புதிய தலைமுறை இதழில் எஸ்.ராமகிருஷ்ணன் வாசிப்புக்கு தடையாக உள்ள காரணங்களாக குறிப்பிட்டுள்ள ஒன்று,ரசனையில்லாத குடும்பம்.குடும்பங்களில் வாசிப்பு பழக்கம் இருந்தால் அந்த குடும்பம் நல்லதொரு குடும்பம் தான்.என்னுடைய அனுபவம் ஒன்று நினைவுக்கு வந்த்து.
அந்த பெரியவருக்கு வயது அறுபதை நெருங்கிக் கொண்டிருந்த்து.ரொம்ப திடமான உடலமைப்பு.அந்த வாய்ப்பை எதிர்பார்த்திருந்தவர் போல இருக்க வேண்டும்.அவருக்கு பேசுவதற்கு ஒரு இளைஞன் கிடைத்து விட்டான்.பேச ஆரம்பித்தார்.
”எம்.எஸ்.உதயமூர்த்தி புத்தகங்கள் படித்திருக்கிறீர்களா?”என்று அந்த இளைஞனிடம் கேட்டார்.உண்மையில் அந்த இளைஞனுக்கு யாரென்று தெரியாது.வாரப் பத்திரிகைகள் படிக்கும் பழக்கம்கூட அவனுக்கு இல்லை.அவன் ’இல்லை,அது எதற்கு?”என்றான்.
அவர் சொற்பொழிவை துவக்கினார்.”எம்.எஸ்.உதயமூர்த்தியை படிக்கும் வரை நான் இருட்டில் இருந்தேன்.எனக்கு எதுவும் தெரியாது.செக்குமாடு மாதிரி தின்பதும் அலுவலகத்துக்கு சென்று வருவதுமாக இருந்தேன்.அவரது புத்தகங்களால் என்னிடம் நிறைய மாற்றம் ஏற்பட்ட்து.எனக்கு தன்னம்பிக்கை வந்து நம்மாலும் ஏதாவது சாதிக்க முடியும் என்ற எண்ணம் வந்த்து.போகுமிடமெல்லாம் என் பேச்சுக்கு மதிப்பு இருந்த்து.என் குழந்தைகள் இருவரும் மருத்துவம் படிக்கிறார்கள்.ஒருமுறை என் பையனின் பள்ளி ஆண்டு விழாவுக்கு போயிருந்தேன்.விழா மேடையில் நான் பேசப்போவதாக என் பையனிடம் கூறினேன்.என்பையன்,”வேண்டாம்பா,என்னுடைய நண்பர்கள் கேலிசெய்வார்கள்’’ என்றான்.ஆனால் நான் மேடையில் பேசினேன்,என் பேச்சுக்கு நல்ல மரியாதை.பலத்த கைத்தட்டல்.அதற்குப் பிறகு என் பையனுக்கே என் மீது மரியாதை கூடி விட்ட்து.நீங்கள் ஒரு புத்தகம் வாங்கி படித்துப் பாருங்கள்.இங்கே உள்ள புத்தக்க் கடையிலேயே கிடைக்கும்.நீங்கள் எங்கே போனாலும் உங்கள் பேச்சை எல்லோரும் கேட்பார்கள்.அங்கே நீங்கள் தலைவராக இருப்பீர்கள்.
அவர் பேசியதை விட குறைவாகவே மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.அவர் என்னையும் பார்த்து பேசினாலும் நான் புத்தகம் படித்த்து பற்றியெல்லாம் அவரிடம் நான் சொல்லவில்லை.அந்த இளைஞனும் எனக்கு அதிகம் பழக்கமில்லை.பணிச்சூழலில் தெரிந்தவர் அவ்வளவே!
பெரியவர் போன பிறகு என்னிடம்,’’சார்,இப்போது நான் எம்.எஸ்.உதயமூர்த்தி புத்த்கம் ஒன்று வாங்கலாம் என்று இருக்கிறேன்’’என்றான்.எனக்கு சந்தோஷமாகிவிட்ட்து.இனி அவன் வாசிக்கும் பழக்கத்துக்கு அடிமை!அந்த பெரியவர் மீது எனக்கு மதிப்பு ஏற்பட்ட்து.கடைக்கு போய் இரண்டு புத்தகங்கள் வாங்கி விட்டான்.
அடுத்த நாள் சொந்த ஊருக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு போக வந்தான்.கையில் நேற்று வாங்கிய புத்தகம்.”இருபது பக்கங்கள் படித்தேன்,நன்றாக இருக்கிறது”நானும் நல்லது,தொடர்ந்து படி என்றேன்.
இரண்டுநாள் கழித்து ஊரிலிருந்து வந்தவனிடம் கேட்டேன்.”முழுக்க படித்தாகி விட்ட்தா?’’அய்யோ அதை ஏன் சார் கேட்கிறீர்கள்,என் அப்பா அந்த புத்தகத்தை பார்த்து விட்டு “இதெல்லாம் படிப்பதற்கு பதில் கொஞ்ச தூரம் நடந்தாலாவது உடம்புக்கு நல்லது,இதனால் என்ன உபயோகம் என்று கேட்டுவிட்டார்.அங்கேயே போட்டு விட்டு வந்துவிட்டேன்.
அவனது தந்தை அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.சில அப்பாக்கள் தங்களது குழந்தைகள் சுயமாக சிந்திப்பதை விரும்புவதில்லையோ என்று தோன்றியது. தங்கள் மதிப்பீடுகள் சிதைந்து போய்விடும் ,தன் பேச்சை கேட்கமாட்டார்கள் என்று நினைப்பதுதான் காரணம்.
12 comments:
வணக்கம் அண்ணாச்சி! அருமையான கட்டுரை ஒன்னு போட்டு இருக்கீங்க! நீங்க சொல்றமாதிரி வாசிப்பு பழக்கம் என்பது பழக்கி எடுக்கப்பட வேண்டியது!! நேரமில்லை என்பதெல்லாம் பொய்! சரியான முறையில் நேரத்தை திட்டமிட்டால், தினமும் குறைந்தது ஒரு மணிநேரமாவது வாசிக்க முடியும்! இந்த விஷயத்தில் நாம் வெள்ளைக்காரனை பின்பற்றலாம்!!
பஸ், ரெயின், பார்க் பீச் என எல்லா இடங்களிலும் பேப்பரும் கையுமாகவே இருக்கிறார்கள்! நிறைய படிக்கிறார்கள்!எனது குடும்பத்தில் வாசிப்பு உச்ச நிலையில் உள்ளது! நினைத்துப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது!!
அண்ணே! தமிழ்மணத்தில் உங்களுக்கு நீங்களே ஒரு ஒட்டு போடலாம் அல்லவா? போடுங்களேன்!!
சறப்பான பதிவு. குடும்பவியல் சம்பந்தமான பதிவுகளை தொடர்ந்து இடுங்கள். உண்மையில் சிறப்பாக இருக்கின்றது
அருமையண்ணே அருமை..
தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.
யாவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள் அடங்கியது. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
==>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <==
தம்பி ரஜீவா,நீ சொல்வது உண்மை.வாசிப்பு பழக்கம் உள்ள வீட்டில் நீ இருப்பது சந்தோசம்.
நான் ஓட்டு போட்டு என்ன ஆகப் போகிறது? உனக்கு நன்றி
மிக்க நன்றி ஜனா,தொடர்ந்து செய்வேன்
மிக்க நன்றி ஜனா,கருன்
மிக்க நன்றி தமிழன்
//குடும்பங்களில் வாசிப்பு பழக்கம் இருந்தால் அந்த குடும்பம் நல்லதொரு குடும்பம் தான்//
உண்மை!
பதிவு அருமை!
மிக்க நன்றி ஜீ
Post a Comment