Showing posts with label pornography. Show all posts
Showing posts with label pornography. Show all posts

Wednesday, May 18, 2011

ஆபாச இலக்கியம்-ஒரு பார்வை

அதிகமாக விற்பனை ஆகும் புத்தகங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் ஆபாச புத்த்கங்களும்,சோதிட புத்தகங்களும் இருக்கும்.நம் நாட்டில் இதுதான் நிலை.வெளியே தெரியாமல் அதிகம் பரபரப்பாக விற்றுத் தீர்ந்துவிடும்.டீனேஜ் ஆண்மகன்கள் இதன் வாசகர்கள்.

                         நான் ஆபாசமாக நடிக்கவில்லை.கவர்ச்சியாக நடிக்கிறேன்.நடிகைகளின் பிரபலமான வார்த்தைகள் இவை. இது யார் கண்டுபிடித்த்து என்று  தெரியவில்லை.கவர்ச்சியென்றால் என்னவென்பது கொஞ்சம் புரியாத விசயம்தான்.


                              ஆபாசம் என்பது எளிதில் இனம் காண முடியும்.ஒரு காட்சியோ,உரைநடையோ,படைப்போ உங்களிடம் பாலுணர்வை தூண்டினால் அது ஆபாசம்.பாலுணர்வு தூண்டப்படும்போது மனிதனில் ஏற்படும் இன்ப நிலை அதை விரும்பவைக்கின்றன.

                              உலகெங்கும் ஆபாச புத்தகங்கள் குறிப்பிட்ட் வயதினிர் இடையே பிரபலமாக இருக்கிறது..வேறு வழியில்லை.அவர்களுக்கு யாரும் அதற்கென்று பாட்த்திட்டம் வைத்து சொல்லித்தர முடியாது.சில நாடுகளில் பாலியல் கல்வியும் இருக்கிறது.அதன் சாதக,பாதகங்கள் பற்றி விவாதங்கள் இருக்கின்றன.

                              வளரிளம் பருவத்தில் ஒரு இளைஞனுக்கு வரும் சந்தேகங்களை எப்படித்தான் தீர்த்துக் கொள்வது? அவன் அரைகுறையுமான சம வயது நண்பர்கள்,அல்லது கல்லூரியில் மூத்தவர்களிடம்கூட கேட்பதில்லை என்கிறது ஒரு ஆய்வு.அவன் ஆபாச புத்தகங்களை நாடி இருக்கிறான்.

                             அந்த வயது இளைஞர்களை பொருத்தவரை நம் சமூகத்தைப்போலவே பாலுணர்வு குற்றமானது.வெளியில் யாரிடமும் கேட்கும் விஷயம் அல்ல! அதனால் ரகசியமாக புத்த்கம் மூலம் எதையாவது தெரிந்து கொள்ளவிரும்புகிறான்.

                             மனிதனில் பசி போன்ற இயற்கையான ஒரு உணர்வு எப்படி குற்றமானது?அவனுடைய உணர்வுகளையும் அது தொடர்பான சந்தேகங்களையும் என்னதான் செய்வது? தெரியாது என்பதுதான் பதில்.ஆபாச இலக்கியமும்,படங்களும் சக்கைப்போடு போடுவது இதனால்தான்.

                              உண்மையில் வளரிளம் பருவத்து இளைஞன் ரகசியமாகவே என்னென்னவோ செயல்களில் ஈடுபட்டு மன் அழுத்த சூழ்நிலைகளால் படிப்பிலும்,செயல்களிலும் கவனம் சிதறி வாழ்க்கையை இழப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

                              பாலியல் கல்வி, பருவ வயது ஆலோசகர்களை கல்லூரி,பள்ளிகளில் நியமனம் செய்வது போன்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட போதும் இன்னும் அதில் ஒரு அடி கூட தாண்டவில்லை.நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
-

Saturday, April 23, 2011

இணையத்தால் கற்பழிப்புகள் அதிகரிக்கிறதா?


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு சாபக்கேடு.ஆண்டுதோறும் தொடர்ந்து இவை அதிகரித்து வருகின்றன.1990-ஆம் ஆண்டு 9518 ஆக இருந்த கற்பழிப்புகளின் எண்ணிக்கை 2009-ல்   21397 ஆக அதிகரித்துள்ளது.தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம் இது.

                            பெருநகரங்களில்தான் கற்பழிப்புகளும்,பெண்களுக்கெதிரான குற்றங்களும் மலிந்துள்ளன.பல வல்லுநர்களும் நகரமயமாதலை முக்கிய காரணமாக சொல்கிறார்கள்.பணி காரணமாக பெண்கள் தனியாக வாழ்வது நகரங்களில் அதிகம்.குறிப்பிட்ட வயதில் உள்ள ஆண்களும்  அதிகம்.

                            வீட்டைவிட்டு வெளியில் தங்கி பணிபுரியும் ஆண்களிடம் சகவாசம் காரணமாக போதைப்பழக்கங்கள் உள்பட பல்வேறு சீரழிவுகள்.இந்தியாவில் குற்றங்களின் தலைநகரமாக டெல்லியே முதலிட்த்தில் இருக்கிறது.ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான சமூக தொடர்பில்லாத நிலையில் இன்னொரு மனிதனை மிருகமாகவே கருதுகிறார்கள்.

                             அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ள தாதாக்களும் அவர்களது அடியாட்களும் இம்மாதிரியான குற்ற நிகழ்வுகளில் பெரிதும் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.ஈவ் டீசிங்,கட்த்தல்,பாலியல் தொல்லைகளும் இவர்களால் நாள்தோறும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

                             பத்தாண்டுகளில் அதிகரித்துள்ள இன்னொரு விஷயம் இணையம்.தியேட்டர்களில் பிட்டுப்படங்களுக்கு தயங்கி தயங்கி போய்க் கொண்டிருந்தவர்களுக்கு இன்று இருபது ரூபாயில் ஒருமணி நேரம் ஆபாசபடம் பார்க்கலாம்.நகரங்களில் பெரும்பாலான பிரௌசிங் செண்டர்களில் முக்கியமான முகவரி போன்று ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.ஆபாசமும்,போதையும் சேரும்போது விளைவுகள் மோசமாகின்றன.

                               புள்ளிவிவரங்களை தாண்டி பல கற்பழிப்புகள் மூடி மறைக்கப்பட்டு விடுவதுதான் அதிகம்.வெளியில் தெரிந்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கை போய்விடும் என்ற பயத்தால் தடுக்கப்பட்டன.ஓரளவு கல்வியறிவு காரணமாக இப்போது வழக்கு பதிவாவது அதிகரித்திருக்கிறது.எண்ணிக்கை அதிகம் காணப்படுவதற்கு இதுவும் காரணம்.

                               இன்னொரு வகை கற்பழிப்புகள் சுத்தமாக மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.அவை நெருங்கிய உறவினர்களால் நடக்கும் கொடூரங்கள்.தனது அக்காள் கணவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப்பற்றி வேறொரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.எப்போதும் இதெல்லாம் வெளியில் வராது.இந்த வகை கற்பழிப்புகள் அதிகம்.

                               குழந்தைகளுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகளும் நெருங்கிய உறவினர்களாலும்,தெரிந்தவர்களாலும்தான் நடக்கின்றன்.52 சதவீத குழந்தைகள் பாதிக்க்ப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.தொழில்நுட்பம் மேம்பட்ட அளவுக்கு இன்னும் மனம் மேம்படவில்லை என்பது கவலை தரும் ஒன்று.
-