Showing posts with label school. Show all posts
Showing posts with label school. Show all posts

Wednesday, July 13, 2011

மாணவிகள் வகுப்பறையில் கண்டெடுத்த பீர்பாட்டில்


அதிர்ச்சி என்று தலைப்பில் போடவேண்டுமா என்ன? தலைப்பே அப்படித்தான் இருக்கிறது.எனக்கும் கேட்டபோது அப்படித்தான் இருந்த்து.இப்போதுதான் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தவெளிமாவட்ட நண்பர் ஒருவர் துணைவியார் தெரிவித்த விஷயம் இது.

                                 மிகவும் பிரபலமான் மகளிர் மேல்நிலைப்பள்ளி அது. காலையில் வழக்கம்போல பள்ளியை சுத்தம் செய்தவர்கள் குப்பைக்கூடையில் இரண்டு பீர்பாட்டில்கள் இருந்த்தை பார்த்திருக்கிறார்கள்.ஆயா பள்ளி முதல்வரிடம் கொண்டு வந்து பதினொன்றாம் வகுப்பில் ஒரு பிரிவில் இருந்த்தாக ஒப்படைத்துவிட்டார்.

                                 தலைமை ஆசிரியர் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து பதறியிருக்கிறார்.குறிப்பிட்ட வகுப்பறைக்கு சில ஆசிரியைகலுடன் ஓடியிருக்கிறார்கள்.அதிரடி விசாரணை.மிரட்டல்.நீங்களே ஒப்புக்கிட்டா,மன்னித்து விட்டுவிடுவோம்’’ ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.

                                  தனித்தனியாக ஒவ்வொரு மாணவியையும் அழைத்து விசாரணை நட்த்தியிருக்கிறார்கள்.இதில் ஒரு மாணவி உண்மையைப்போட்டு உடைத்து விட்டார்.யார் கொண்டு வந்த்து என்று தெரிந்துவிட்ட்து.தலைமை ஆசிரியருக்கு அம்மாணவியை கண்டிப்பதா,வேண்டாமா என்று தர்ம சங்கடம்.நகரின் பிரபல வணிகர் ஒருவரின் மகள்.அரசியல் செல்வாக்கு உடையவர்.

                                  மேலும்மேலும் அம்மாணவியை விசாரித்த்தில் வெளிவந்த விஷயம்,வீட்டு ஃப்ரிட்ஜில் நிறைய பீர்பாட்டில்கள் உண்டு.அப்பாவும்,அண்ணனும் ஒன்றாக சேர்ந்தும் குடிப்பார்கள்.பீர் ஒன்றும் போதயில்லை என்று வேறு சொல்லிக்கொள்வார்கள்.மாணவிக்கும் குடித்துப்பார்க்கவேண்டும் என்று ஆசை வந்துவிட்ட்து.தனியாக குடிக்க விரும்பவில்லை.இரண்டு பாட்டிலை வகுப்புக்கு எடுத்து வந்து விட்டார்.

                                   வகுப்பில் உள்ள தனது தோழிகளை குடிக்கச்சொல்லி கேட்டிருக்கிறார்.ஆனால் எந்த மாணவியும் ஒப்புக்கொள்ளவில்லை.இது போதை கிடையாது,குளிர்ச்சி,எங்கள் வீட்டில் நிறைய இருக்கிறது என்று சொல்லிப்பார்த்திருக்கிறார்.உடன் இருப்பவர்களுக்கு விருப்பமில்லை.பயந்து விட்டார்கள்.அவரும் குடிக்கவில்லை.விளையாட்டாக குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்கள்.

                                   பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி அவர்.டீனேஜ் என்பது எதையும் முயற்சி செய்து பார்க்கும்.வீட்டில் முன்மாதிரிகள் இருக்கும்போது விபரீதம் தெரியாத விளையாட்டாகிவிடுகிறது.ஒரு வழியாக பள்ளி தாளாளர் வழியாக அம்மாணவியின் தந்தைக்கு விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள்.அவருக்கு புரிந்திருக்க வேண்டும்.

                                   கிராமங்களில் மது வாங்கிவர,பீடி சிகரெட் வாங்கிவர பிள்ளைகளை அனுப்பும் தந்தைகளை பார்த்திருக்கிறேன்.அவர்கள் நாகரீகம் இல்லாத மனிதர்களாக தோன்றும்.வீட்டையே பார் ஆக்குபவர்களை என்ன சொல்வது? எனக்கென்னவோ காலப்போக்கில் மது டீ,காபி போல ஆகிவிடும் என்று தோன்றுகிறது.(இப்போ மட்டும் என்னவாம்?)
-

Sunday, February 13, 2011

ஆசிரியருக்கு திட்டுவது அடிப்பது தவிர வழியில்லையா?


சரியாக படிக்காத மாணவனை திட்டாமல் அடிக்காமல் என்னதான் செய்வதென்று கேட்கிறார்கள்.திட்டியதானாலேயே மாணவனோ,மாணவியோ பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் உண்டு.ஆசிரியர்களால் பாதிக்கப்பட்டு மாணவ,மாணவிகள் தற்கொலை செய்வது பற்றி தனி பதிவு எழுதும் எண்ணம் இருப்பதால் திட்டுவது,அடிப்பது பற்றி மட்டும் பார்ப்போம்.

துவக்கப்பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி பள்ளி முடிந்து வழியில் அழுதுகொண்டே சென்று கொண்டிருந்தாள்.உங்களை மாதிரியே நானும் ஆசிரியர் திட்டியிருப்பார்,அடித்திருப்பார் என்றுதான் நினைத்தேன்.விசாரித்தபோது தெரிந்த விஷயம் அவளுடைய வகுப்பு ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப் பட்டு விட்டார்.மேலும் கூறினாள்,’’எங்க க்ளாஸ்ல எல்லாரும் அழுதாங்க

நான் பனிரெண்டாம் வகுப்பு படித்தபோது நடந்த்து.தேர்வுக்கு முன் பள்ளி இறுதிநாள்.நான் கணிதப் பிரிவில் படித்தேன்.வரலாறு பிரிவில் உள்ள நண்பணுடன் சேர்ந்துதான் வீட்டுக்கு செல்வது வழக்கம்.அவனை அழைக்க போனேன்.’’எங்க சார் கிட்ட சொல்லிட்டு வரணும்,வா’’ என்றான்.

குறிப்பிட்ட ஆசிரியர் ஒருவரிடம் விடைபெறுவதற்காக மாணவர்கள் மட்டும் சென்றார்கள்.’’போய் வருகிறோம் சார்’’ என்றபோது பலர் கண்ணைக் கசக்கினார்கள்.ஆசிரியருக்கும் கண்ணில் நீர் கசிந்த்து.பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் அழுவதை பார்த்திருக்கிறேன்.ஆசிரியர் ஒருவர் அழுவதை அப்போதுதான் பார்த்தேன்.அவர் வகுப்பில் பெரும்பாலும் யாரும் தோல்வியடைந்த்தில்லை.

மனிதனை மாற்றும் ஆற்றல் அன்புக்கு மட்டுமே உண்டு.பிறந்த குழந்தையும் கொஞ்ச நேரம் யாரும் கவனிக்காவிட்டால் அழ ஆரம்பித்துவிடுகிறது.இன்றைய ஆசிரியர்களுக்கு தேவை அன்பு கொண்ட நெஞ்சம் தான்.வேறு வகையில் அவர் பாடம் சொல்லித் தருவது மனித்த் தன்மையற்ற செயல்.

சரியாக படிக்காத மாணவனை என்னதான் செய்வது?அன்பாலும் திருந்தாத மாணவனாக இருந்தால்?அவன் காலையில் சாப்பிடாமல் இருக்கலாம்,நோயாளியாக இருக்கலாம்,போதுமான அளவு கிரகிக்கும் தன்மை இல்லாமல் இருக்கலாம்,வயிற்றுவலியாக இருக்கலாம்.அவர்களது பிரச்சனையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.வீட்டில் உள்ள கோபத்தை மாணவன் மீது காட்டவேண்டாம்.

-