புகழ் பெறுவதற்காக வேண்டியே பதிவெழுதுவதாக சொல்லப்படுகிறது..தமிழ்மணம் முன்னணி வலைப்பதிவுகளில் இடம் பிடிப்பது காரணமாக இருக்கலாம்.இதில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.அதிகம் எழுதுகிறார்கள்.உழைப்புக்கு தகுந்த கூலி கிடைத்தே தீரும்.ஆரோக்கியமான போட்டி இருந்தால் நல்லது.
டிராபிக் ரேங்க்,போட்டிகள் போன்றவை வலைப்பதிவிலிருந்து தற்காலிகமாகவோ,நிரந்தரமாகவோ சில பதிவர்களை ஓய்வெடுத்துக் கொள்ள தூண்டிவிட்ட்தோ என்ற சந்தேகம் எனக்குஇருக்கிறது.சிலர் சண்டைகளால் ஒதுங்கி நிற்கிறார்கள்.
உண்மையில் பதிவர்கள் அத்தனை பேரும் அங்கீகாரத்திற்காகவே எழுதுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை.எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு.தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் பல பதிவர்களும் ஏதோ ஒரு வித்த்தில் பத்திரிகை உலகுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.அளவில்லா சுதந்திரம் இன்னொரு கூடுதல் அம்சம்.
பெரும்பான்மையோர் புகழுக்காக எழுத சிலர் பொழுது போக்காகவும் பதிவுலகில் இருக்கலாம்.சிலர் தங்களது கொள்கைக்காக,லட்சியத்துக்காகவும் எழுதலாம்.ஒருவர் மன உளைச்சலில் இருந்து நிவாரணம் தேடிக்கொள்ள பதிவிட,இன்னொருவர் தனது தொழிலை விரிவுபடுத்த நினைக்கலாம்.ஆக பல காரணங்கள் இருக்கின்றன.
அங்கீகாரம் பெறுவதற்காக மட்டுமே எழுதுபவர்கள் ஒரு கட்ட்த்தில் சோர்ந்துபோய்விடக் கூடும்.அது கிடைக்காத நிலையில்!தொடர்ந்து பத்திரிகைகள்,வாசிப்பு,எழுத்து என்ற வாழ்க்கை முறை கொண்டவர்களால் மட்டுமே தொடர்ந்து பதிவுலகில் சோர்வில்லாமல் இயங்க முடியும்.யார் எழுதினாலும் நான்கு பேராவது பாராட்டினால்தான் கொஞ்சம் நன்றாக இருக்கும்.இல்லாவிட்டால் கஷ்டம்தான்.
வந்தேமாதரம் ச்சிகுமார் புண்ணியத்தில் admaya விளம்பரங்கள்.இதுவும் பதிவர்களை அதிகம் எழுத தூண்டும்.புகழோ,பணமோ ஏதாவது லாபமில்லாவிட்டால் பதிவுலகம் நீடித்திருப்பது கஷ்டம்.பொறாமை,வயிற்றெரிச்சல் இல்லாமல் ஆரோக்கியமான போட்டியால் பதிவுலகம் இயங்கவேண்டும்.
போட்டியில் முந்துவதற்கோ புகழுக்காக உழைப்பதில் தவறில்லை.அதே சமயம் மனைவி,குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குவதும்,உடல் நிலையை பேணுவதும்-குறைந்த்து எட்டு மணி நேர நல்ல தூக்கம்-அவசியம்.
3 comments:
hai vadai
//மனைவி,குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குவதும்,உடல் நிலையை பேணுவதும்-குறைந்த்து எட்டு மணி நேர நல்ல தூக்கம்-அவசியம்.//
இதை நான் வழிமொழிகிறேன்...
நன்றி,தமிழன்,ஷர்புதீன்,சங்கவி தங்கள் வரவு நல்வரவாகுக.
Post a Comment