Tuesday, September 20, 2011

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்குக்கு முன்பும் பின்பும் அல்லது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு லேசாக வெள்ளைப்படுவது இயல்பானது.பலரும் இதை உடல் சூடாகி விட்ட்து என்பார்கள்.ஆனால் இது பால்வினை நோயாக இருப்பதற்கான நம்பிக்கை அதிகம்.
                                                
                               நிரூபன் வெள்ளைப்படுதலுக்கு எள்ளுருண்டை சாப்பிடலாம் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.எள்ளுருண்டை எனக்கு மிகவும் பிடித்த உணவுப் பண்டம்.உருண்டை பிடிக்க எளிதாக சில இடங்களில் அடை சுட்டும் இதில் சேர்ப்பார்கள்.நிலக்கடலை,பொட்டுக்கடலை,முந்திரி சேர்ப்பதும் உண்டு.சாப்பிட அப்படி ஒரு சுகம்.

                               வெள்ளைப்படுதல் உடல் சூட்டால் வருகிறது என்ற நம்பிக்கையொட்டி இந்த எள்ளுருண்டை சாப்பிடுவதும் ஏற்பட்டிருக்கலாம்.எள் குளிர்ச்சி என்று கருதுவதால் சாப்பிட ஆரம்பித்திருக்க வாய்ப்பிருக்கிறது.முன்பே சொன்னது போல சாதாரணமாக ஏற்படும் நீர்க்கசிவு தானாகவே சரியாகி விடும்.பால்வினை நோயாக இல்லாதவரை பிரச்சினை இல்லை.

                               வழக்கத்துக்கு மாறாக அதிக அளவிலோ,நமைச்சல் எரிச்சலுடனோ,துர்நாற்றத்துடனோ வெள்ளைப்படுதல் இருந்தால் அது நிச்சயம் பால்வினை நோய்.பாக்டீரியா,பூஞ்சை போன்ற நுண்ணியிரிகள்(micro organisms) ஒருவரிடமிருந்து ஒருவருக்கு தொற்றி இருக்கலாம்.உடல் சூடு போன்ற தவறான கருத்துக்களால் சிகிச்சைக்கு அணுகுவது குறைவாக இருக்கிறது.

இத்தைகைய நீர்க்கசிவை ஒரே வகையில் அடக்கிவிட முடியாது.அதே சமயம் எல்லாமும் பால்வினை நோயல்ல! கருப்பை சார்ந்த இடங்களில் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் உண்டாகும்.சுத்தமில்லாமல் இருந்தால் குழந்தைகளுக்கும் பரவும்.வெள்ளைப்படுதல் என்று பொதுவாக சொன்னாலும் அறிகுறிகளிலேயே வகைகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது வழக்கத்தில் இருக்கிறது.
                      
                               நமைச்சலுடன் வெள்ளைப்பட்டால் அது பூஞ்சைத்தொற்றாக (candidiasis)இருக்கலாம்.curdy type என்று சொல்வார்கள்.கெட்டியான திரவம் வெளியாகும்.துர் நாற்றத்துடன் வெளியாகும் நீர்க்கசிவு (டிரைகோமோனியாஸிஸ்)இன்னொரு வகை.கொனேரியா என்ற நோயில் சிறுநீர்க்கழிக்கும்போது கடுமையான வலியுடன் அல்லது சாதாரணமாக இருக்கலாம்.ஆண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் இந்நோயாகவும் இருக்கலாம்.ஆண்களுக்கு பழுப்பு நிறத்தில் திரவம் வெளியாகும்.

                               மேலே குறிப்பிட்ட கொனேரியா(இப்போது ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை என்று சொல்கிறார்கள்) தொற்றில் பழுப்பு நிற திரவம் வெளியாவது நின்றுவிடுவதும் சாத்தியம்.அப்போது நோய் குணமாகிவிட்ட்தாக நினைத்துக்கொள்வார்கள்.ஆனால் உண்மையல்ல! அறிகுறி இல்லாமல் நோய்த்தொற்று இருந்து கொண்டிருக்கும்.எள்ளுருண்டை தின்று நோய் குணமாகிவிட்ட்தாக நினைத்துக்கொள்வதன் விபரீதம் இப்போது புரிந்திருக்கும்.

                                 ஆண்கள் பலருக்கு கிருமித்தொற்று இருந்தாலும் அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை.அதனால் எனக்கு ஒன்றுமில்லை என்று சிகிச்சைக்கு மறுப்பார்கள்.ஆனால் காரணமே பெரும்பாலும் அவர்கள்தான்.இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டாலும் மீண்டும் தொற்று ஏற்படும்.பாதுகாப்பில்லாத பாலுறவு மூலம் இத்தகைய வியாதிகள் பரவுவதால் எய்ட்ஸ் தொற்றும் பாதிப்பும் இவர்களுக்கு அதிகம்.
-

27 comments:

SURYAJEEVA said...

அருமை,

K said...

என்னண்ணே சொல்றீங்க? நமக்கும் வருமா? இனி அலேர்ட்டா இருக்க வேண்டியதுதான்!

shanmugavel said...

@suryajeeva said...

அருமை,

நன்றி ஜீவா!

shanmugavel said...

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

என்னண்ணே சொல்றீங்க? நமக்கும் வருமா? இனி அலேர்ட்டா இருக்க வேண்டியதுதான்!

அப்போ இத்தன நாளு? ஹாஹா நன்றி

நிரூபன் said...

வணக்கம் பாஸ்
கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
வர முடியலை...

எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

மன்னிக்க வேண்டும்!

நிரூபன் said...

.உடல் சூடு போன்ற தவறான கருத்துக்களால் சிகிச்சைக்கு அணுகுவது குறைவாக இருக்கிறது//

ஆமாம் பாஸ்..
பொதுவாக வெள்ளைபடுதலுக்கான பிரதான காரணிகள் பங்கஸ்/ பக்டீரியாத் தொற்று என்று படித்திருக்கிறேன்.

இதற்குச் சிசிக்கை முறைகளை விட,
வினாகிரி (Vinegar) அல்லது தயிர் மூலம் பெண் உறுப்பினை தூங்கப் போக முன்னர் கழுவ வேண்டுமாம்.

இது தான் இந்தப் பிரச்சினைய முழுமையாக் குணப்படுத்தக் கூடிய ஒன்று என்று படித்திருக்கிறேன்.

இதனை விடக் கடைகளிலும் சில கிரீம் வகை மருந்துகள் கிடைக்கின்றவனாம்.

நிரூபன் said...

ஆண்களை அவதானமாக இருக்கச் சொல்லியிருக்கிறீங்க.

ஆண்களுக்கு வெள்ளைபடுதல் என்பது புதிய தகவலாக இருக்கிறது.

பகிர்விற்கு மிக்க நன்றி பாஸ்.

shanmugavel said...

@நிரூபன் said...

வணக்கம் பாஸ்
கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
வர முடியலை...

எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

மன்னிக்க வேண்டும்!

பரவாயில்லை நிரூபன்,நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

.உடல் சூடு போன்ற தவறான கருத்துக்களால் சிகிச்சைக்கு அணுகுவது குறைவாக இருக்கிறது//

ஆமாம் பாஸ்..
பொதுவாக வெள்ளைபடுதலுக்கான பிரதான காரணிகள் பங்கஸ்/ பக்டீரியாத் தொற்று என்று படித்திருக்கிறேன்.

இதற்குச் சிசிக்கை முறைகளை விட,
வினாகிரி (Vinegar) அல்லது தயிர் மூலம் பெண் உறுப்பினை தூங்கப் போக முன்னர் கழுவ வேண்டுமாம்.

இது தான் இந்தப் பிரச்சினைய முழுமையாக் குணப்படுத்தக் கூடிய ஒன்று என்று படித்திருக்கிறேன்.

இதனை விடக் கடைகளிலும் சில கிரீம் வகை மருந்துகள் கிடைக்கின்றவனாம்.

மருத்துவரிடம் செல்வதே சரியானது.

shanmugavel said...

@நிரூபன் said...

ஆண்களை அவதானமாக இருக்கச் சொல்லியிருக்கிறீங்க.

ஆண்களுக்கு வெள்ளைபடுதல் என்பது புதிய தகவலாக இருக்கிறது.

பகிர்விற்கு மிக்க நன்றி பாஸ்.

ஆமாம் நிரூபன் நன்றி

ஓசூர் ராஜன் said...

arumai sir vaalthukkal

Jana said...

நல்ல ஒரு பதிவு. ஆண்களுக்கு வெள்ளை படுதல் என்று சொல்வது கிடையாது அதற்கு வேறு ஒரு பெயர் உண்டு நினைவில் வரவில்லை. இதே போல மத்திய வயது ஆண்களுக்கு தொல்லை தருவதாக இருப்பது பைமோஸிஸ் எனப்படும், ஆண் குறியின் முன் தசை சுருக்கம், இதற்கும் சத்திர சிகிற்சை உடனடியாக தேவைப்படும் என்றும் படித்திருக்கின்றேன்.

RAVICHANDRAN said...

மருத்துவப்பதிவு அய்யா! ஆண்களுக்கும் இந்தமாதிரி வரும் என்று கேள்விப்பட்டதில்லை.

RAVICHANDRAN said...

//ஆண்கள் பலருக்கு கிருமித்தொற்று இருந்தாலும் அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை.//

பிறகு எப்படி தெரிந்து கொள்வது?

மாய உலகம் said...

புதிய விசயம்... நன்றி நண்பரே

shanmugavel said...

@ராஜன் said...

arumai sir vaalthukkal

நன்றி சார்

shanmugavel said...

@Jana said...

நல்ல ஒரு பதிவு. ஆண்களுக்கு வெள்ளை படுதல் என்று சொல்வது கிடையாது அதற்கு வேறு ஒரு பெயர் உண்டு நினைவில் வரவில்லை. இதே போல மத்திய வயது ஆண்களுக்கு தொல்லை தருவதாக இருப்பது பைமோஸிஸ் எனப்படும், ஆண் குறியின் முன் தசை சுருக்கம், இதற்கும் சத்திர சிகிற்சை உடனடியாக தேவைப்படும் என்றும் படித்திருக்கின்றேன்.

நன்றி ஜனா!

shanmugavel said...

@RAVICHANDRAN said...

மருத்துவப்பதிவு அய்யா! ஆண்களுக்கும் இந்தமாதிரி வரும் என்று கேள்விப்பட்டதில்லை.

ஆண்களுக்கும் வரும் அய்யா! நன்றி

shanmugavel said...

@RAVICHANDRAN said...

//ஆண்கள் பலருக்கு கிருமித்தொற்று இருந்தாலும் அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை.//

பிறகு எப்படி தெரிந்து கொள்வது?

மனைவிக்கு அறிகுறி இருந்தால் கணவனும் சிகிச்சை பெற வேண்டும்,பாதுகாப்பில்லாத உறவு இருந்திருந்தால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,நன்றி

shanmugavel said...

@மாய உலகம் said...

புதிய விசயம்... நன்றி நண்பரே

நன்றி நண்பா!

சத்ரியன் said...

தகவல் பகிர்வுக்கு நன்றிங்கண்ணே.

shanmugavel said...

@சத்ரியன் said...

தகவல் பகிர்வுக்கு நன்றிங்கண்ணே.

நன்றி சத்ரியன்.

சக்தி கல்வி மையம் said...

என்னது ஆண்களுக்குமா?!

shanmugavel said...

@Sankar Gurusamy said...

நல்ல தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றி..

நன்றி சங்கர்

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்னது ஆண்களுக்குமா?!

தாங்க்ஸ் வாத்யாரே!

பாலா said...

புதிய தகவல்.

shanmugavel said...

@பாலா said...

புதிய தகவல்.

நன்றி பாலா!