Friday, February 25, 2011

பீதியைக் கிளப்பும் பெற்றோர்கள்



குழந்தைகளைப் பற்றி அவர்களது பெற்றோர் தவிர வேறு யார் கவலைப்படுவார்கள்? ஆசிரியர்களுக்கு அக்கறை இருக்கலாம்.தனது பாட்த்தில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டுமென்று!தற்போது தேர்வுகள் வந்து விட்ட்து.பாழாய்ப்போன கிரிக்கெட்டும்தான்.

பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு மாணவன் வாழ்விலும் வகிக்கும் முக்கியத்துவம் நமக்கு தெரியும். தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனுடனும்,அதிக கவலையுடனும் இருக்கும் நேரமிது.

தங்களால் முடியாமல் போன கனவுகளையும் இனி மீதமுள்ள ஆசைகளையும் மகனோ,மகளோ நிறைவேற்றப்போகிறார்கள் என்ற எண்ணத்துடனே புதிய மாற்றத்திற்கும் தயாராக வேண்டும்.வெளியூருக்கு படிக்க அனுப்ப வேண்டியிருக்கும்,பணம் தயார் செய்ய வேண்டும்.

பெற்றோர்களின் கவலையும் எதிர்பார்ப்புகளும் நியாயமானவை.அதிகப்படியான ஆர்வங்கள் எதிர் விளைவையும் ஏற்படுத்தக் கூடும்.நான் அறிந்த சம்பவம் ஒன்றை கீழே தருகிறேன்.மனதில் கொண்டு மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

தற்போதைய கல்விக் கட்டணங்கள் நடுத்தர வகுப்பினருக்கு கஷ்ட்த்தை கொடுக்கும் ஒன்று.ஏழைகளுக்கு எட்டாக்கனி! ஆனால் ஏழைகளுக்கும் ஆசை இருக்கத்தான் செய்கிறது.கடன் வாங்கியாவது மகனை படிக்க வைக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம்.

அந்த குடும்பத்தை எனக்கு தெரியும்.தாய்,தந்தை இரண்டு பேரும் படிக்கவில்லை.இரண்டு மகன்கள்.ஒருவன் பத்தாம் வகுப்பு,ஒருவன் பனிரெண்டாம் வகுப்பு.சாப்பிடும்போதும்,தூங்கும்போதும் அதே பேச்சுதான்.காலையில் எழுந்த்தும் மகன்களுக்கு பெருத்த கவலையுடன் புத்திமதி தொடங்கிவிடும்.

இன்னும் மூன்று மாதம்தான் இருக்கிறது!பார்க்கத்தான் போகிறேன்.இன்னும் இரண்டரை மாதம்தான் இருக்கிறது நீங்கள் யாரென்று தெரிந்துவிடும்.இப்படி போய்க் கொண்டிருக்கும்.தந்தைக்கோ அப்போதுதான் மகன்களுக்கு புரியும் என்ற எண்ணம்.மேலும் இது தொடர்ந்த்து,இன்னும் இருபது நாள் இருக்கிறது......

குழந்தைகள் பாவம்.அவர்களுக்கு படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை விட மதிப்பெண் குறைவாக வந்தால் அல்லது தோற்றுப்போனால் என்ற அச்சமும் அதையொட்டிய கலக்கமும் ஏற்பட்டு விட்ட்து.மனம் அமைதியிழக்க பனிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கு காதில் குரல்கள் கேட்க ஆரம்பித்தன.யாரும் அவனுடன் பேசவில்லை.அவன் பேசிக் கொண்டிருந்தான்.

வெளியே யாருக்கும் சொல்லாமல் பெங்களூருவில் உள்ள மன நல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள்.தந்தைக்கு அப்போது மருத்துவர்கள் புரிய வைத்தார்கள்.அம் மாணவன் மீண்டு தேர்ச்சிபெற நான்கு வருடங்கள் ஆனது.

சில பெற்றோர்கள் தங்களது குடும்ப கஷ்டங்களையெல்லாம் சொல்லி வைத்தால் மகனோ அல்லது மகளோ புரிந்துகொண்டு நன்றாக படிப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.இதுவும் எதிர்விளைவுகளையே உருவாக்கும்.தவிர,ஒவ்வொருவருக்கும் கிரகிக்கும் திறன்,நினைவாற்றல் போன்றவை வேறுபடும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

-

8 comments:

சக்தி கல்வி மையம் said...

நல்ல விழிப்புணர்வு பதிவு..

shanmugavel said...

நன்றி,கருன்

Anonymous said...

அருமை அய்யா ! பிள்ளைகள் என்ன ரேசில் ஓடும் குதிரைகளா, அவர்கள் மீது பணத்தைக் கட்டி விட்டு ஓடு ஓடு என கவுண்ட் டவுன் செய்து கொண்டிருக்கு. அவர்கள் உயிருள்ள உணர்வுள்ள மனிதர்கள்... கல்வியைத் திணிக்காமல், அவர்களின் ஆழ்மன திறமைகளைக் கண்டுக் கொண்டு பக்குவப்படுத்தி வளார்ச்செய்ய வேண்டும் அல்லவா????

shanmugavel said...

நன்றி,இக்பால் செல்வன் ஆழ்மன திறமைகளை கண்டறிய ஆசிரியர்கள் உதவலாம்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சில பெற்றோர்கள் தங்களது குடும்ப கஷ்டங்களையெல்லாம் சொல்லி வைத்தால் மகனோ அல்லது மகளோ புரிந்துகொண்டு நன்றாக படிப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.இதுவும் எதிர்விளைவுகளையே உருவாக்கும்.

அண்ணே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!! எதையுமே மிகைப்படுத்தாமல் யதார்த்தத்தை புரிய வைப்பதே சிறந்தது!!

shanmugavel said...

தம்பி ரஜீவா,உனக்கு நன்றி

Jana said...

சிற்பாக புhயிவைக்கும் நடை. சமுகத்தை உன்னிப்பாக கவனிக்கின்றீர்கள். அதேவேளை அதிகம் கவலையும் படகின்றீர்கள் என்பது புரிகின்றது.

shanmugavel said...

நன்றி,ஜனா.கவலை-பதிவெழுத ஒரு விஷயம் கிடைத்துவிட்டது.