நண்பர் ஜனா,எனது முந்தைய பதிவுக்கு இட்ட கருத்துரைஇது.”சமூகத்தை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் அதே வேளை அதிகம் கவலையும் படுகின்றீர்கள் என்பது புரிகிறது” என் மீதுள்ள மரியாதையால் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வலைப்பதிவின் தலைப்புக்கு கீழே உள்ள வரிகளைப் படிக்கவும்.ஆம்.கவலையற்றிருத்தலே வீடு; களியே அமிழ்தம்.மகாகவி பாரதியின் சத்திய வார்த்தைகள்.எனது சமூகம் சார்ந்த மதிப்பீடுகள் பாரதி உருவாக்கியவை.
ஜனா சொல்வது சரி.சமூகத்தை உன்னிப்பாக கவனிக்கிறேன்.ஆமாம்.மனிதர்களையும்,முகங்களையும்,கை,கால்களையும்,நடவடிக்கைகளையும் கவனிப்பதும் அசை போடுவதும் எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.பார்த்த்தையும்,கேட்ட்தையும்,என்னை பாதித்தவற்றையும் நான் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு நகைச்சுவை படித்தால் சிரிக்கலாம்.இறுக்கம் குறைந்து மனம் லேசாகும்.தொடர்ந்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க சிலதை கூட்டவோ,குறைக்கவோ வேண்டியிருக்கிறது.அது என்னென்ன என்பதை எனக்கு தெரிந்த்தை சொல்கிறேன்.
கவலை நான் விரும்பும் ஒன்றல்ல! அது ஒரு உணர்ச்சி என்ற அளவில் என்னை சில நேரங்களில் பாதிப்பதுண்டு.மிக விரைவில் மீண்டு விடுவேன்.அதற்கு காரணம் பாரதி.கவலை பற்றிய மகாகவியின் வரிகளை கீழே படியுங்கள்.ஆம்.மகிழ்ச்சியோடு இருங்கள்.எப்போதும்!நன்றி ஜனா!
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?
சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
மனக்குறையென்னும் பேய்,எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது.அதற்கு நிவாரணம் தேடவேண்டும்.கவலையைக் கொல்வோம்,வாருங்கள்,அதிருப்தியைக் கொத்துவோம்,கொல்லுவோம்.
வாருங்கள்,வாருங்கள்,வாருங்கள்,துயரத்தை அழிப்போம்,கவலையைப் பழிப்போம்.மகிழ்வோம்,மகிழ்வோம்,மகிழ்வோம்.
மந்திரங் கூறுவோம்.உண்மையே தெய்வம்,கவலையற் றிருத்தலே வீடு.களியே அமிழ்தம்.பயன்வருஞ் செய்கையே அறமாம்.அச்சமே நரகம்;அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதேசெய்க
என்றுமிங் குளவாம்; சலித்திடாய்;ஏழை
நெஞ்சே!வாழி!நேர்மையுடன் வாழி!
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ!
கவலைப் படுதலே கருநரகு, அம்மா!
கவலையற் றிருத்தலே முக்தி;
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை;-தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு
-
9 comments:
அண்ணே மனசுல கவலையா இருந்துச்சுன்னு, அந்த பாரதியார் கவிதை படிச்சேன்! கவிதை இம்புட்டு நீளமா இருக்கே னு கவலையா இருக்கு!
அண்ணே மனசுல கவலையா இருந்துச்சுன்னு, அந்த பாரதியார் கவிதை படிச்சேன்! கவிதை இம்புட்டு நீளமா இருக்கே னு கவலையா இருக்கு!
ஐயோ அண்ணே நான் சும்மா ஜோக்குக்கு சொன்னேன்! உங்க பதிவு அருமை! அந்தப் பாடலைப் போலவே!
கவலையெல்லாம் போச்சு...
மனக்குறையென்னும் பேய்,எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது.அதற்கு நிவாரணம் தேடவேண்டும்.கவலையைக் கொல்வோம்,வாருங்கள்,அதிருப்தியைக் கொத்துவோம்,கொல்லுவோம்..
ஆஹா அற்புதம் தற்போது நமக்குத்தேவைப்படும் ஒரு முக்கிமான வரி இதுவல்லவா!
தம்பி,அது ஒரே பாடல் இல்லை.பல பாடல்களிலிருந்து எடுத்த வரிகள்.
தம்பி ரஜீவா,உனக்கு நன்றி,பதிவு போடலியா?
கருன்,நன்றி வாத்யாரே
மிக்க நன்றி ஜனா
Post a Comment