காட்டுமிராண்டி என்ற சொல்லை பண்படாதவனைக் குறிக்க
பயன்படுத்துகிறோம்.மனிதனுக்குத் தோன்றும் உணர்ச்சிகளை அவன் எதிர்கொள்ளும்
விதத்தைப் பொருத்து அவனது தகுதி நிலை அமைகிறது.பல்வேறு
அனுபவங்கள்,படிப்பு,குடும்பம் இவையெல்லாம் உணர்ச்சிகளை மேலாண்மை செய்வதில் பங்கு
வகிக்க்க்கூடும்.
நண்பர் ஒருவர் அந்த வாடகை வீட்டிலிருந்து அவசரமாக காலி செய்தார்.ஒரு
மாதம் வாடகைக்கு இன்னும் பத்துநாட்கள் அங்கே இருந்திருக்காலாம்.வீட்டின்
பக்கத்தில் உள்ளவர்கள் எப்போதும் சண்டைபிடித்துக்கொண்டு இருந்தார்கள்.மோசமான
வசவுச் சொற்களை பயன்படுத்தினார்கள்.காட்டுத்தனமாக கத்துகிறார்கள் என்று சொன்னார்.
ஆதியில் மனிதன் கட்டுப்பாடில்லாமல் உணர்ச்சிகளை
வெளிப்படுத்தினான்.வலி ஏற்பட்டால் பெருங்குரலெடுத்து கத்தியிருகக்க்கூடும்.கிட்டத்தட்ட
மிருகங்களைப்போல இருந்திருக்கும்.அங்கே உணர்ச்சிகள்மீது மேலாண்மை எதுவும்
இல்லை.பண்படாத நிலை என்று அவற்றைச் சொல்கிறோம்.குழந்தைநிலை போன்றதொரு காலம் அது.
பொதுவாக நாம் அடையாளம் காணும் பைத்தியம் என்ற
நிலை மிகை உணர்ச்சி நிலைதான்.திரைப்படங்கள்,நாடகங்கள் என்றால் மனநிலை
பாதிக்கப்பட்டவர்களை அப்படித்தான்
காட்டுவார்கள்.அதிகமாக சிரித்தால்,அழுதால்,கவலைப்பட்டால் பைத்தியம் போல
என்று சொல்கிறோம்.தானாக சிரித்தால் அவர் கவனிக்கப்படவேண்டிய ஆளாக இருப்பார்.
உணர்ச்சிகளை மேலாண்மை செய்யும் மனிதனை
பண்பட்டவன் என்று சொல்லலாம்.ஆத்திரத்தில்,கோபத்தில் கத்துபவர்களை விட்டு விலகவே
விரும்புகிறோம்.உண்மையான அறிவு என்பது உணர்வுகளை முறையாக வெளிப்படுத்துவதைக்
குறிக்கிறது.அவை யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும்.ஒருவரது
மிகச்சிறந்த தகுதியாக இதைக்கருதலாம்.
மேலாண்மை செய்ய அவற்றின்மீது நமக்கு கவனம்
வேண்டும்.பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள்,சூழல்கள்,வெளிப்பாடு போன்றவற்றை இலக்கியம்
கற்றுத்தர முடியும்.நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளையும் அவை ஏற்படுத்தும்
பாதிப்பையும் உணரும்போது மற்றவர்களின் உணர்வுகளையும் நம்மால்
புரிந்துகொள்ளமுடியும்.
உங்களுடைய உணர்ச்சிகளை குறித்து
வைத்துக்கொள்ளுங்கள்.அந்த உணர்ச்சி ஏற்படக்காரணமான நிகழ்வுகளை கண்டறியுங்கள்.உங்களிடம்
உருவான எண்ணங்கள் உங்களுக்குத்தெரியவரும்.பல வேண்டாத உணர்ச்சிகளுக்கு எதிர்மறையான(Negative)
எண்ணமோ,நடைமுறைக்கு ஒவ்வாத(irrational) எண்ணமோ காரணமாக இருக்கும்.விரும்பத்தகாத
நடத்தைகளுக்குக் காரணம் இவைதான்.
நம்மை அலைக்கழிக்கும் எதிர் உணர்ச்சிகளுக்குக்
காரணம் எண்ணங்களின் சீரற்றநிலைதான்.மறைமுகமாக அறிவில்லாத மடத்தனம் என்றும் சொல்லலாம்.ஒப்புக்கொள்ள
நமக்கு கஷ்டமாக இருக்கும்.எதிர்மறையான,அறிவுக்குள் அடங்காத எண்ணங்களை நாம்
அடையாளம் காணவேண்டும்.சில நேரங்களில் நிபுணர்களின் உதவி தேவைப்படலாம்.
நாம் நினைத்தது எல்லாம் உண்மையாக இருந்ததேயில்லை.அதனால்
ஏற்பட்ட உணர்ச்சிகளின் பாதிப்பு ஏற்படுத்திய கஷ்டங்கள்தான் அதிகம்.சந்தேக
எண்ணங்கள் தீவிர உணர்ச்சியைக் கிளறிவிடுகின்றன.தானும் பாதிக்கப்பட்டு
மற்றவர்களையும் சிதைத்துவிடுகிறது.உணர்ச்சிகளைக்கவனிக்கப் பழகுவது அவற்றை மேலாண்மை
செய்வதற்கு முதல்படி.
7 comments:
நாம் இயல்பாய் இருந்தாலே பல பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்
இங்கு பலபேர் தன்னுடைய குனங்களால் மிருகங்களாகவே இருக்கிறார்கள்...
இயல்பான நிலைக்கு திரும்ப மனித குலம் இன்னும் பண்படவேண்டும்
அற்புத பதிவு இது நன்றி..
ஆழமான சிந்தனையுடன் கூடிய
அற்புதப் பதிவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
உணர்வுகளையும் உணர்சிகளையும்
அடக்குதல் ஆளுமையின் பண்பென
விளம்பியிருக்கும் அருமையான படைப்பு நண்பரே..
மனிதன் பாதி - மிருகம் பாதி = மனிதன்
ஆழமான அறிவியல் கருதத்ுக்களை மிக எளிமையான சொற்களில் தந்தமைக்கு நன்றி. c
Post a Comment