நான் ஆபாசமாக நடிக்கவில்லை.கவர்ச்சியாக நடிக்கிறேன்.நடிகைகளின் பிரபலமான வார்த்தைகள் இவை. இது யார் கண்டுபிடித்த்து என்று தெரியவில்லை.கவர்ச்சியென்றால் என்னவென்பது கொஞ்சம் புரியாத விசயம்தான்.
ஆபாசம் என்பது எளிதில் இனம் காண முடியும்.ஒரு காட்சியோ,உரைநடையோ,படைப்போ உங்களிடம் பாலுணர்வை தூண்டினால் அது ஆபாசம்.பாலுணர்வு தூண்டப்படும்போது மனிதனில் ஏற்படும் இன்ப நிலை அதை விரும்பவைக்கின்றன.
உலகெங்கும் ஆபாச புத்தகங்கள் குறிப்பிட்ட் வயதினிர் இடையே பிரபலமாக இருக்கிறது..வேறு வழியில்லை.அவர்களுக்கு யாரும் அதற்கென்று பாட்த்திட்டம் வைத்து சொல்லித்தர முடியாது.சில நாடுகளில் பாலியல் கல்வியும் இருக்கிறது.அதன் சாதக,பாதகங்கள் பற்றி விவாதங்கள் இருக்கின்றன.
வளரிளம் பருவத்தில் ஒரு இளைஞனுக்கு வரும் சந்தேகங்களை எப்படித்தான் தீர்த்துக் கொள்வது? அவன் அரைகுறையுமான சம வயது நண்பர்கள்,அல்லது கல்லூரியில் மூத்தவர்களிடம்கூட கேட்பதில்லை என்கிறது ஒரு ஆய்வு.அவன் ஆபாச புத்தகங்களை நாடி இருக்கிறான்.
அந்த வயது இளைஞர்களை பொருத்தவரை நம் சமூகத்தைப்போலவே பாலுணர்வு குற்றமானது.வெளியில் யாரிடமும் கேட்கும் விஷயம் அல்ல! அதனால் ரகசியமாக புத்த்கம் மூலம் எதையாவது தெரிந்து கொள்ளவிரும்புகிறான்.
மனிதனில் பசி போன்ற இயற்கையான ஒரு உணர்வு எப்படி குற்றமானது?அவனுடைய உணர்வுகளையும் அது தொடர்பான சந்தேகங்களையும் என்னதான் செய்வது? தெரியாது என்பதுதான் பதில்.ஆபாச இலக்கியமும்,படங்களும் சக்கைப்போடு போடுவது இதனால்தான்.
உண்மையில் வளரிளம் பருவத்து இளைஞன் ரகசியமாகவே என்னென்னவோ செயல்களில் ஈடுபட்டு மன் அழுத்த சூழ்நிலைகளால் படிப்பிலும்,செயல்களிலும் கவனம் சிதறி வாழ்க்கையை இழப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
பாலியல் கல்வி, பருவ வயது ஆலோசகர்களை கல்லூரி,பள்ளிகளில் நியமனம் செய்வது போன்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட போதும் இன்னும் அதில் ஒரு அடி கூட தாண்டவில்லை.நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.


