மேலாளர் ஒருவருக்கும் பணியாளர்கள் சிலருக்கும் தகராறு.ஒரு பணியாளருக்கு ஆத்திரம் அதிகமாக,மேலாளரை ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறி.பல இடங்களில் விசாரித்து ஒரு புலனாய்வு பத்திரிகை நிருபரை பிடித்தான்.மேலாளரின் ஊழலையும் அத்துமீறலையும் விவரித்தான்.
அடுத்த சில நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு நிருபருடன் அலைந்தான்.ஆதாரங்கள் தயாரானது.மூன்று வேளையும் பத்திரிகையாளருக்கு சாப்பாடு,சிற்றுண்டி எல்லாம் ஆனது.அடுத்த வெளியீட்டில் புகைப்பட்த்துடன் மேலாளரைப்பற்றிய செய்தி வந்திருக்க வேண்டும்.ஆனால் வரவில்லை.
இரண்டு,மூன்று பத்திரிகையாளர்கள்-அவர்களும் புலனாய்பவர்கள்-கூடி விவாதித்தார்கள்.ஆதாரங்களுடன் மேலாளரிடம் பேசினார்கள்.பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மேலாளரின் மானம் காப்பாற்றப்பட்டு விட்ட்து.அவருக்கும் குடும்பம் இருக்கிறது(நிருபருக்கு இல்லையா?).புலனாய்வு நிருபர் சில நாட்கள் அலைந்த்தற்காக மட்டும் மேலாளரிம் கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டார்.
எனது நண்பர் ஒருவர் உள்ளூர் பத்திரிக்கை நட்த்தி வந்தார்.பத்தாண்டுகளுக்கு முன்பு! எப்போதும் ஒரு கூட்டம் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும்.அவர்களெல்லாம் நிருபர்கள்.பத்திரிக்கை அதிபர் அவர்களுக்கு சாப்பாடு கூட வாங்கித் தரமாட்டார்.ஊதியம் கிடையாது.நிருபர்கள் ஆசிரியருக்கு எல்லா செலவையும் பார்த்துக் கொள்வார்கள்.புதிது புதிதாக முளைப்பார்கள் இளைஞர்கள்.
தற்போது சென்ற பாராளுமன்ற தேர்தலுக்கு மீண்டும் பத்திரிக்கை முயற்சியை தொடங்கிப்பார்த்தார் நண்பர்.நிருபர்கள் ஒருவர் கூட வரவில்லை.இளம் பத்திரிக்கையாளர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.நண்பர் ஆச்சரியத்துடன் கூறுகிறார்”இப்போதெல்லாம் மாறிப்போய்விட்ட்து” என்னதான் நடந்த்து?’’ஒரு வேளை அவர்களெல்லாம் வலைப்பூ எழுதுகிறார்களோ என்னவோ’’என்றேன்.
உண்மையில் அந்தப் பத்திரிகையாளர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்.கண்ணில் இலட்சிய வெறியும்,தார்மீக கோபமும்,சமூகத்தின் மீது அக்கறையும் உள்ள இளைஞர்களை காலம் விழுங்கி விட்ட்து.பேனா மாற்றத்தை உருவாக்கித்தரும் என்று நம்பியவர்கள் அவர்கள்.கால ஓட்ட்த்தில் காணாமல் போனார்கள்.
செல்போன்கள் போன்று நுகர்பொருட்கள் அவர்களை சிதைத்தன.இரண்டு,மூன்று செல்போன்கள் இன்றைய நடைமுறை.தனக்கு,மனைவிக்கு,குழந்தைகளுக்கு விலை உயர்ந்த சாதன்ங்கள் தேவை.இல்லாவிட்டால் யார் மதிப்பார்கள்?அவன் வீட்டில் யார் பெண் எடுப்பார்கள்? யார் பெண் கொடுப்பார்கள்?
ஒரு அதிகாரியைப் பற்றி இரண்டு பக்கத்துக்கு எழுதுவதன் மூலம் அவனுக்கு என்ன கிடைக்கும்.தவிர,எழுதப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு சமூகம் நன்மையடைந்த்தா,ஆட்சியாளர்களை மக்கள் புறக்கணித்து ஒதுக்கி வெளியேற்றினார்களா அல்லது அரசு வாகனத்தில் பவனி வந்தார்களா என்பது நமக்கு தெரிந்த எளிய உண்மை.
பத்திரிகையாளன் பேரம் பேசாமல் இலட்சியத்துடன் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டானா?ஆனால் முழுதும் அப்படியல்ல!கொஞ்சம் தர்ம்ம் மிச்சமிருக்கிறது.நமக்கு கொஞ்சம் நம்பிக்கை..இதுவும் கடந்து போய்விடும்!
2 comments:
Yes. Let us believe this.. This is the only hope to bring the Real News to the Masses.
Very Intriguing Articles.
http://anubhudhi.blogspot.com/
ஆம்.நம்பிக்கையே வாழ்க்கை,நன்றி நண்பரே
Post a Comment