Sunday, February 6, 2011

வக்கிர ஆண்களால் பெண்கள் படும்பாடு


இன்றைய சூழலில் பணியிடங்களில் ஆண்,பெண் இருபாலரும் நட்புடனோ,நட்பின்றியோ பழகுவது தவிர்க்க முடியாத ஒன்று.உடன் பணி புரிகிறவர்கள் அத்தனை பேரும் நல்ல குணத்துடன் இருப்பார்கள் என்பது சாத்தியமல்ல.வக்கிர ஆண்களிடம் சரியான விழிப்புணர்வின்றி அல்ல்ல்படும் பரிதாபம் பெண்கள் மட்டும் எதிர்கொள்ளும் பிரச்சினை.

பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியிருந்த்து.புதிதாக பணிக்கு சேர்ந்தார்.ஏழெட்டு பேர் மட்டும் பணிபுரியும் இடம்.இரண்டுபேர் மட்டும் பெண்கள்.புதிய ஊர்.பல தகவல்கலுக்கு யாருடைய உதவியாவது தேவைப்படும் சூழ்நிலை.அலுவலகத்தில் இருப்பவர்கள்தான் இத்தகைய நிலையில் உதவ முடியும்.

அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியன் ஒருவன் தாராள குணத்துடன் இருந்தான்.அவளுடைய அதிர்ஷ்டம் பலருக்கும் ஓடி ஓடி உதவிகள் செய்தான்.எல்லா தகவல்களும் அவனிடம் இருந்த்து.அவனுடைய உதவியால் புதிய இட்த்து வாழ்க்கை மிக எளிதாக இருந்த்து.அவளது கணவனுடனும் நண்பனாகி விட்டான்.

சிறிது காலம் கழித்து அவனது நோக்கம் வேறாக இருப்பது அந்தப் பெண்ணுக்கு புரியத் துவங்கியது.அலுவலகத்தில் இருந்த இன்னொரு பெண்ணும் அதை உறுதி செய்தார்.நோக்கத்தை தெரிந்து கொண்டபின் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கவே அவன் எல்லா உதவிகளையும் நிறுத்தி விட்டான்.நிறைய ஆவணங்கள் வேறு அவனிடம் மாட்டிக் கொண்ட்து.

கணவனை விட்டு போன் செய்தால் போனை எடுக்காமல் போக்கு காட்டினான்.சக ஊழியரை விட்டு கேட்டபோது ’’நான் நிறைய செலவு செய்திருக்கிறேன் அந்த பணத்தை கொடுத்தால் கொடுத்து விடுகிறேன்.’’என்றான்.ஒரு வழியாக பணத்தை கொடுத்து எல்லா ஆவணங்களையும் திரும்ப வாங்கினார்கள்.

ஏமாற்றம் கோபம், ஆத்திரம் போன்றவற்றை ஏற்படுத்தி விடுகிறது.அவனுக்கும் அப்படியே.கோபத்தை வேறு வகையில் திருப்பினான்.அந்த பெண்ணைப் பற்றி அவதூறாக பல இடங்களில் பேச ஆரம்பித்தான்.இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறான்.இனியும் பேசுவான்.

திருமணமாகாத பெண்கள் என்றால் இம்மாதிரியான சூழலில் கூடுதல் பிரச்சனை.மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பற்றி அலுவலக ஆட்களிடம் விசாரிக்க வந்தால் வக்கிர ஆண்கள் பேசுவது வேறுமாதிரி இருக்கும்.இது போன்ற காரணங்களுக்காக திருமணம் தடை பட்ட பெண்களும் இருக்கிறார்கள்.

சில பெண்கள் இத்தகைய ஆண்களின் நோக்கம் தெரிந்தே விளையாட்டாக பழகுவதுண்டு.மிரட்டினால் ஓடிப்போய்விடுவார்கள் என்று நினைப்பதுதான் காரணம்.ஆனால் ஆணின் ஆசை நிராசையாகி ஏமாற்றப்படும்போது விளைவுகள் பெண்ணுக்கு எதிராகவே முடியும்.அவதூறு பரப்பலாம்,சில கற்பழிப்பு வரை கூட செல்ல்லாம்.ஏமாற்றத்தால் உருவாகும் உணர்ச்சிகளை உள்ளம் ஏதோவொரு வித்த்தில் ஈடு செய்யவே முயற்சிக்கும்.

-

9 comments:

Sankar Gurusamy said...

It is really True. In today's context, Ladies should be extra cautious in the Offices and their surroundings as the chances of damage to their life is more in our current socity.

Excellent article.

http://anubhudhi.blogspot.com/

shanmugavel said...

நன்றி சங்கர் குருசாமி,

bandhu said...

There is a proverb in the US. There is no such thing like a free lunch!

யார் எந்த உதவி செய்தாலும் கிட்ட தட்ட அதன் பின்னணியில் ஒரு நோக்கம் கண்டிப்பாக உள்ளது! அது எப்போதும் சரியாக இருக்க முடியாது!

shanmugavel said...

ரொம்ப சரி.நன்றி பந்து.

sarujan said...

சொன்து மாதிரி எழுதி விட்டிர்கள் அருமை எனது வாழ்த்துகள்

shanmugavel said...

நன்றி, சாருஜன்

இராஜராஜேஸ்வரி said...

.ஏமாற்றத்தால் உருவாகும் உணர்ச்சிகளை உள்ளம் ஏதோவொரு வித்த்தில் ஈடு செய்யவே முயற்சிக்கும்.

Unknown said...

மனைவி கணவரை சார்ந்து வாழ வேண்டும், அப்போதுதான் குடும்ப வாழ்க்கை சிறக்கும்

Zubair siraji said...

ஏமாற்றத்தால் உருவாகும் உணர்ச்சிகளை உள்ளம் ஏதோவொரு வித்த்தில் ஈடு செய்யவே முயற்சிக்கும்.

இவ்வார்த்தை அழகாக இருக்கிறது