Showing posts with label ஆபாசம். Show all posts
Showing posts with label ஆபாசம். Show all posts

Sunday, October 30, 2011

இணைய மையங்கள் அடல்ட்ஸ் ஒன்லியா?

 இணைய மையங்களை காவல்துறையினர் அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.சமூக விரோதிகள் பிரௌசிங் சென்டர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன.நிறைய கட்டுப்பாடுகள்.வாடிக்கையாளர்களின் அடையாள அட்டை சரிபார்ப்பதிலிருந்து கேமரா வைப்பது வரை .பலர் முணுமுணுத்துக்  கொண்டிருக்கிறார்கள்.


இணைய மையங்கள் கால் வைக்கவே கூசுகிறது என்று நண்பர் புலம்பினார்.ஒரு வேளை சுத்தமில்லாமல் பேச்சுலர் ரூம் போல இருந்திருக்கும் என்று நினைத்தேன்.(ஒரு நாளைக்கு மூன்று முறை அறையை சுத்தம் செய்து அற்புதமாக சமைக்கும்பிரம்மச்சாரிகளையும்  நான் பார்த்திருக்கிறேன்.) காலையிலேயே புலம்புகிறானே என்று நினைத்துக் கொண்டு என்னே ஏதென்று விசாரித்தேன்.
மாமியார் வீட்டுக்கு போன இடத்தில் ஒரு பிரௌசிங் சென்டருக்கு போயிருக்கிறான்.அவனுடைய எட்டு வயது மகளும் கூடவே !என்னுடைய பதிவை திறந்து படிக்க ஆரம்பிக்க,அவருடைய மகள் ஆபாச இணைய தளங்களின் பெயர்களை வரிசையாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.நண்பர் ஆடிப் போய்விட்டார்.


அதிர்ச்சியுடன் மகளைப் பார்த்தால் சுவர்களில்,கேபினில் எழுதி வைத்திருப்பதை காட்டியிருக்கிறார்.ஆபாச இணையதள ரசிகர்கள் தளம் மறக்காமலிருக்க எழுதி வைத்துக் கொள்வார்கள் என்று தோன்றியது.நானும் சில இடங்களில் பார்த்திருக்கிறேன்.ஆனால் இணைய மையம் வைத்திருக்கும் ஒருவர் இன்னொரு விஷயத்தை சொன்னார்.சில மையங்களின் முதலாளிகளே அப்படி எழுதி வைத்து விடுவதும் உண்டு என்கிறார்.
ஆர்வத்தில் பார்க்க ஆரம்பித்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பது எண்ணம்.பேசாமல் அடல்ட்ஸ் ஒன்லி என்று போட்டு விடலாம்.இன்னும் சில மையங்கள் காதலர்களுக்கு உகந்த இடமாகவும் இருந்து கொண்டிருக்கிறது.எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை இருந்து கொண்டிருக்கிறது.

ஒரு  குறிப்பிட்ட மையத்திலிருந்து அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் மெயில் போய்விட்டது.காவல்துறையினர் விசாரிக்க வந்தார்கள்.அன்று சர்வர் மோசமாக இருந்ததால் மொத்தமாக மூன்றுபேர் தான் வந்திருந்தார்கள்.எளிதாக ஆளை பிடித்து விட்டார்கள்.அப்போதிருந்து ரகசியமாக கேமரா பொருத்திவிட்டார்.வாடிக்கையாளர்களுக்கு கூட தெரியாது.தனித்தனி கேபின்கள் இல்லாமல் மையங்கள் இருந்தால் இம்மாதிரி பிரச்சினைகள் குறையும்.
இன்று இன்டர்நெட் தேவை அதிகரித்துவிட்ட நிலையில் பெண்கள் ,குழந்தைகள் என்று பலரும் மையங்களை அணுகும் நிலை இருக்கிறது.மையம் நடத்துபவர்கள் இதை உணர்ந்து கால் வைக்க கூசாத இடமாக வைப்பது அவசியம்.
-

Friday, September 9, 2011

பதிவுலகமும் ஆபாசமும்


யாரோ புதிய பதிவராம்.ஐடியா மணி என்று பெயர்.அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் என்னை ‘நீங்க நல்லா இருக்கணும் சண்முகவேல் சார்என்று சொல்வாரா? நிரூபன் என்னை தன் பதிவில் அறிமுகப்படுத்திய பதிவில் அவர் சொன்னது.ஆண்டாள் பாசுரங்களையெல்லாம் விமர்சித்து ஒரு பதிவு எழுதி விட்டார்.வழக்கமாக பதிவுகளில் இம்மாதிரி பார்க்கும்போது நான் விமர்சிப்பதில்லை.இவர் நல்ல ஆளாச்சே! ஏதோ சகவாசதோஷம் என்று எதிர்பதிவு எழுதுவதாக சொல்லிவிட்டேன்.

கவர்ச்சி,ஆபாசம் என்று பதிவுலகில் காரசாரமாக தனக்குத் தெரிந்த்தை எழுதி வருகிறார்கள்.ஆபாசம் என்றால் என்ன என்பது பற்றி முன்பே பதிவில் குறிப்பிட்டு விட்டேன். வார்த்தைகளோ,படைப்போ,புகைப்படமோ அல்லது படக்காட்சியோ மனதில் பாலுணர்வை ஏற்படுத்தினால் அது ஆபாசம்.

                             சினிமாக்களில் கற்பழிப்பு காட்சி இடம்பெறுவதுண்டு.பல திரைப்படங்களிலும் அதன் நோக்கம் ஆபாசம்தான்.சினிமாவை சிறந்த கலையாக கையாளும் இயக்குனர்கள் படங்களில் கற்பழிப்பு காட்சி இருக்கும்.ஆனால் அக்காட்சி பரிதாபத்தையும்,பாதிக்கப்படும் பெண்ணின் மீது பரிவையும் தூண்டுமே தவிர கிளர்ச்சியைத்தருவதில்லை.

                               ஆண்டாளின் பாசுரங்களும் அப்படித்தான்.படிப்பவர்களுக்கு கிளர்ச்சியை தூண்டாது,ஆண்டாள் பாசுரம் பக்தி இலக்கியம்.இலக்கியங்களில் வார்த்தைகளின் நோக்கம் வேறு.முன்பே குறிப்பிட்ட்து போல இலக்கியம் என்ன உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை வைத்து அதன் தகுதி தீர்மானிக்கப்படுகிறது.உலகின் சில திரைப்படங்களும்,நாவல்களும் ஆபாசம் என்று தடை செய்யப்பட்டு கலை, இலக்கியத்தகுதி காரணமாக தடை நீக்கப்பட்ட்துண்டு.

                             மணி எதற்காக ஆண்டாளைப் பற்றி விமர்சிக்கிறார்? ஏன் கில்மா பதிவுகளை பெண்களிடம் எதிர்பார்க்கிறார்? இந்த பதிவின் நோக்கமென்ன? இன்று கலாச்சார காவலர்களை விமர்சிப்பவர்கள் யார்? அவர்களின் நோக்கமென்ன? பெண்களுக்கு சப்போர்ட் செய்து ஹீரோ ஆகலாம் என்று பார்க்கிறீர்களா என்பது ஏன்?

                              பெண்களுக்கு சப்போர்ட் செய்து எழுதி விட்டால் ஹீரோ ஆகிவிடலாம் என்பது உண்மையா? அப்படி யாராவது மணிரத்னம் பட்த்துக்கோ,தங்கர் பச்சான் பட்த்துக்கோ ஹீரோ ஆகி இருக்கிறார்களா? நான் பல பதிவுகளை அப்படி எழுதியதுண்டு.அடுத்த சில பதிவுகளுக்கு ஹிட்ஸ் குறையுமே தவிர ஹீரோ மட்டும் ஆகவில்லை.ஆனாலும் எழுதுவதை தவிர்க்க முடியாது.அது பாரதியிடமிருந்து பெற்ற மதிப்பீடு!

                               கில்மா என்பது கவர்ச்சிப்பட்த்தை குறிக்கிறதா? அரைநிர்வாண பட்த்தை குறிக்கிறதா? எனக்கு தெரியாது.கவர்ச்சி உணர்வுகளைத் தூண்டும் என்று பிரபல பதிவர் நிரூபன் சொல்கிறார்.அப்படியானால் ஆபாசம்தானே! ஆபாச பதிவுகள் என்ன நோக்கத்திற்காக பதிவுலகில் எழுதப்படுகிறது.ஆபாசத்தை எதிர்ப்பவர்கள் கலாச்சார காவலர்கள் என்றால் அதை தூக்கிப்பிடிப்பவர்கள் கலாச்சாரம் இல்லாத ஆட்களா?

                                                                      ஆபாச சொற்களை எழுதுவதில்,வரைவதில் ஆர்வம் உள்ளவர்களை கோப்ரோலாலியா(Corprolalia)  என்று சொல்வார்கள்.சில முற்றிய மனநோய்களிலும்,முதிர்ச்சி அடையாதவர்களிடமும் இந்நிலை இருக்கும்.இவர்கள் ஆலோசனையும்,சிகிச்சையும் பெறவேண்டியவர்கள்.

                            பெண்கள் சிக்ஸ்பேக்கை விரும்புகிறார்கள் என்று யார் சொன்னது? விரும்பினால்தானே அதைப்பற்றி எழுதமுடியும்? ஆண்களைப்போல பெண்கள் உடலைப்பார்ப்பதில்லை என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.தாமரை பட்த்தின் காட்சிக்குத் தகுந்தவாறு பாடல் எழுதலாம்.பதிவர்கள் அதை செய்யுங்கள்,இதை எழுதுங்கள் என்ற ஐடியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களா? அவரவர்களுக்கு தெரிந்ததை எழுதுகிறார்கள்.
-

Wednesday, May 18, 2011

ஆபாச இலக்கியம்-ஒரு பார்வை

அதிகமாக விற்பனை ஆகும் புத்தகங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் ஆபாச புத்த்கங்களும்,சோதிட புத்தகங்களும் இருக்கும்.நம் நாட்டில் இதுதான் நிலை.வெளியே தெரியாமல் அதிகம் பரபரப்பாக விற்றுத் தீர்ந்துவிடும்.டீனேஜ் ஆண்மகன்கள் இதன் வாசகர்கள்.

                         நான் ஆபாசமாக நடிக்கவில்லை.கவர்ச்சியாக நடிக்கிறேன்.நடிகைகளின் பிரபலமான வார்த்தைகள் இவை. இது யார் கண்டுபிடித்த்து என்று  தெரியவில்லை.கவர்ச்சியென்றால் என்னவென்பது கொஞ்சம் புரியாத விசயம்தான்.


                              ஆபாசம் என்பது எளிதில் இனம் காண முடியும்.ஒரு காட்சியோ,உரைநடையோ,படைப்போ உங்களிடம் பாலுணர்வை தூண்டினால் அது ஆபாசம்.பாலுணர்வு தூண்டப்படும்போது மனிதனில் ஏற்படும் இன்ப நிலை அதை விரும்பவைக்கின்றன.

                              உலகெங்கும் ஆபாச புத்தகங்கள் குறிப்பிட்ட் வயதினிர் இடையே பிரபலமாக இருக்கிறது..வேறு வழியில்லை.அவர்களுக்கு யாரும் அதற்கென்று பாட்த்திட்டம் வைத்து சொல்லித்தர முடியாது.சில நாடுகளில் பாலியல் கல்வியும் இருக்கிறது.அதன் சாதக,பாதகங்கள் பற்றி விவாதங்கள் இருக்கின்றன.

                              வளரிளம் பருவத்தில் ஒரு இளைஞனுக்கு வரும் சந்தேகங்களை எப்படித்தான் தீர்த்துக் கொள்வது? அவன் அரைகுறையுமான சம வயது நண்பர்கள்,அல்லது கல்லூரியில் மூத்தவர்களிடம்கூட கேட்பதில்லை என்கிறது ஒரு ஆய்வு.அவன் ஆபாச புத்தகங்களை நாடி இருக்கிறான்.

                             அந்த வயது இளைஞர்களை பொருத்தவரை நம் சமூகத்தைப்போலவே பாலுணர்வு குற்றமானது.வெளியில் யாரிடமும் கேட்கும் விஷயம் அல்ல! அதனால் ரகசியமாக புத்த்கம் மூலம் எதையாவது தெரிந்து கொள்ளவிரும்புகிறான்.

                             மனிதனில் பசி போன்ற இயற்கையான ஒரு உணர்வு எப்படி குற்றமானது?அவனுடைய உணர்வுகளையும் அது தொடர்பான சந்தேகங்களையும் என்னதான் செய்வது? தெரியாது என்பதுதான் பதில்.ஆபாச இலக்கியமும்,படங்களும் சக்கைப்போடு போடுவது இதனால்தான்.

                              உண்மையில் வளரிளம் பருவத்து இளைஞன் ரகசியமாகவே என்னென்னவோ செயல்களில் ஈடுபட்டு மன் அழுத்த சூழ்நிலைகளால் படிப்பிலும்,செயல்களிலும் கவனம் சிதறி வாழ்க்கையை இழப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

                              பாலியல் கல்வி, பருவ வயது ஆலோசகர்களை கல்லூரி,பள்ளிகளில் நியமனம் செய்வது போன்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட போதும் இன்னும் அதில் ஒரு அடி கூட தாண்டவில்லை.நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
-