாந்தில் நிலவும் தட்பவெப்ப நிலைதான் இங்கும்.காய்கறி,கீரைகள் அதிகம் பயிரிடுவார்கள்.விலையும் மிக குறைவு.ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

                             பணிபுரிபவர்கள் யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை.பெரும்பான்மையானவர்கள் தெலுங்கு,கன்னடம் பேசும் மக்கள்.அதனால் தேசியக் கட்சியின் ஆதிக்கம்தான் அதிகம்.இப்போது இருப்பவர் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.இங்கே தோழர்கள் அதிகம்.தமிழ் ஓரளவு பேசுவார்கள்.உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால்என் பேர் சிக்கம்மா! என்பார்கள்.

                             யானைகள் அடிக்கடி கிராமத்திற்கு வந்து பீதியூட்டுவது இம்மாவட்ட்த்தில் அதிகம்.பாம்புகளும் அதிகம்.சென்ற மாதம் மியூஸியத்தில் பாம்பு படக் கண்காட்சி வைத்திருந்தார்கள்.போய் பார்த்தேன்.இத்தனை வகை பாம்புகளா? மலைப்பாம்பு கூட கிராமப்புறத்திற்கு வருவதுண்டு.கறி சமைத்து சாப்பிடுவதை நாளிதழில் செய்தியாக போட்டார்கள்.

                             5 தேசிய நெடுஞ்சாலைகள் கிருஷ்ணகிரியை தொட்டுச்செல்கின்றன.விபத்துகளும் அதிகம் நடக்கின்றன.இன்றைய முதல்வர் போட்டியிட்டு வெற்றியும் தோல்வியும் பெற்ற பர்கூர் தொகுதி கிருஷ்ணகிரியில் இருக்கிறது.வாழப்பாடி ராம்மூர்த்தி,இ.வி.கே.எஸ் இளங்கோவன் எல்லாம் இங்கே போட்டியிட்டவர்கள்.

                               டி.ராஜேந்தர் எதிர்த்து போட்டியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.சைக்கிள் சின்னம் கேட்டு கொடுக்காமல் ரயில் எஞ்சின் சின்னம் கொடுத்தார்கள்.அப்போது கிருஷ்ணகிரி மாவட்டமாக பிரிக்கப்படவில்லை.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமளிதுமளிப் பட்ட்து.சிங்கத்தின் கர்ஜனையை அப்போது நேரில் பார்த்தேன்.

                              கிருஷ்ணகிரி அணை இருக்கிறது.நான் ஃப்ரெஷ் மீன் சாப்பிட செல்வது வழக்கம்.விஜய்,அவரது தந்தைக்கு காவேரிப்பட்டிணம் அருகில் உள்ள கோயில் விருப்பமானது.எஸ்.ஏ.சந்திரசேகர் அடிக்கடி வருவதுண்டு.அழகி படம் எடுத்த உதயகுமார் இந்த ஊரைச்சேர்ந்தவர்.மிக இளைய மாவட்டம்.ஆனால் பதிவுலகில் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.அவ்வ்வ்வ்வ்வ்வ்......
-

33 comments:

K said...

ஸ்கூட்டர் எப்படி ஓடுகிறது என்று கேட்டுப்பாருங்கள்’’டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’’ என்று தெளிவாக பதில் வரும்.:///

ஹா ஹா ஹா ரொம்ப பெரிய புத்தி சாலிகள்!

K said...

உலகமறிந்த ரஜினிகாந்த்,ராஜாஜி எல்லாம் இந்த மாவட்ட்த்தில் பிறந்தவர்கள்.ரஜினிகாந்தின் அண்ணனை அடிக்கடி இங்கே பார்த்திருக்கிறேன்.இங்கே விளையும் மாம்பழத்தை சுவைக்காத உலக நாடுகள் குறைவு.கிரானைட் கற்களையும் நாடுகள் பார்த்திருக்கின்றன.பெரும்பாலான நாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி ஆகிறது.///

ரொம்ப ஆச்சரியமா இருக்கே ஸார்!

K said...

ஓசூருக்கு அருகில் தளி என்ற ஊர் இருக்கிறது.தொகுதியும் கூட!”லிட்டில் இங்கிலாந்து” என்று சொல்வார்கள்.பெரும்பாலான வீடுகளில் மின் விசிறியை பார்க்க முடியாது.இங்கிலாந்தில் நிலவும் தட்பவெப்ப நிலைதான் இங்கும்.காய்கறி,கீரைகள் அதிகம் பயிரிடுவார்கள்.விலையும் மிக குறைவு.ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.///

கண்டிப்பாக தளிக்குப் போயே ஆகணும் ஸார்!

K said...

அழகி படம் எடுத்த உதயகுமார் இந்த ஊரைச்சேர்ந்தவர்.மிக இளைய மாவட்டம்.ஆனால் பதிவுலகில் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.அவ்வ்வ்வ்வ்வ்வ்......///

கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!!

shanmugavel said...

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
ஸ்கூட்டர் எப்படி ஓடுகிறது என்று கேட்டுப்பாருங்கள்’’டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’’ என்று தெளிவாக பதில் வரும்.:///

ஹா ஹா ஹா ரொம்ப பெரிய புத்தி சாலிகள்!

பின்னே உங்க ஊர்ல எப்படி ஓடும்?

மாய உலகம் said...

கிளிஞ்சது கிருஷ்ணகிரி.... தெரியாமல் இருந்த விசயங்களை கிளிச்சு எறிந்துவிட்டது வாழ்த்துக்கள் நண்பா

RAVICHANDRAN said...

ஓசூரில் ஊசி முதல் விமானம் வரை தயாரிக்கிறார்கள்.

bandhu said...

என் டி ராமாராவ் நடிகராவதற்கு முன் கிருஷ்ணகிரி ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பணிபுரிந்தார் என்பது தெரியுமா?

Anonymous said...

கிழிஞ்சுது கிஷ்ணகிரி என்று சொல்லுவதன் அர்த்தம் தான் என்ன )))

shrek said...
This comment has been removed by the author.
shrek said...

krishnaraja sagara is in karnataka. this is just KRP (Krishnagiri River Project) DAM.

or you can call it krishnagiri dam.

shanmugavel said...

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

உலகமறிந்த ரஜினிகாந்த்,ராஜாஜி எல்லாம் இந்த மாவட்ட்த்தில் பிறந்தவர்கள்.ரஜினிகாந்தின் அண்ணனை அடிக்கடி இங்கே பார்த்திருக்கிறேன்.இங்கே விளையும் மாம்பழத்தை சுவைக்காத உலக நாடுகள் குறைவு.கிரானைட் கற்களையும் நாடுகள் பார்த்திருக்கின்றன.பெரும்பாலான நாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி ஆகிறது.///

ரொம்ப ஆச்சரியமா இருக்கே ஸார்!

இதுல என்ன சார் ஆச்சர்யம்,இதுவரை தெரியாதா? நன்றி

shanmugavel said...

@shrek said...

krishnaraja sagara is in karnataka. this is just KRP (Krishnagiri River Project) DAM.

or you can call it krishnagiri dam.

ஆமாம் சார்,தவறாக வந்து விட்டது.நன்றி

shanmugavel said...

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

ஓசூருக்கு அருகில் தளி என்ற ஊர் இருக்கிறது.தொகுதியும் கூட!”லிட்டில் இங்கிலாந்து” என்று சொல்வார்கள்.பெரும்பாலான வீடுகளில் மின் விசிறியை பார்க்க முடியாது.இங்கிலாந்தில் நிலவும் தட்பவெப்ப நிலைதான் இங்கும்.காய்கறி,கீரைகள் அதிகம் பயிரிடுவார்கள்.விலையும் மிக குறைவு.ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.///

கண்டிப்பாக தளிக்குப் போயே ஆகணும் ஸார்!

யானை வரும் பரவாயில்லையா சார்!

Unknown said...

பல விஷயங்களை தெரிந்துகொண்டேன் நண்பா பகிர்வுக்கு நன்றி!

shanmugavel said...

@bandhu said...

என் டி ராமாராவ் நடிகராவதற்கு முன் கிருஷ்ணகிரி ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பணிபுரிந்தார் என்பது தெரியுமா?

இதுவரை தெரியாது சார்.நண்பர்களைக் கேட்டேன் உண்மைதானாம்.நன்றி

shanmugavel said...

@மாய உலகம் said...

கிளிஞ்சது கிருஷ்ணகிரி.... தெரியாமல் இருந்த விசயங்களை கிளிச்சு எறிந்துவிட்டது வாழ்த்துக்கள் நண்பா

நன்றி நண்பா!

shanmugavel said...

@கந்தசாமி. said...

கிழிஞ்சுது கிஷ்ணகிரி என்று சொல்லுவதன் அர்த்தம் தான் என்ன )))

கிழிஞ்சதுன்னு சொல்வாங்க,ஒரு எதுகை மோனைக்காக கிருஷ்ணகிரி சேத்துக்கறது.நன்றி சார்

சத்ரியன் said...

அதானே! இவ்வலவு பெருமைகளையுடைய கிருஷ்ணகிரியை எதுக்கு கிழிக்கிறாய்ங்க?

நம்ம ஆக்களோட எதுகை,மோனை -க்கு ஒரு அளவே இல்லாம போயிடுச்சி, பாருங்க.

bandhu said...

சேலத்து மாம்பழம் என்ற சொல்வழக்கு மிக பிரபலமானது. இது கூட, கிருஷ்ணகிரி ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த போது வந்த பெயர்தான்.

Sankar Gurusamy said...

நானும் சில ஆண்டுகள் ஓசூரில் வாழ்ந்திருக்கிறேன்.. தகவல்கள் அருமை.

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

bandhu said...

//இங்கிலாந்தில் நிலவும் தட்பவெப்ப நிலைதான் இங்கும்//
தளியின் தட்ப வெப்ப நிலை இங்கிலாந்து அளவு மோசமில்லை என்று நினைக்கிறேன். இங்கிலாந்தின் கிளைமேட் அவ்வளவு நல்ல கிளைமேட் அல்ல.

Yoga.s.FR said...

கிழிஞ்சுது கிருஷ்ணகிரி,அப்புடீன்னு சொல்லிச் சொல்லியே என்னமோ ஒண்ணுக்குமே லாயக்கில்லாத,ரெண்டுங்கெட்டான் ஊர் என்பது போல் ஆக்கி விட்டார்களே?பகிர்வுக்கு நன்றி!!!!!!

shanmugavel said...

@RAVICHANDRAN said...

ஓசூரில் ஊசி முதல் விமானம் வரை தயாரிக்கிறார்கள்.

ஆமாம்.சார் நன்றி

shanmugavel said...

@விக்கியுலகம் said...

பல விஷயங்களை தெரிந்துகொண்டேன் நண்பா பகிர்வுக்கு நன்றி!

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா!

shanmugavel said...

@சத்ரியன் said...

அதானே! இவ்வலவு பெருமைகளையுடைய கிருஷ்ணகிரியை எதுக்கு கிழிக்கிறாய்ங்க?

நம்ம ஆக்களோட எதுகை,மோனை -க்கு ஒரு அளவே இல்லாம போயிடுச்சி, பாருங்க.

பரவால்ல விடுங்க சத்ரியன்,நம்ம ஆளுங்க தானே!

shanmugavel said...

@bandhu said...

சேலத்து மாம்பழம் என்ற சொல்வழக்கு மிக பிரபலமானது. இது கூட, கிருஷ்ணகிரி ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த போது வந்த பெயர்தான்

ஆமாம்,இன்று கிருஷ்ணகிரிக்குத்தான் பொருந்தும் நீங்க கிருஷ்ணகிரியா?

shanmugavel said...

@Sankar Gurusamy said...

நானும் சில ஆண்டுகள் ஓசூரில் வாழ்ந்திருக்கிறேன்.. தகவல்கள் அருமை.

பகிர்வுக்கு நன்றி..

நானும்தான் சார்,நன்றி சங்கர்

shanmugavel said...

@bandhu said...

//இங்கிலாந்தில் நிலவும் தட்பவெப்ப நிலைதான் இங்கும்//
தளியின் தட்ப வெப்ப நிலை இங்கிலாந்து அளவு மோசமில்லை என்று நினைக்கிறேன். இங்கிலாந்தின் கிளைமேட் அவ்வளவு நல்ல கிளைமேட் அல்ல.

அப்படியா? ஓரளவுக்கு பொருந்திப்போகும் என்று சொல்லியிருப்பார்களோ? நன்றி.

shanmugavel said...

@Yoga.s.FR said...

கிழிஞ்சுது கிருஷ்ணகிரி,அப்புடீன்னு சொல்லிச் சொல்லியே என்னமோ ஒண்ணுக்குமே லாயக்கில்லாத,ரெண்டுங்கெட்டான் ஊர் என்பது போல் ஆக்கி விட்டார்களே?பகிர்வுக்கு நன்றி!!!!!!

நன்றி சார்.

shrek said...

sorry to disturb you again. This time i made a mistake. It is Krishnagiri "Reservoir" project, NOT "river"

[how silly of me, :) idhula naan correction panraenaamaaam, ha ha]

shanmugavel said...

@shrek said...

sorry to disturb you again. This time i made a mistake. It is Krishnagiri "Reservoir" project, NOT "river"

[how silly of me, :) idhula naan correction panraenaamaaam, ha ha]

பரவாயில்ல விடுங்க சார்,நன்றி

நிரூபன் said...

வணக்கம் பாஸ்...
கிருஷ்ணகிரிப் பிரதேசத்தின் மகிமையினையும்,
பதிவுலகில் நாமெல்லாம் எப்படிக் கிருஷ்ணகிரியினை யூஸ் பண்ணிக் கிண்டல் பண்றோம் என்பதையும் அழகாகத் தொகுத்து, மண்வாசனை கமழும் வண்ணம் பதிவிட்டிருக்கிறீங்க.